Tuesday, November 13, 2007

இயற்கையின் மொழி

வழி எங்கும் பூக்கள்
முன்னோ பின்னோ
திசை தெரியாது சென்ற
ஊர்வலத்தின் சுவடுகள்

மொழி அறியா பூக்கள்
மெளனமாய் சொன்னது
இழப்பின் அனுபவத்தை

மெளனத்தை உணர்ந்து கேட்கும்
காதுகளுக்கு
இங்கு ஓராயிரம் மொழிகள்

7 comments:

மங்களூர் சிவா said...

தமிழ் வலைப்பூவிற்க்கு இன்னொரு கவுஜரா??

தாங்குமா??

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாழ்த்தா வசவா??? புரியலையே...

மங்களூர் சிவா said...

//
கிருத்திகா said...
வாழ்த்தா வசவா??? புரியலையே...

//
ஓ அப்ப நான் போட்டது பின் நவீனத்துவ பின்னூட்டமா??
அவ்வ்வ்

nagoreismail said...

மௌன மொழிகளை கேட்பதற்கு இரண்டு காதுகள் தேவையில்லை ஒரு இதயம் போதும், இல்லையா..? - நாகூர் இஸ்மாயில்

Ungalranga said...

உங்கள் கவிதையில் சவ ஊர்வலம் பற்றி சொல்கிறீரா?
அல்லது
திருமண ஊர்வலம் பற்றி சொல்கிறீரா?
புரியவில்லையே.....?!?!

கிருத்திகா ஸ்ரீதர் said...

இஸ்மாயில்.நீங்கள் சொல்வது சரிதான்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரங்கன்... இழப்பு மரணத்தில் எளிதாக வருவது.. என்வே நான் சொல்ல முயற்சித்தது மரணம் பற்றியே...