Thursday, July 31, 2008

அடுத்தவர் உலகம் பற்றிய ஆர்வக்கோளாறு
அந்த மின்சார தொடர்வண்டியின் கூட்ட நெரிசலில் அவள் எனக்கு வித்யாசமாய் தெரிந்த காரணத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போதே நான் இறங்குவதற்கான நிறுத்தம் வந்துவிட்டது. நான் இறங்கும் போதும் அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் இறங்கினேன், அவள் முகத்திலும் ஒரு குழப்பம். ஒரு வேளை நான் ஏன் மீண்டும் மீண்டும் அவளை உற்றுப்பார்க்கிறேன் என்று நினைத்து குழம்பியிருக்ககூடும் ஆனாலும் அவள் வெகு இயல்பாய்த்தானிந்திருந்தாள்.


வழி நெடுக யோசித்துக்கொண்டே வந்தேன் எதனால் அவளெனக்கு வித்யாசமாய்த் தெரிந்தாள்.

பொது மக்கள் ஏறி இறங்கும் பாதைக்கு மறு புரத்தில் உட்கார்ந்திருந்ததாலா.. இல்லை எல்லோரும் தான் உட்கார்ந்திருந்தார்கள்

உடை ஏதாவது வித்யாசமாய் அணிந்திருந்தாளா இல்லை சொல்லப்போனால் மிகச்சாதரணமாய் மஞ்சள் சிவப்பு பார்டர் பாலியிஸ்டர் பட்டுப்புடவைதான் கட்டியிருந்தாள்.

ஏதாவது புதியதாய் கையில் வைத்திருந்தாளா - இல்லை ஒரு சிலரைப்போல் அவளும் பூக்கட்டிக்கொண்டுதான் இருந்தாள்.

ஆங்க்க்க்க் புரிந்து விட்டது துடைத்தெடுத்தார் போல் பிளீச்சிங் செய்யப்பட்ட அவள் முகம், அதில் இருந்த கொஞ்சம் கீரீம் கலந்த முகப்பூச்சு, மெல்லியதாய் இட்டிருந்த உதட்டுச்சாயம். நாகரீகமான கைப்பை, அதிலிருந்து எடுத்து தன் உதட்டுச்சாயத்தை துடைத்துக்கொள்ள பயன்படுத்திய வெட் டிஷ்யூ பேப்பர். இப்போது புரிகிறது இத்தனை அலங்காரங்களோடும் கையில் பூக்கட்டிக்கொண்டும் தரையில் அமர்ந்து அவள் பயணம் செய்த விதம் தான் எனக்கு அவளை வித்யாசமாய் காட்டியிருக்க வேண்டும்.

பெரும் தலைவலி தீர்ந்தது போல் ஒரு நிம்மதி.

ஆனால் அடுத்த நிமிடம் மற்றொரு கேள்வி குடைய ஆரம்பித்தது, அப்படியானல் அவள் யார? பூக்கட்டி வியாபாரம் செய்பவள் இல்லையா, ஆம் என்றால் இத்தனை ஒப்பனை எதற்கு? ஆசைதான் என்று கொண்டால் பிறகு ஏன் அதை எல்லாம் துடைத்து எடுத்தாள்?…(இப்படி மனது கேட்டுக்கொண்டிருந்தாலும் என்னை நானே கடிந்தும் கொண்டேன் இதென்ன பூர்வாஷா சிந்தனை, பூக்காரி ஒப்பனை செய்து கொள்ளக்கூடாதா!).

ஒரு வேளை செல்லுலாய்ட் உலகில் ஏதாவது சின்ன சின்ன வேடங்கள் செய்து வாழ்பவராய் இருக்குமோ பின் ஏன் இந்த பூக்கட்டும் வேலை - ஓய்வு நேரத்தில் செய்யும் இரண்டாவது வேலையாயிருக்கும்,

இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களில் ஒப்பந்த அடிப்படையில் வரவேற்பாளர்களைக்கூட நியமிக்கிறார்களே அது போன்ற வேலையாய் இருக்குமோ இல்லை சிறிதே வயதானவர் போன்ற தோற்றம் உள்ளதே

ஏதாவது காஸ்மெட்டிக் கம்பெனிகளின் விற்பனை பிரதிநிதியாய் இருக்குமோ அப்படியானல் அந்தப்புடவை ஒத்து வரவில்லை

இப்படி கேள்விகள் பலநாட்கள் அவ்வப்போது தலை தூக்கினாலும் மீண்டும் அவளை காணசந்தர்ப்பம் அமையாததினால் அது மெதுவாக மூளையின் வழக்கமான ஞாபகக்குவியல்களில் ஒன்றாகிப்போனது மீண்டும் ஒரு நாள் அவளைக்காணும் வரை.

