Thursday, November 1, 2007

சுய அறிமுகம்

என்னை எழுதத்தூண்டிய தமிழ் வலைப்பக்கங்களுக்கும், இடுகைகளுக்கும், அதன் பதிவர்களுக்கும்…. என் வணக்கம்…

எதற்கெடுத்தாலும் தனக்கென ஒரு கருத்துண்டு என தலையில் இறகு சொருகிய கூட்டமொன்றுண்டு, அதிலே நானும் ஒரு அங்கம்। எது செய்தாலும் எனக்கென ஒரு தனித்துவம் உண்டு என்னும் எண்ணமும் அதிலுண்டு, என்ன செய்ய? நாம் கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் பிறந்து விட்டோம், நம் தனிப்பட்ட எண்ணத்திற்கு தடை விதிப்பார் யாருண்டு. அடைந்து விட்ட சிகரங்கள் சில உண்டு, ஆனாலும் தொட்டுப்பார்க்க துடிக்கும் முகடுகளும், சிகரங்களும் பல உண்டு என்பதுதானே வாழ்கை சுவாரசியத்தின் ரகசியமே. என்னை நடத்திச்செல்லும் நடைவண்டி அதுவே.

சில சமயம் நான் சமயவாதி, சில சமயம் நான் இலக்கிய வாதி சில சமயம் நான் தொழிற்சங்க வாதி, சில சமயம் நான் முதலாளி, என நான் ஒரு பன்முகவாதி ஆனாலும் எப்போதும் உண்மைக்கு மட்டுமே அருகிருக்கும் ஒரு பிடிவாதக்காரி, அதனாலேயே பல சமயம் நான் தனித்து போராடும் ஒரு போராளி. என் போர்கள் எப்போதுமே தனிமனித உணர்வுகளோடு மட்டுமே ஏனெனில், சீர் செய்யப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள் சமன் செய்யப்பட்ட சம்பவங்கள் தானே.

எனக்கென பொய்யான முகமூடியோ, கற்பனை செய்யப்பட்ட உணர்வுகளோ இல்லை, நான் பேச முற்படுவதெல்லாம், இன்று பற்றி மட்டுமே, நாளை நாம் நடந்து செல்லும் போது சீர் செய்யப்படும்।

கேட்கின்ற காதுகள் இருந்தால் மட்டுமே, பேசுகின்ற சப்தங்களுக்கு, உயிருண்டு, நான் பேச உங்கள் காதுகளைத்தாருங்கள், விமரசனங்களுக்கு நானும் விலக்கல்ல………. உங்களில் ஒருத்தி….

26 comments:

கானா பிரபா said...

வாங்கோ வாங்கோ

வரவேற்கிறேன்

Baby Pavan said...

வாங்க வாங்க...கலக்குங்க...வாழ்த்துக்கள்

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!!

கோவி.கண்ணன் said...

ஆக்கமும், ஊக்கமும் சிறந்து மென்மேலும் வளர்வீர்களாக !

பதிவுலகில் உங்களை வரவேற்று மகிழ்கிறேன்.

TBCD said...

வாங்க.வாங்க.

ஆரம்பமே...பல வாதிகளைச் சொல்லிட்டீங்க..."வியாதி"களா இல்லாத வரைக்கும் மகிழ்ச்சி..

வாழ்த்துக்கள்..

pls remove the word verification

கிருத்திகா said...

நன்றி பிரபா.. உலக வரைபடத்தில் உள்ளங்கை அளவிருந்தாலும், நம் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் தேசத்துகாரரே.. தனக்கென ஒரு தனித்தொவனியோடு ஒலிக்கும் தங்கள் தமிழுக்கு நான் என்றும் ஒரு தீவீர ரசிகை.. வாழ்த்துக்களுடன்..

கிருத்திகா said...

சின்னக்குட்டி பவனுக்கு...
நன்றி...

கிருத்திகா said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெகதீசன்..

கிருத்திகா said...

GK.. ஒரு நாள் நானும் உங்களைப்போல்.. அதிக பதிவுகள் போடவேணும் என்று எண்ணுவதுண்டு.. இன்று உங்களிடம் இருந்து வாழ்த்துக்கள்.. நன்றி

கிருத்திகா said...

