Thursday, October 16, 2008

முகமூடிக்கவிதைகள் - 4



இயலாமை

பரிதாபங்களை யாசித்தல்
கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது.

இயலாமைகளை உரத்துச்சொல்வதை
தடுக்கிறது சுயமரியாதை

நடப்பின் இருப்புகளை
உதறவோ உடைக்கவோ முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

7 comments:

anujanya said...

கிருத்திகா,

இயலாமையின் முதல் எதிர்வினை இதுதான். அழகாக வார்த்தைகளில் வெளிக்கொணர்கிறீர்கள். இப்போதுதான் 'முகமூடிக்கவிதைகள் 3' படித்தேன். முதல் கவிதை பிடித்தது. நிறைய எழுதுங்களேன்.

அனுஜன்யா

தறுதலை said...

நன்றாக உள்ளது.

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

MSK / Saravana said...

//இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."//

இதுதாங்க என் இப்போதைய மன நிலை..
:((

MSK / Saravana said...

கொஞ்ச நாளா உங்கள் பதிவு பக்கமே வர முடியல.. கொஞ்சம் பிஸி..

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி அனுஜன்யா... எழுத ஆசைதான்...:)

நன்று தறுதலை...

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க சரவணகுமார்.. கிட்டத்தட்ட எல்லோரும் இத்தகைய காலகட்டத்தை தாண்டிக்கொண்டுதான் இருக்கிறோம்... எல்லா அனுபவங்களையும் பாடங்களாக்கிக்கொண்டால் நிம்மதிகிட்டும்.

Ken said...

கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது

தருவதாயிருக்கிறது

யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

எல்லாருக்குமான ஈகோ தான் காரணம் :)