Thursday, June 19, 2008

கந்தர்வ நகரம் (கிராமம்) - பகுதி 2

சுமார் தரை மட்டத்தில் இருந்து 1300 அடி உயரம் வந்ததும் மிகப்பெரும் நிலப்பரப்பு, சுற்றிலும் மரங்கள், மரங்கள், மரங்கள் மற்றும் குத்துச்செடிகள், மருந்துக்கு கூட மனிதர்களோ ஆடு மாடுகளோ இல்லை. மனது சட்டென்று மிகப்பெரும் மவுனத்தில் ஆழ்ந்தது போலானாது. நன்பரின் சோலையை தற்போதுதான் தாயார் செய்துகொண்டிருக்கிறார் சுமார் 60 ஏக்கர் ஒரே தளத்திலும் மேலும் 60 ஏக்கர்கள் மற்ற இரண்டு பள்ளத்தாக்குகளிலும் இருப்பதாகக் கூறினார்.

போகும் வழியில் இரண்டு கிராமங்கள் ஓரோர் கிராமத்திலும் மொத்தமும் 11/12 வீடுகளே எல்லாம் கூரை வேயப்பட்ட தாழ்ந்த வாசல்களுள்ள வீடுகள் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகள் அருகிருக்கும் ஊருக்குத்தான் வரவேண்டுமாம்। நாங்கள் சென்ற இடத்திலும் ஒரு கிராமம் மொத்தம் 12 வீடுகள் சுற்றிலும் மரங்கள் மற்றும் மேகங்கள் மேகங்கள் மட்டுமே காட்டிலாக அதிகாரிகள் கூட ஏதாவொதொரு நாள் மட்டுமே வந்து செல்வதுண்டாம்। இந்த மலயை சோலகிரி என்று அழைக்கிறார்கள்



நன்பர் அங்கே 700 சதுர அடியில் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறார் அங்கு ஒரு குடும்பம் தங்குவதற்கான எல்லா வசதிகளும் செய்து வைத்துள்ளார்। உணவு அந்த கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து அந்த வீட்டில் செய்து தருவதாக ஏற்பாடு.


சுற்றுச்சூழலின் ஓசையற்று காற்று மட்டுமே இரவு பகல் பாராது பேசிக்கொண்டிருக்கும் இதுபோன்ற சூழல் எங்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவத்தை தந்தது। கடைபரப்புவதற்கு மனிதர்களோ கடைகளோ இன்றி பூக்களும், எலுமிச்சையும், சௌசௌ (பெங்களூர் கத்தரிக்காய் என்று சொல்வோமே)-வும், வெங்காயமும் காய்த்து தொங்கும் அந்த வனாந்தரத்தில் யாருமே இல்லையென்றாலும் நமக்கே அருகே யாரோ நிற்பது போன்றதொரு உணர்வு அங்கு வீசும் காற்றும் குளுமையான சூழலும் உணர்த்திக்கொண்டேயிருந்தது.


இரவு முழுவதும் அந்த கிராமத்து ஆட்கள் தப்பு (மேளம் போன்ற ஒரு இசைக்கருவி) அடித்துக்கொண்டே இருந்தார்கள். நன்பரிடம் கேட்டதற்கு கொம்பன் வரும் வழக்கமுண்டு எனவே இவ்வறு சப்தம் எழுப்பாவார்கள் எனவும் இந்தச்சத்தம் கேட்டால் யானைகள் வருவதில்லை என்று சொன்னார் என் இளைய மகனுக்கு தூக்கம் போனது. (அப்பா டிரம்ஸ் அடிக்கலையே யானை வந்துட்டா என்று இரவு முழுதும் கேட்டுக்கொண்டே இருந்தான்).



அதற்கும் 300 அடிமேலே மைசூர் மகராஜா 1917ல் அவர் வேட்டைக்கு வந்தால் தங்கி இளப்பாறுவதற்காக கட்டிய ஒரு சிறு வீடும் அவருடைய குதிரைக்காரர்கள் தங்குவதற்காக கட்டி இப்போது பாழடைந்து இருக்கும் ஒரு கட்டிடமும் உள்ளது.









அந்த முகட்டில் இருந்து பார்த்தால் மைசூர் அரண்மணையும் (வெகு தொலைவில் ஒரு புள்ளி வடிவில் தான்) மிக நீண்ட சரிகை பேப்பர் போன்று ஓடிவரும் காவிரியும் சுற்றிலும் பரந்திருக்கும் பள்ளத்தாக்கும் கண்கொள்ளா காட்சி.






நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மழை வெகு தூரத்தில் தரை இரங்கத்துவங்கியது பின் மெள்ள முன்னேறி எங்களையும் நனைக்கத்துவங்கியது. மழை நின்ற சிறிது நேரத்தில் எதிரே ஆட்கள் கூடத்தெரியாத அளவிற்கு எங்கும் மேகக்கூட்டம் மறக்கமுடியாத அனுபவம்.



இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு வரும்பொழுது அங்குள்ள கிராமத்து மக்களிடம் கொஞ்சம் பேசும் வாய்ப்பு கிடைத்தது (வாகன ஓட்டுநர் மொழிபெயர்த்துச் சொன்னார்).

அவர்கள் சோலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மைசூர் மன்னர்களுக்கு மலை சார்ந்த பொருட்களை கொண்டு செல்வதும் அவர் சார்பாக மலை வளைத்தை பாதுகாப்பதுமே அவர்கள் தொழிலாய் இருந்ததாம். தற்போது அவர்கள் தொழில் மலைக்குள் சென்று, தேன், எடுத்து வருவது, கம்பு (தானியம்), மூங்கில், வெங்காயம் போன்றவற்றை பயிரிடுவது, மூங்கிலால் செய்த கூடைகள் செய்து தளத்திற்கு விற்பனைக்கு அனுப்புவது இவைகள் தாம்। மருத்துவ உதவிக்காக இதுவரை ஒருவர் கூட மருத்துவ மனைக்கு சென்றதில்லையாம்। பிறப்பு இறப்பு எல்லாமே அங்கே தான்।

சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது। இன்னும் தன்னை அகழ்ந்தாராய்ந்து கொள்ள அந்த இடம் மிகவும் ஏதுவானத இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பௌர்ணமி இரவில் அந்த உச்சியில் தங்குவது இன்னும் சுகமான அனுபவமாயிருக்கும் என்று நண்பர் சொன்னதால் அப்படி ஓர் நாள் சீக்கிரமே கை கூடவேண்டும் என்ற எண்ணியபடி மலையை விட்டு கீழிறங்கி மக்கள் கூட்டத்தில் கரைந்து போனோம். பெங்களூருவில் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு மல்லேஸ்வரத்தில் அலுமனா மற்றும் மெஜஸ்டிக் காமத் யாத்ரிநிவாஸ் போன்ற எங்கள் வழக்கமான இடங்களில் ஆஜர் கொடுத்து விட்டு சென்னை வந்தாச்சுங்கோ…

15 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு படங்களும் சூழ்நிலையும்.

jeevagv said...

ஆகா, அருமையாக இருந்தது!
பம்பாய்க்கு அருகே இருக்கும் லோனாவாலாவுக்குச் சென்றதை நினைவு படுத்தியது.
//நன்பரின் சோலையை தற்போதுதான் தாயார் செய்துகொண்டிருக்கிறார்//
திருத்தம் தேவையோ?
//சௌசௌ (பெங்களூர் கத்தரிக்காய் என்று சொல்வோமே)//
சௌசௌ எப்படி விளைந்திருக்கும்? செடியிலா அல்லது கொடியிலா?

காவிரி பார்க்க இனிமையாக இருந்தது. மொத்தத்தில் இப்படிப்பட்ட இடத்திற்குச் சென்று பலகாலம் சென்றுவிட்டதே என ஏங்க வைத்தது!

கிருத்திகா ஸ்ரீதர் said...

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி வடுவூர் குமார்

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க ஜீவா... லோனாவாலா மற்றுமொரு அனுபவம் ஆனால் அது கொஞ்சம் நல்லாவா டெவலப் ஆகிவிட்டது இங்கு மனிதர் நடமாட்டமே ரொம்ப கம்மி..

சௌசௌ கொடியில் காய்த்து தொங்குகிறது (நான் முதன் முதலாக இப்போது தான் பார்த்தேன்)

ஹீ ஸ் டெவெலப்பிங் த பார்ம் நௌ என்று சொல்ல வந்தேன் மொழியில் கவனம் செலுத்தவில்லையோ....

jeevagv said...

//இங்கு மனிதர் நடமாட்டமே ரொம்ப கம்மி..//
அது இன்னமும் எதிர்பார்ப்பையும் ஆவலையும் அதிகரித்திருக்கும்!

sury siva said...

//சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது।//

இறையொன்று உண்டென எல்லோரும் சொல்லிடினும் அவனை எப்படி ஒவ்வொருவரும்
உணர்கிறார் என்பது அவரவர் நம்பிக்கை.
நம்பிக்கை என்பது அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம்.
நம்பிக்கை என்றால் என்ன என ஒரு வகுப்பில் சொல்ல நேரம் கிடைத்தது.
இதை belief என்றும் faith எனவும் வெவ்வேறு நிலைகளில்
காண்கிறோம். சொல்கிறோம்.
What is primarily absorbed from parents, teachers and leading members of
one's social group is known as belief. As 'belief ' enters into one's inner
consciousness and gets integrated into one's intellect, the same " belief "
becomes " faith "
வெவ்வேறு சமூக அமைப்புகள் வெவ்வேறு நம்பிக்கைகளை அடித்தளமாகக்
கொண்டபோதிலும் இவ்வெல்லா நம்பிக்கைகளையும் இணைக்கும்
தளம் ( u may call it as CPU = central processing unit ) "மிகவும் சூட்சுமமான இடம்"
வெறும் பூஜியம் தான். "அந்தப்பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப்புரிந்து கொண்டால் அவன் தான்
இறைவன் "
மேலும் இது பற்றி விரும்பிடின் படிக்க‌
http://vazhvuneri.blogspot.com
வாருங்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"What is primarily absorbed from parents, teachers and leading members of
one's social group is known as belief. As 'belief ' enters into one's inner
consciousness and gets integrated into one's intellect, the same " belief "
becomes " faith ""

