இன்று காலை எழுந்தது முதலே ஒரு எண்ணம்
உன்னோடு எனக்கான நாள் இதென்று,
சன்னலின் தக்கை கதவுகளை
திறந்து வைக்கச்சொன்னேன்
நொடிக்கு, நிமிடத்திற்கு பின் மணிக்கொருதரம்
தலைநிமிர்ந்தேன்.. நீ
வந்துவிட்டாயா என்று பார்பதற்கு
அலுவல் முடியும் நேரம் வந்ததும் – எனக்கு
ஆயாசம் வந்தது – நீ
என்னோடு இன்றில்லை என்று…
உண்டியலுக்குள் இருக்கும் சேமிப்பாய்
அடுக்கு மாடி குடியிருப்பின்
கம்பளியாய் போர்த்திய சுவர்களுக்குள்..
கேட்கும் உன் சப்தம்..
இரவு உணவிற்கும்…
இன்றைய வீட்டுப்பாடங்களுக்கும் மத்தியிலுமான
உன் வரவில் எனக்கத்தனை மகிழ்சியில்லை – என்று
மனதுள் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தால்…
ஆயிரமாயிரம் வைர ஊசிகளின் ஜொலிப்போடு
நீ தரையிரங்கிக் கொண்டிருக்கிறாய்..
நன்றி…
நான் என் வாகனம்…நீ என
நமக்கான இந்நேரம் தொடங்கிவிட்டது…
7 comments:
இது கவிதை மழை - நாகூர் இஸ்மாயில்
ஆஹா கிருத்திகா என்னைய வயசானவன்னு சொல்லிட்டீங்களே. நீங்க தப்பான 'ப்ளாக்'குக்கு வந்துட்டீங்க என்னோட இன்னொரு 'ப்ளாக்' இருக்கு இங்க வாங்க
\\ஆயிரமாயிரம் வைர ஊசிகளின் ஜொலிப்போடு
நீ தரையிரங்கிக் கொண்டிருக்கிறாய்..
நன்றி…
நான் என் வாகனம்…நீ என
நமக்கான இந்நேரம் தொடங்கிவிட்டது… \\
அருமை!
மழையின் வரவை ஆவலோடு எதிர் பார்த்தீர்கள் போலிருக்கிறது.......
ரசித்தேன் உங்கள் மழை ரசனையை!
திவ்யா உங்கள் வாழ்த்துக்கும், வரவிற்கும் நன்றி... தங்கள் தொல்லை பேசி(மன்னிக்கவும் தொலைபேசி) தொட அருமை...
மழைக்கான எதிர்பார்ப்பை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
அருமையான கவிதை வரிகள்.
அழகான ஒரு அழகுக்காக ஒரு அழகின் எதிர்பார்ப்பை
அந்த அழகு நிறைவேற்றியதில் ஒரு அழகு இருந்தது....
சூப்பர்......
வாங்க ரங்கன்... எத்தனை "அழகு".. நன்ரி மீண்டும்
Post a Comment