சில சமயம் சில பாடல்கள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டுவிடும் மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டபொழுதும் இன்னும் இன்னும் என கேட்கத்தூண்டும்
சமீபத்தில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக என்னை அலைக்கழித்த இரண்டு பாடல்களுண்டு.
படம் - இருவர் - பாடியவர்கள் - உன்னிக்கிருஷ்ணண், பாம்பே ஜெயஸ்ரீ.
நருமுகையே நருமுகையே நீயொரு நாழிகை நில்லாய், செங்கனி ஊரிய வாய் திரந்து நீயொரு திருமொழி சொல்லாய், அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரல நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா? திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் வென்னிரப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய், அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன பாண்டினாடனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன, நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும், இளைத்தேன் துடித்தேன் பொருக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை.
யாயும் யாயும் யாராகியரோனென்ரு நேர்ந்ததென்ன யானும் நீயும் எவ்வழியரிதும் உரவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன,
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்புவந்த பாடல்தானென்றாலும் அதை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது அதன் மொழிக்கட்டு எத்தனை முறை கேட்டபோதும் "யாயும் யாயும் யாரகியரும்" என்று பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கேட்கும் பொழுது நமையறியாமல் உள்ளே ஒரு விசும்பலும் காரணமில்லாமலே அவ்வைக்கிழவியும் கூடவே பாரதியும் உள்ளே தோன்றுவதை ஒவ்வொருமுறையும் தவிர்க்க முடியவில்லை.
அடுத்த பாடல் படம் - என்னைத்தெரியுமா- பாடியவர்கள் - கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
என்ன மாற்றமோ, நம்ப வில்லையே, ஆனலும் என் நெஞ்சம் இதனை நம்ப சொல்லுதே, அவளை பார் என்றதே, அழகாய் ஆபத்தில் அது மாடிக் கொண்டதே, இது என்ன சந்தோஷமோ இருந்தாலும் சந்தேகமோ.
உன்னை முன்பே தெரியுமென்று மனது சொல்வதும் யேனோ, உனை நானும் பார்த்து நொடியில நெஞ்சோட்ய் கலவரமோ, எந்தன் விழியில் நுழைந்து புது வழியை காட்டி
பல கனவை கொடுத்து நீ போகிராய். வரும் காலை ஒளி அதனை மாலை இருள் தடுத்து நிறுத்த முடிந்ததில் நியாயம் ஏதுமல்லையே.
காலம் நதியை போல கடந்து போக கல்லென கிடந்தனே எந்தன் பாதை போவாய் கேட்கையில் என் கையில் விடைகள் இல்லை நீ விழுந்த இடத்தை விட்டு
எழுந்து நடந்து செல்ல அந்த இடத்தில் ஏன் நிற்கிறாய்
கடும் புயலில் மாட்டிக் கோன்டு படகு தத்தளிக்கும் வழியை காட்டி விடு கரயில் ஏற்றி விட வா. அடியடி நீ யே உந்தன் கேள்வியாய் ஏன் உனக்குள் தேடிப் போகிராய்
உன் தனிமை உனக்கு புடிக்குதா என்னிடம் பகிர்ந்து கோள் தொடு வானம் சொந்தமின்றி கரையும் சொந்தமின்றி குழம்பும் மலை போல மனதில் குழப்பம் ஏனோ
இந்தப்பாடலின் தனித்தன்மைக்கு காரணம் பல உண்டு. முதன்மையாய் வரிகளை ஆங்கில மொழியின் அசைவுகளைக்கொண்டு கட்டமைத்திருந்தாலும் தமிழின் இனிமை கொஞ்சமும் குறையாமல் சிறு முனை கூட முறியாமல் கொண்டு வந்து தந்திருக்கும் பாடகியின் ஆழமான குரலசைவு,. எந்த வரிகளும் ஒரு முறைக்கு மேல் மீண்டு வராத கட்டமைப்பு, வாத்தியக்கருவிகளின் இசையைக்கொண்டே பல்லவி சரணம் இவைகளை மிக நேர்த்தியாக இணைத்திருக்கும் பாங்கு இவையெல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு நொடியில் சட்டென் முடியும் பாடல் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்தப் பாடல் முடியும் தருவாயில் மனமெங்கும் ஒற்றை ஆர்மோனியத்தோடும் ஓங்கிய குரலோடும் அமர்ந்து கொண்டிருப்பார் மெல்லிசை மன்னர். ஏன் என்ற கேள்விக்கு என்னிடம் விடையேதும் இல்லை. சில நல்ல உணர்வுகளை இனம் பிரிக்க கற்றுக்கொள்ளாது அப்படியே அனுபவித்துக்கொள்வதுகூட வாழ்வின் இனிமையை கூட்டத்தான் செய்கிறது.
4 comments:
gub songs..
பாம்பே ஜெயஸ்ரீயும் உன்னிக்ருஷ்ணனும் பாடிய
பதினைந்து வருடங்களுக்கு மேலாக இந்தப்பாட்டு நெஞ்சிலே நிற்கிறதென்றால,
உயிர்ப்புடன் அதை வைத்திருப்பது பாடலின் அழகு தமிழ்ச்சொற்கள் மட்டும்தானா.
அது புனையப்பட்ட ராகம் கேதாரம் : துவக்கத்தில் மிக நன்றாகவே அமைந்திருக்கிறது.
( இது ஒரு பொன் மாலைப் பொழுது பாட்டை நினைவு கொள்ளுங்கள் )
கேதார ராகத்தை எனது பதிவில் இட்டபொழுது இந்தப்பாடல் என் கண்களுக்கு, காதுகளுக்கு
நினைவுக்கு வரவில்லை .
இப்பொழுது வரவழைத்தமைக்கு உங்களுக்கு
ஒரு கோடி தாங்க்ஸ்.
சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com
please move on to kedharam in the labels to listen to other songs in this Raag.
பிரசுரத்துக்கல்ல!
இப்பாடல் வரிகளின் சொற்கள்- இப்படித்தான் வரும் எனக் கருதுகிறேன்.
மீண்டும் பார்க்கவும்.
நறுமுகை
ஊறிய
திறந்து
அந்நிலவில்
நாழிகை பாராய் (இயல்பாகப் புணரும் வல்லொற்று "ப்" தேவையில்லை)
வெண்ணிறப்
பொறுக்கவில்லை
யாராகியரோனெஞ்சு
அவ்வழியறிதும்
உறவு
||நருமுகையே நருமுகையே நீ||
அது நறுமுகை என்று நினைக்கிறேன்.
Post a Comment