ரொம்பவும் அருமையான விளக்கம். முன்பெல்லாம் கேள்வி கேட்காது எதையும் ஒத்துக்கொள்ளும் பக்குவம் இருந்ததில்லை அதுதான் அறிவின் விஸ்தீரணம் என்று கூட பிதற்றலாய் எண்ணியதுண்டு ஆனால் இப்போதுதான் மெள்ள மெள்ள புரிகிறது கேள்விகளற்ற அகச்சூழலே மெய்தேடலுக்கு உரித்தான களம் என்று அந்த கேள்விகளற்ற அகச்சூழல் belief என்பது faith என்ற உருமாற்றம் அடையும் போது தானோ.... மிக்க நன்றி (belief/faith - இரண்டுக்குமான தமிழ் அர்த்தம் நம்பிக்கை என்று தான் வருகிறது ஆனால் எத்துனை நுட்பமான வித்யாசத்தை தன்னுள் கொண்டுள்ளது - இது பற்றி தங்கள் பார்வையை அனுபவத்தை சொல்லுங்களேன்)

sury siva said...

krithika said:

//belief/faith - இரண்டுக்குமான தமிழ் அர்த்தம் நம்பிக்கை என்று தான் வருகிறது ஆனால் எத்துனை நுட்பமான வித்யாசத்தை தன்னுள் கொண்டுள்ளது - இது பற்றி தங்கள் பார்வையை அனுபவத்தை சொல்லுங்களேன்)//
thiruchendru le
நடந்த ஒரு அனுபவமே நினைவுக்கு வந்தது.
எழுதப்போனேன். இரு பக்கங்களுக்கு மேல் வந்து விட்டது.
உங்கள் பொறுமையை சோதிப்பது சரியாகாது.
சற்றே காத்திருங்கள்.
என் பதிவுகள் ஒன்றில் போடுகிறேன்.
" என்றோ நடந்த கதை " எனும் தலைப்பிலே.
அதுவரை ( எனது BORE க்கு)
ஒரு Break.

subbu rathinam.
thanjai.
ப்ரேக்கின் போது நீங்கள் பார்க்கவேண்டியது
http://vazhvuneri.blogspot.com

கிருத்திகா ஸ்ரீதர் said...

"சற்றே காத்திருங்கள" பெரியவங்க சொல்லீட்டீங்க காத்திருக்கிறேன்...

sury siva said...

நான் சொல்லியவாறு 25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி வழியாக‌
belief, faith
என்ன எனச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
சற்று நீளமாக அமைந்துவிட்டதால், எனது பதிவினில் போட்டிருக்கிறேன்.
வந்து படித்து தங்கள் மேலான கருத்தைச் சொல்லுங்கள்.

http://arthamullavalaipathivugal.blogspot.com

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

ஆடுமாடு said...

கிருத்திகா, நல்ல அனுபவம்.

பாபநாசம் மலைக்கு மேல குள்ராட்டி என்ற இடம் இருக்கிறது. எட்டு மாத கோடையில் ஊரிலிருந்து மாடுகளை இங்குதான் மேய்க்க போவார்கள்.

மாட்டுக்காரகள்/தேனெடுக்க வருபவர்கள் தவிர, மனித நடமாட்டம் கிடையாது. இதை படித்ததும் அதுதான் ஞாபகம் வந்தது.

வாழ்த்துகள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கே வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி தனியே சில காலம் வசித்து வந்ததாகவும் தற்போது அங்கேயே ஜீவ சமாதி ஆகிவிட்டதாகவும் கூறி அவர் வாழ்ந்த சிறு குடிசையை காணச்செல்லவும் சிலர் வருவதுண்டு.. அந்த இடம் தானே...

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம். எல்லாரும் இந்த மாதிரி இடத்துக்குப் போய் வந்து எழுதுவீங்களாம் . நாங்க படிப்போமாம்.:)
உங்க எழுத்துஅந்த மேகங்களீடையே அழைத்து சென்று விட்டது. நன்றி கிருத்திகா. வெகு இயல்பா படங்களும் எழுத்து நடையும்.

anujanya said...

கிருத்திகா, நல்ல பதிவு. பெங்களூரைச் சுற்றி அத்தகைய ஏகாந்தமான இடங்கள் பலவுண்டு. உங்கள் எழுத்தில் எங்களுக்கும் அங்கு சென்ற எண்ணம் ஏற்பட்டது.
வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

தினேஷ் said...

அழகான இயற்கை புகைபடங்கள், அதன் சுழ்நிலையை சரியாக விளக்கும் வரிகள், ஆய்வுகள் என்று அனைத்தையும் நன்றாக தொகுத்து பதித்திருக்கிறிர்கள்...

தினேஷ்