ஐயா tbcd.. தங்கள் அளவுக்கு எனக்கு கலைவாணர் தமிழ் வராது என்பதே உண்மை.. நகைச்சுவையை கூட இது ஒரு நகைச்சுவை" என்று சொல்லி விட்டு எழுதும் அளவு...தீவிரவாதி..சிந்தனை தீவிரவாதி.. (வாதி தான்.. வியாதி ஆகாது என்று உறுதிகூறுகிறேன்)..நன்றி

ஆயில்யன் said...

//உலக வரைபடத்தில் உள்ளங்கை அளவிருந்தாலும், நம் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் தேசத்துகாரரே//

ரசித்தேன் - நீண்ட நேரம்

ஆயில்யன் said...

வேர்டு வெரிபிகேஷன் அவசியமான்னு பாருங்க இல்லைன்னா தூக்கிடுங்க

கிருத்திகா said...

பரிந்துரைக்கு நன்றி ஆயில்யன்.. மாற்றிவிட்டேன்...

வினையூக்கி said...

வாழ்த்துக்கள்.

ரங்கன் said...

வருக வணக்கம்.....தமிழுக்கு உங்கள் சேவை தொடங்கட்டும்.....

மங்களூர் சிவா said...

//
TBCD said...
வாங்க.வாங்க.

ஆரம்பமே...பல வாதிகளைச் சொல்லிட்டீங்க..."வியாதி"களா இல்லாத வரைக்கும் மகிழ்ச்சி..

வாழ்த்துக்கள்..
//
ரிப்பீட்டேய்

கலக்குங்க வாங்க!!

Divya said...

பதிவுகள் பல தந்து,
பின்னூட்டங்கள் பல பெற்று,
பதிவுலகில் ஜொலித்திட என் வாழ்த்துக்கள்!!

தம்பி said...

அழகிய தமிழ் நடையிலான தளம்.
வருக... வருக...

கிருத்திகா said...

தம்பி... மிகவும் ஆழமான அதே சமயம் அருமையான தளத்தை உங்களால் பார்வையில் முடிந்தது.. நன்றி ஒவ்வொரு பதிவர்களின் பதிவும் அருமை, ஒரு கூட்டுப்பறவைக்குள் விதம் விதமான நிறங்கள். நன்றி மீண்டும் வருக.

தினேஷ் said...

அன்பையும் உறவையும் உதறிவிடாத உயிர்களின் உணர்வுகளில் ஊண்றி நிற்க்கும் ஆழமான வரிகள்...

உங்கள் வலைப்பதிவு மேலும் மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்.

தினேஷ்

கிருத்திகா said...

நன்றி தினேஷ்….... தங்களின் இலக்கிய முகம் அறிந்துகொண்டது எனக்கு இது ஒரு இனிய அதிர்ச்சி. வாழ்த்துக்கள்

செல்வேந்திரன் said...

warm welcome

வெற்றி said...

கிருத்திகா,
வாங்கோ!

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

முத்துகுமரன் said...

இனிமையான வரவேற்புகள்.
//ஆனாலும் எப்போதும் உண்மைக்கு மட்டுமே அருகிருக்கும் ஒரு பிடிவாதக்காரி//
தெளிவான தீர்க்கமான சிந்தனையை உடையவர் என்று இந்த வரிகளே சொல்கின்றன. பன்முகப்பட்ட உங்கள் பார்வைகளை எழுத்தாக்குவீர்கள் என்றூ நம்புகிறேன்

கிருத்திகா said...

நன்றி முத்துக்குமரன்..உங்கள் பின்னூட்டம் கண்டுவிட்டு உங்கள் பதிவுகளை படிக்கச்சென்றால் ஒரு பெரிய புத்தகமே விருந்தாக்கப்பட்டுள்ளது.. உடனே சேர்த்துக்கொண்டேன்..என் “படிக்கவேண்டிய பதிவுகளில்”….

நாமக்கல் சிபி said...

/நகைச்சுவையை கூட இது ஒரு நகைச்சுவை" என்று சொல்லி விட்டு எழுதும் அளவு...தீவிரவாதி..சிந்தனை தீவிரவாதி//

சபாஷ்!