Tuesday, April 22, 2008

இரண்டல்லாதது.


பொய்-வாய்மையோடும்
இன்ப-துன்பத்தோடும்
சுக-துக்கத்தோடும்
பகலிரவோடும்
சந்திர-சூரியனோடும்
ஆண்-பெண்ணோடும்
இரண்டோடே வாழும்
த்வைதமான வாழ்க்கையில்
இரண்டல்லாத பிரம்மம் தேடி
அத்வைதம் காணும் வழி
உண்மையோடு உறவாடும்
உன்னதமான வாழ்வென்ற

பால பாடம் கற்றுக்கொள்ள
ஆயுளில் பாதியானதே….

13 comments:

jeevagv said...

பரவாயில்லேயே, பாதிதானே...
பலருக்கு பலபிறப்புகள்...
மாதொரு பாதியாய்,
மதியொரு பாதியாய்
கொண்டவன்,
ஆதியானவனோடு

ஜோதியாவது எந்நாளோ!

ரசிகன் said...

அவ்வ்வ்வ்வ்.,.. தத்துவம் தத்துவம்:))))

நல்லாயிருக்கு:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

"ஆதியானவனோடு
ஜோதியாவது எந்நாளோ" மிக நல்ல வரிகள் ஜீவா...... ஒன்றான ஜீவன்தானே அதை உணர்வதுதான் எந்நாளோ என்றும் கொள்ளலாமல்லவா...

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரசிகன்.. நன்றி..ரொம்ப கடன் பட்டிருக்கேன்..(இத்தகைய பின்னூட்டத்திற்கு)

பாச மலர் / Paasa Malar said...

சில கருத்துகள் ஒத்துப்போகவில்லை எனக்கு..ஆனாலும் கவிதை நன்று கிருத்திகா..

தினேஷ் said...

உண்மை உணர்த்தும் உயர்வான கவிதை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

ஜீவி said...

//உண்மையோடு உறவாடும்
உன்னதமான வாழ்வென்ற
பால பாடம் கற்றுக்கொள்ள
ஆயுளில் பாதியானதே….//

மிக இலகுவாக இந்த இடத்தில் உங்கள் முத்திரையைப் பதித்து விட்டீர்கள்... தி.தி.ச. தொடரில்
இதையெல்லாம் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. எழுதவில்லை என்றால், தொடரும் முழுமை பெறாது என்பதும் உண்மை.

sury siva said...

அசைவதும் அவனே
அசையாதிருப்பனும் அவனே
இலதும் அவனே ஈயும் பொருளெலாம் அவனே
உளதும் அவனே உணர்வும் அவனே
ஒன்றும் அவனே ஒன்றுமில்லை எனும்
பூஜியமும் அவனே பூரணமும் அவனே
எண்ணியோர் மனதில் ஏகமாய் நிற்பதும் அவனே.

அவன் என் ஆன்மாவில் உறைந்த பின்னே
ஆயுள் என எனக்கு ஒன்று உண்டா என்ன ?

சுப்பு ரத்தினம்
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல கவிதை கிருத்திகா!

//த்வைதமான வாழ்க்கையில்
இரண்டல்லாத பிரம்மம் தேடி
அத்வைதம் காணும் வழி//

சூப்பர்!
பிரம்மம் ஒக்கடே-ன்னு பாட்டு! நீங்களும் இரண்டல்லாத பிரம்மம்-னு சொல்லுறீங்க!

சரி அது என்ன
பொய்-வாய்மையோடும்
ஆண்-பெண்ணோடும்
ஒப்புக்க மாட்டோம்! ஒப்புக்க மாட்டோம்! :-)))

தமிழ் said...

/பால பாடம் கற்றுக்கொள்ள
ஆயுளில் பாதியானதே…./

/இறைவன்தான் என்னைக்கேட்டான்
எப்படி வாழ்ந்தாய் என்று

இறைவனை நானும் கேட்பேன்
எப்போது வாழ்ந்தேன் என்று/

மு.மேத்தாவின் வரிகள்

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஜீவி பரஸ்பரம் கற்றுக்கொள்வதுதானே அழகு.
வாருங்கள் சூரி.. உண்மைதான் சித்தத்தில் அவன் இருந்தால் சிவனே என்றிருக்கலாம் தான்.. ஆனால் எங்கணம் என்பதுதானே வாழ்க்கையில் போராட்டமே...

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க கே.ஆர்.எஸ் முதல்முறையா வந்திருக்கீங்க நன்றி.. என்னசெய்ய பல விஷயங்கள் வேண்டுமோ வேண்டாமோ கூடவே வந்துகொண்டுதானே இருக்கு.

Kavinaya said...

//பால பாடம் கற்றுக்கொள்ள//

இது பாலபாடமாத் தெரியுதா உங்களுக்கு? அப்படின்னா நீங்க எங்கயோ போய்ட்டீங்க :)

//ஆதியானவனோடு ஜோதியாவது//

அழகாக சொன்னீங்க, ஜீவா.