இந்த முறையும் அப்படியே ஆனால் அவள் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டாள் புன்னகைக்கவும் செய்தாள் எனக்கு மிகவும் கஷ்டமாகிப்போனது. என் உள் மன ஓட்டங்களை அவள் அறிந்து கொள்வாளோ என்று மிகவும் பயமாய் போனது வலுக்கட்டாயமாய் நெரிசலுக்குள் என்னைத்திணித்தபடி அவள் பார்வையில் இருந்து என்னை மறைத்துக்கொண்டேன்.. ஆனால் கேள்விகள் முன்னெப்போதையும் விட மிக வேகமாக அதுவும் விடைகிடைக்கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாத ஆதங்கத்தோடே எழ த்துவங்கியது..

அடுத்த முறை என்ன செய்வேன்..

19 comments:

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா, இதை ஆர்வக் கோளாறுன்னு எப்படி சொல்றது. மனித மனம் புதுசா எதையாவது பார்த்தால் ஆராயத் தோன்றுகிறது. அடுத்த தடவை சந்திக்க நேர்ந்தால் கேட்டுவிடுங்கள். பிரச்சினை தீர்ந்தது:)

சுந்தரவடிவேல் said...

I like this writeup!

தங்கத்தமிழன்ஹாரிஸ் said...

பூர்வாஷா என்றால் என்ன.
என்னக்கும் இப்படி ஒரு பழக்கம் உண்டு. யாராவது புரியாத மொழியில் பேசினால் இது என்ன மொழி என்று அவர்களிடமே கேடு தெரிந்து கொள்வேன் . வித்தியாசமாக தெரியும் ஒவ்வொரு போருல்மிதும் நம் கவம் படிவது இயற்கைதான்

தங்கத்தமிழன்ஹாரிஸ் said...

பூர்வாஷா என்றால் என்ன.
என்னக்கும் இப்படி ஒரு பழக்கம் உண்டு. யாராவது புரியாத மொழியில் பேசினால் இது என்ன மொழி என்று அவர்களிடமே கேடு தெரிந்து கொள்வேன் . வித்தியாசமாக தெரியும் ஒவ்வொரு போருல்மிதும் நம் கவம் படிவது இயற்கைதான்

தங்கத்தமிழன்ஹாரிஸ் said...

பூர்வாஷா என்றால் என்ன.
என்னக்கும் இப்படி ஒரு பழக்கம் உண்டு. யாராவது புரியாத மொழியில் பேசினால் இது என்ன மொழி என்று அவர்களிடமே கேடு தெரிந்து கொள்வேன் . வித்தியாசமாக தெரியும் ஒவ்வொரு போருல்மிதும் நம் கவம் படிவது இயற்கைதான்

பைத்தியக்காரன் said...

பூக்களை கட்டிக் கொண்டிருந்தவர் உங்களை குறித்து என்ன நினைத்திருப்பார்? அல்லது என்னவாக நீங்கள் அவருக்கு காட்சித் தந்திருப்பீர்கள்?

தொடரும் புனைவுகளுக்கு வாழ்த்துகள்

ஆடுமாடு said...

நல்லாயிருக்குங்க.

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்னு தோணுச்சு.

வாழ்த்துகள்.

sury said...

உங்களுக்கு போர் அடிக்கவில்லையென்றால் ஒன்று சொல்வேன்.

மனித மூளையிலே இரு பகுதிகள். இடது பக்கம் அறிவு, தர்க்கம், பொதுவாக.
reasoning and logical ability.
வலது பக்கம் புதுமை விரும்புதல், புதியன நோக்குதல். ( creative thinking )

நம்மில் பலரில் பொதுவாக இரு பகுதிகளும் சமமாக வேலை செய்வதில்லை.
left 40 Right 60 or L 60 R 40. Sometimes R 80 L 20 ( poets, music directors, artists etc)
ஏதேனும் ஒரு புதிய நபரை, பொருளை நாம் பார்க்கும்போது, உடனே நமது
இடது பக்க மூளை இது வரை பார்த்த நபர்களின் /பொருள்களின் உள்ளமைப்புகளுடன்
(இவை ஏற்கனவே பதிவானவை ) அவரை / அதை ஒப்பிடுகிறது. குறிப்பிடும் வகையில் சம்பந்தம்
இல்லையென்றால் தள்ளிவிடுகிறது. வலது பக்க மூளையோ ஏதேனும் ஒரு விழுக்காடு
சம்பந்தம் இருந்தாலும் அதை திரும்பத் திரும்ப புரட்டி பார்க்கிறது. பார்த்ததில் உங்களை
இழுக்கக்கூடிய, கவரக்கூடிய பொருள் ஏதேனும் இருப்பின் இது சாத்தியம்.

பொதுவாகவே சாலையில் போகும்போது ஏதோ ஒருவர் நமக்குத் தெரிந்தவர் அல்லது
உறவினர் போல் இருந்தாலும் அவரைப் பற்றிப் பேசுகிறோம் அல்லவா ? அது இந்த‌
வலது பக்க மூளை அதிர்வுகளின் காரணம் தான். ( impulses from the right brain)

இடது பக்க மூளை ஆதிக்கம் படைத்தோர் ( left brainy people ) இவற்றில்
பெரிதாக ஆர்வம் கொள்வதில்லை.

