கிளீன் இந்தியா ப்ராஜெக்ட் அக்டோபர்
இரண்டிலிருந்து ஆரம்பிக்கப் போகிறோம் என்று பெங்களூரில் மோடி உணர்ச்சி போங்க
பேசிக்கொண்டிருந்தார். உண்மைதான் மிகவும்
தேவையான ஒரு முயற்சி. நாம் மற்ற நாடுகளில்
பயணிக்கும் போது அங்குள்ள தெருக்களையும் சாலை ஓரங்களையும் காணும் பொது
நம்முள் ஏதோ ஒரு தன்னிரக்கம் சுரந்து கொள்ளும். அதுவே நம் ஊரில் சில வெளிநாட்டவர்களோடு
தெருவில் பயணிக்கும் போது மிகப்பெரிய கையாலாகதத் தனமாக மாறி மிகவும் அருசியான உணர்வுகளை தோற்றுவிக்கும்..
வெளிநாடுகளின் இண்டஸ்ட்ரியல் பார்க் உண்மையில்
ஒரு பூங்கா போல இருக்கும் ஆனால் எனக்குத் தெரிந்து இங்கு எந்த ஒரு இண்டஸ்ட்ரியல்
பார்க்கும் சாதாரண பகுதியாகக் கூட இருக்காது ஏதோ கைவிடப்பட்ட குப்பைத்தொட்டி போல
இருக்கும். சிப்காட் அதிகாரிகள் நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில் ஏதோ அவர்கள்
தன்மானம் குறைந்து போவது போல் நடந்து கொள்வார்கள். சில முக்கியமான வெளிநாட்டு
வாடிக்கையாளர்களை நம் ஏரியாவிற்கு அழைத்து வரும் போது தான் இதுவரை நாம் தினமும்
கடந்து வந்துகொண்டிருக்கும் அவலத்தின் மொத்த விஸ்தீரமும் உரைக்கும்.
தாமதமான நடவடிக்கை என்றாலும் தேவையான ஒன்று.
எல்லா நல்ல திட்டங்களைப்போல இதுவும் தொடங்கி மறைந்து விடக்கூடாது என்று இந்த நவராத்திரி நன்னாளில்
எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன். J
ஜெய விஜயி பவ
No comments:
Post a Comment