Friday, April 18, 2008

கைகூடா தியானம்




குரங்கை நினையாது
மருந்தைக் குடியென்றார்
குப்பி திறக்குந்தோரும்
குரங்கின் நினைவு

உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது

விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு

18 comments:

பாச மலர் / Paasa Malar said...

கடைசி வரிகள் நறுக்..நச்..

ரசிகன் said...

//உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது

விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு//

ஹா..ஹா.. கைகூடலைன்னு அர்த்தமில்லை,இன்னும் பயிற்ச்சி போதவில்லைன்னு அர்த்தம்,..

நான்கூட எதையும் நினைக்காமலிருக்க முயற்ச்சி செஞ்சு,எதையும் நினைக்காமலிருக்கனும்ன்னே மறந்துட்டேன்:P.

எண்ணங்கள் எழலைன்னா நாம வாழலைன்னு அர்த்தம். அதனால எண்ணங்களை கட்டுப்படுத்த மட்டும் முடியும். பயிற்ச்சியின் மூலமா. எதுவும் உடனே கைவரணும்ன்னு நினைக்க முடியாதில்லையா?

சென்ஷி said...

:O))

ஜீவி said...

உங்கள் குறுங்கவிதை மனத்தைப் பற்றி நிறைய எழுதத் தூண்டியிருக்கிறது.
நன்றி.

தினேஷ் said...

ஆழமான வரிகள்...

தினேஷ்

jeevagv said...

நன்றாக இருந்தது!

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி மலர், சென்சஷி, தினேஷ்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்ன செய்ய ரசிகன் கற்றுக்கொண்டே இருக்க வேண்டியது தானே.... அப்புறம் ஒரு விஷயம்.. எண்ணங்களை கட்டுப்படுத்துவதை விட அதை வேடிக்கை பார்ப்பதே மிகச்சிறந்த தியானம் அது தானே ஓரிடத்தில் வெற்றிடமாகும் என்று கூறக்கேள்வி.... பார்க்கலாம்... தொடர்ந்து ஓடுவோம் ஒரு நாள் எல்லைக்கோடு வராமலா போகும்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஜீவி.. "குறுங்கவிதை" வார்த்தைப்பிரயோகம் அழகாக உள்ளது. நன்றி...

ஜீவா... ரொம்ப நன்றி....

கபீரன்பன் said...

வெகு நேர்த்தி. படித்ததும் எனக்குத் தோன்றியது

//உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது//

உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
பார்க்குந்தோறும்
குரங்காய் போனது மனது
:))

வல்லிசிம்ஹன் said...

இன்று கூட ஒருவர் சொன்னார். மனத ஓட விடுங்கள்
கடிவாளம் போட வேண்டாம்.
இதுதான் எனக்குப் பிடிக்கிறது. ஒன்றுமே நினைக்கக் கூடாது என்றால் மூச்சு விடுவதை நிறுத்து என்று சொல்வது போல இல்லையா கிருத்திகா.

உங்கள் வார்த்தகளில் உண்மை தான் சுவாசிக்கிறது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி கபீரன்பன்.. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுமென்பார் அதுபோல் அந்த கபீர்தாசர் பெயர்கொண்டதாலா எதிர் கவி எளிதில் வருகிறது. இது தான் தங்கள் பெயரா அல்லது அந்த மகாகவியின் மேல் உள்ள காதலால் பிறந்த பெயரா....

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப சரியா சொன்னீங்க வல்லிம்மா..மூச்சு விடுவதும் மனது ஓடுவதும் ஒன்றுதானாம் மூச்சை கவனித்தால் மனது லயத்தில் வீழுமாம்.. அதுக்குத்தான் பெரியவங்க பிராணயாமமும் சூரிய நமஸ்காரமும் பண்ணச்சொன்னாங்க.. நம்ம எல்லாத்தையும் விட்டு ஓடி வந்துட்டு இப்ப வாலைப்பிடிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்...

King... said...

நல்லது...

King... said...

ரசிகன்...said...

/////உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது

விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு//

ஹா..ஹா.. கைகூடலைன்னு அர்த்தமில்லை,இன்னும் பயிற்ச்சி போதவில்லைன்னு அர்த்தம்,..

நான்கூட எதையும் நினைக்காமலிருக்க முயற்ச்சி செஞ்சு,எதையும் நினைக்காமலிருக்கனும்ன்னே மறந்துட்டேன்:P.

எண்ணங்கள் எழலைன்னா நாம வாழலைன்னு அர்த்தம். அதனால எண்ணங்களை கட்டுப்படுத்த மட்டும் முடியும். பயிற்ச்சியின் மூலமா. எதுவும் உடனே கைவரணும்ன்னு நினைக்க முடியாதில்லையா?/////


இவர் உண்ணையில் என்ன தொழில் செய்கிறார்...:)))

இராவணன் said...

இயாலாமை நன்றாக வெளிபட்டுள்ளது. வாழ்த்துக்கள்

கையேடு said...

இருபது பெரும்புத்தகங்கள் எழுதினாலும், புறந்தள்ளிவிட்டு வெளியேவரும் கருப்பொருளைக் காண முடிகிறது கடைசி இரண்டு வரிகளில்.
உங்க தேடலும் ரொம்ப நல்லா இருக்கு.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க இலக்குவண் நன்றி.
ஆமாம் கையேடு. சத்தியம் எப்போதும் மிக எளிதாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் என்று சொல்வார்கள்... நன்றி.