Friday, October 10, 2008

முகமூடிக்கவிதைகள் - 3



நடைமேடை தூண்களுக்கு

இடயே

தெரியும்

விரைத்த கால்களும்

அதை சுற்றி நின்ற

கால்களில் இருந்த

தயக்கங்களூம்

தரும்

அச்சத்தை

தாண்டியும்

மனம்

நிம்மதித்தது

அவர்

நமக்கு

தெரிந்தவரில்லை

என்பதில்


*******


வாழ்க்கை

மிகவும்

சிக்கலாகித்தான் போனது

வாழ்த்துக்களின்

தடமும்

புரிந்தபோது.




9 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முதல் கவிதை பிடித்திருக்கிறது, கொஞ்சம் வலிக்கவும் செய்கிறது :(

அது சரி, அது என்ன முகமூடிக் கவிதைகள் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சுந்தர். இந்தக்கவிதைகளை பெரும்பாலும் நம் மனிதத்திற்கும் உண்மை நடத்தைக்கும் இருக்கும் இடைவெளியை வெளிச்சமி்டும் உணர்வுகளைக்கொண்டு எழுத எண்ணம். அதனாலாயே இத்தகைய பிரயோகம்.

தமிழ் அமுதன் said...

ம்ம்ம்ம் ..... நிஜம்!!!

ஜீவி said...

//வாழ்க்கை

மிகவும்

சிக்கலாகித்தான் போனது

வாழ்த்துக்களின்

தடமும்

புரிந்தபோது.//

புரியவில்லை..
'வாழ்த்து'க்களின் பின்னால் ஏதாவது
சூட்சுமம் இருக்குமோ?..

"வாழ்வின்
தடமும்
புரிந்தபோது"

என்றால்
பூடகம் இல்லாமல்
புரியுமோ?..

'முகமூடிக் கவிதைகள்'
என்றால், சட்டென்று பொருள் விளங்காமல் இருக்க வேண்டுமென்பது அதற்கான இலக்கணமோ?..

முகமூடி உள்ளே
முகம் புதைந்திருக்கிறமாதிரி
கவிதைக்குள்
கருத்து விதை
புதைந்திருக்குமோ?..

எப்படியிருப்பினும்
புதுமையான முயற்சிகளுக்கு
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்..
போகப்போகப் புரியும்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஜீவன்

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க ஜீவி... சிக்கலான கவிதையோ...உண்மையில் முகமூடிக்கவிதைகல் என்று பெயர் வைத்ததே... ஒரு சில விஷயங்களில் நாம் நினைப்பது ஒன்றாயிருக்கும் ஆனால் அதற்கு நம் எதிர்வினை வேறாயிருக்கும். A controversial between what is an ideal reaction/feeling and how do we actually react/feel. அப்போதெல்லாம் நாம் ஒரு பொது ஜன முகமூடியை அணிந்து கொள்ளுகிறோம் இல்லையா அது போன்ற உணர்ச்சிகளை எழுதும்போது இந்த தலைப்பில் எழுத முயற்சிக்கிறேன்.

--'வாழ்த்து'க்களின் பின்னால் ஏதாவது
சூட்சுமம் இருக்குமோ?..

"வாழ்வின்
தடமும்
புரிந்தபோது"

என்றால்
பூடகம் இல்லாமல்
புரியுமோ?.."----

ம்ம்ம் மற்றவர் புகழும்போதும் வாழ்த்தும் போது கூட சில சமயம் மறைந்திருக்கும் ஆதாய எதிர்பார்ப்புக்கள் புரியும் போது அந்த வாழ்த்தும் புகழ்ச்சியும் சிக்கலாகும் அல்லவா அதைத்தான் சொல்ல வந்தேன்.

இத்தனை விரிவாக வந்து கருத்துக்கூறியது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.... (சமீபத்திய வாசிப்புகள் கவிதை பற்றிய சில புதிய புரிதல்களை தந்திருக்கிறது அதன் விளைவே இந்த கவிதை முயற்சிகள்.. நன்றோ தீதோ நம் உள்ளத்தின் வெளிப்பாடு தானே படைப்பு)

MSK / Saravana said...

முதல் கவிதையின் உண்மையை முகமூடிக்குள் முகம் ஒத்து கொள்கிறது..

கிருத்திகா ஸ்ரீதர் said...

அப்ப தைரியமா இந்த தலைப்பில தொடரலாம்னு சொல்றீங்களா...சரவணகுமார். நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

நெகிழ வைக்கிறது கிருத்திகா..