Tuesday, January 8, 2008

பால்ய நகரங்களின் மீதான என் மறுபார்வைகள்


மூளையின் ஞாபகக்குவியல்களில்
முகங்களுக்கான பெயர்களைத்
தேடித்தேடி அலைந்த வேளையில்
இருப்பின் தொடர்புகள் அறுந்துபோனது

நிஜங்களின் தொடர்பில்லாத
சுவடுகளின் மெய்யிருப்பு – என்
தேடுதல்களுக்கான வேட்கையில்
துணை செய்ய மறுத்தது

எழுத மறந்த கவிதைவரிகளில்
தொலந்துபோன உணர்வுகளாய்
தொடர்பில்லாத் தேடல்கள்
அர்த்தமற்றதானது

தேடல்களின் கணங்கள்
விடுபட்ட அந்நிமிடம் மட்டுமே
முழுமையாய்
இருப்புடன் ஒன்ற முடிந்தது


மீண்டும் புதியதாய்
என் ஞாபகத்திவலைகள் – இம்முறை
பெயர்களோடோ – இல்லை
முகங்களோடோ இணையாது
வெறும் இருப்பினோடு மட்டுமே

இனி தொடர்புமை இல்லாத
என் தேடல் வழிகளில்
அவ்வப்போதய இருப்புகளே
சுவைகளாய்.

3 comments:

தினேஷ் said...

நல்ல தரமான தமிழில் நல்லதோர் கவிதை...

//எழுத மறந்த கவிதைவரிகளில்
தொலந்துபோன உணர்வுகளாய்
தொடர்பில்லாத் தேடல்கள்
அர்த்தமற்றதானது//

அர்த்தமுள்ள அருமையான அழகான வரிகள்...

தினேஷ்

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு கிருத்தி

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி.. ஆடுமாடு.. கூடவே ரெண்டு கவிதை போடவா வேண்டாமான்று ஒரு யோசனை.. உங்க பின்னூட்டத்தினால தைரியமா போட்டாச்சு.. (ஏண்டா பின்னூட்டம் இட்டோம்னு வருத்தமா இருக்கா)