ஆக, ரயிலில் போகும்போது பார்க்கும் ஒருவரைப் பற்றி நீங்கள் யோசிப்பவர்
என்றால், அது பற்றி ஒரு பக்கம் எழுதுவேண்டும் என நினைப்பவராக இருப்பதால்
நீங்கள் ஒரு creative personality. Mostly right brainy .

ரொம்ப போர் அடித்துவிட்டதா ! ஸாரி !!
ஆன்மீக வாதிகள் ஏதோ பார்த்தவருக்கும் பார்க்கப்பட்டவருக்கும்
ஜன்ம ஜன்மாந்தர பந்தங்கள் இருப்பதாக ரீல் விடுவார்கள். அதிலும் ஒரு
.05 % உண்மை இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

தினேஷ் said...

அடுத்தவரை அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தை ஆழ்ந்த ஆழகானவரிகளால் அடுக்கி அருமையாக அளித்திருக்கிறிர்கள்...

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

தினேஷ்

கிருத்திகா said...

ஆமாம் வல்லிம்மா இதை ஒரு புனைவாத்தான் செய்திருக்கேன்.. ஆனாலும் நம்ம மனசோட உள்மன ஓட்டம்தானே...

கிருத்திகா said...

வாங்க சுந்தர வடிவேல் நன்றி..
தங்கத்தமிழன். அந்த வார்த்தை "பூர்ஷ்வா" என்றிருக்க வேண்டும். தவறுதலாக பூர்வாஷா என்று டைப் செய்துவிட்டேன். நீங்கள் கேட்டதும் தான் தவறு புரிந்தது. :(

கிருத்திகா said...

ஆம் பைத்தியக்காரன் அதையும் தான் அங்கே தொட்டிருந்ததாய் நினைவு... இதை புனைவோட சேர்த்துக்கலாமா!!!.. ஆனாலும் வாழ்த்துக்களுக்கு நன்றி...

நன்றி ஆடுமாடு அடுத்தடுத்த முயற்சிகள்ள வெற்றி கிட்டும்னு நினைக்கறேன்... (எப்படியும் புனைவு எழுதியே தீர்றதுன்னு இருக்கோமில்ல :))

கிருத்திகா said...

சூரி சார் நீங்க சொன்ன போர் அடிக்குமா அதுல ஏதாவது ஒரு விஷயத்தை வைத்துத்தானே பதில் சொல்வீர்கள் அதனால உங்க மறுமொழிய படிக்க ஆவலோட காத்துக்கிடிருக்கற வாசகர்/வாசகிகள்ள நானும் ஒன்னுதான்...நன்றி...

ஜீவி said...

படித்து முடித்தவுடன், பைத்தியக்காரன் அவர்கள் நினைப்புதான் எனக்கும் ஏற்பட்டது..
புனைவு முயற்சிகள் தொடரட்டும்.

பூர்ஷ்வா என்பது ருஷிய மொழிச் சொல். நாம் மத்திய வர்க்க சிந்தனை என்று சொல்கிறோமில்லையா, அந்த மாதிரியான பொருளைத் தருகிற சொல் அது.

கிருத்திகா said...

நன்றி ஜீவி...

தமிழ்நதி said...

எனக்கும் சிலபேரைப் பார்த்தால் போய் கையைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும் போலிருக்கும். ஆனால், அடிப்படை நாகரீகம் என்றொரு பம்மாத்தைக் கற்று வைத்திருக்கிறோமல்லவா... பேசாமல் நகர்ந்துபோய்விடுவேன். ஆனால், அந்த முகம் கொஞ்ச நேரம் மனசில் நிற்கும். அவள்(பெரும்பாலும் அவள்தான்)நதிமூலம் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பேன். சுற்றுச்சூழல் கவனம் இருப்பவர்களுக்கு நன்றாக எழுதவருமாம். உங்களுக்கு இருக்கிறது:)

கிருத்திகா said...

"அடிப்படை நாகரீகம் என்றொரு பம்மாத்தைக் கற்று வைத்திருக்கிறோமல்லவா" உண்மைதான் எத்தனையோ ஏமாற்று வித்தைகளில் இதுவும் ஒன்றுதான்.....

"சுற்றுச்சூழல் கவனம் இருப்பவர்களுக்கு நன்றாக எழுதவருமாம். உங்களுக்கு இருக்கிறது"

:)))

M.Saravana Kumar said...

எனக்கும் எப்போதும் தோன்றும்..
நல்லா எழுதியிருக்கீங்க..
:)

SURY சொன்ன விஷயம் நன்று..

naathaari said...

திருப்பத்தில் வலுவான காரணங்கள் இல்லை

மற்றபடி கிருத்திகா கலக்குங்க