கேள்விகள் ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பித்து விடும் அதற்கான் முஸ்தீபுகள், சில சமயம் மூக்குகூட அரிக்க ஆரம்பித்து விடும். நம் கேள்விக்கான முழு வடிவம் கிடைக்கும் வரையிலான நேரங்கள் மிகவும் சோதனையானவை. உள்ளே ஆழ் மனதில் தொக்கி நிற்கும் அந்த கேள்வி சில சமயம் புகையாய் மட்டுமே தோன்றும். தொடர் தேடல்கள் மூலமாகவோ, அல்லது நினைவுச்சங்கிலியின் பின்னோக்கிய பயணங்களின் மூலமாகவோ, அல்லது எதுவும் முயன்று திருப்தி அளிக்காத கண்டுபிடிப்புக்களின் கடைசியில் வாளாயிருப்போம் என்று மனதை வேறு திசை திருப்பிய கணங்களிலோ அந்த கேள்விகள் பளிச்சென தோன்றும். சில சமயம் புறக்கணிக்கக்கூடியவையாய் இருந்தாலும் பல நேரங்களில் பதில் தேடக்கூடியதாகவே இருக்கும். அந்த பதில்கள் என்னையோ இல்லை யாரையோ கூட சுற்றியிருக்கலாம்.
மனிதம் பற்றிய என் விழிப்புணர்வுகளுக்கு பசியெடுக்கும் போதெல்லாம் நான் ஏதாவது உண்ணத்தந்தே ஆகவேண்டும் எனும்போது எனக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் சிற்றுண்டி (உப்புமா, தோசை போல) கேள்விகள் மட்டுமே. என் முன்னிற்கும் கேள்விகளுக்கான விடைகள் மிகத்தொலைவிலோ அல்லது எனக்குள்ளேயோ குவிந்து கிடக்கும் ஆனாலும் எடுத்து உண்ணும் அந்த பசி மிகுந்த கணங்கள் மிகவும் சுவாரசியமானவை.
அந்த சுவாரசியத்தை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.. அவ்வப்போது என் கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இணைந்து தேடலாம் அதற்கான பதிலை. உடன் பயணிக்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

14 comments:
:) :)
வினையூக்கி.. நீங்க திட்டரதாயிருந்தா வார்த்தைகளால் திட்டலாம்..இப்படி புரியாதமாதிரி திட்டினா ஒரு சுவாரசியம் இல்ல...
மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல், நாகரிகத்தின் நசுக்களில் மனிதனே வளைந்து கேள்வியாகி போன இந்த தருனத்தில் இது போன்ற பதிவுகள் மிகமிக அவசியம்...
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்!
தினேஷ்
<< நம் கேள்விக்கான முழு வடிவம் கிடைக்கும் வரையிலான நேரங்கள் மிகவும் சோதனையானவை. உள்ளே ஆழ் மனதில் தொக்கி நிற்கும் அந்த கேள்வி சில சமயம் புகையாய் மட்டுமே தோன்றும். >>
ம்ம்ம் இது போல எனக்கும் தோன்றியுள்ளது.... அதற்குத் தான் அந்தப் புன்னகை...
திட்டு எல்லாம் இல்லீங்க... சரி முதலில் ஒரு புன்னகைப் பின்னூட்டம் போட்டுட்டு சாவகாசமாக அடிக்கலாம் என்று இருந்தேன்.
<<
அவ்வப்போது என் கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இணைந்து தேடலாம் அதற்கான பதிலை. >>
கேளுங்க ...விடைகளைத் தேடலாம்...
எம்.ஆர்.காப்மேயர் படித்திருக்க்கிறீர்களா? கேள் என்றே ஒரு அத்தியாயம் எழுதி இருப்பார்....
கேள்விகள்தான் தேடலின்,அறிவின் ஊற்றுக்கண்....
நன்றி அறிவன்..
எனக்கு அவரின் எழுத்துக்களோடு பரிச்சியம் இல்லை.. அரிமுகப்படுத்தியதற்கு நன்றி.. படித்துவிட்டு பேசலாம்
“மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல், நாகரிகத்தின் நசுக்களில் மனிதனே வளைந்து கேள்வியாகி போன இந்த தருனத்தில்” ம்ம்ம் மிகச்சரியான வார்த்தைகள் நன்றி தினேஷ்
"கேளுங்க ...விடைகளைத் தேடலாம்….."புரிதலுக்கு நன்றி வினையூக்கி
இணைந்தே தேடலாம்..கூட்டு முயற்சியில் விடைகள் கிடைக்கும்..
தங்கள் வரவிற்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி பாசமலர்,
//படித்துவிட்டு பேசலாம்//
படிப்பதற்கு முன்னும் பேசலாம் மேடம்..
:-)
நச் கதைப் போட்டிக்கு கதை அனுப்பலியா?
நன்றி.. நான் ஏற்கனவே அனுப்பியாச்சு..
Post a Comment