Monday, June 15, 2009

முகமூடிக்கவிதைகள் - 8


ஆணுக்கான அடையாளமாய்
காமத்தையும்
பெண்மையின் குறியீடாய்
காதலையும்
சொல்லியாயிற்று

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்குமென்பது மாறி
இணையெதிர் துருவங்களுக்கு
நிரூபிப்பதற்கும்
என்றாயிற்று


பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....

13 comments:

மயாதி said...

நல்லாருக்கு நண்பி...
இன்னும் நிறைய எழுதுங்கள், நிறைய சகோதரிகளை எழுத தூண்டுங்கள்.

சென்ஷி said...

:-)

அசத்தல்!

பாச மலர் / Paasa Malar said...

அறிவியல் + திருக்குறள் + வாழ்க்கை...நல்லாருக்கு கிருத்திகா..

நட்புடன் ஜமால் said...

பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....\\

திருக்குறளின் வடிவமா ...


நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் முகமூடி - இந்த முறை கொஞ்சம் அழுத்தமாகவே மூடியுள்ளது ...

அகநாழிகை said...

கவிதை நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாக எழுதவில்லை போலிருக்கிறதே.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏனுங்க ..
எனக்கு கடைசி 3 வரிகள் புரியல :(

Kavinaya said...

//பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....//

உண்மை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்...//

அசத்தல் + ஆழமான வரிகள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

மயாதி - முதல் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி..(பெயர் மிகவும் அழகாக உள்ளது)
சென்ஷி - இது சிரிப்புதானே.. கவிதைல உங்களை மிஞ்சமுடியாதுதான்...
வாங்க மலர்.. டீச்சர் இல்லையா அதான் கரெக்டா பிடிச்சிட்டீங்க
ஆமாம் ஜமால்.. கொஞ்சம் மூடியிருந்த அழுத்தத்தை விடுவிக்கவே இக்கவிதை!!!
நன்றி அகநாழிகை... உங்க பக்கத்துக்கு வந்து வலைச்சரத்துக்கு வாழ்த்து சொல்லனும்னு நினைச்சுகிட்டே இருந்தேன்... இன்னும் பண்ணலை...:)
குறை ஒன்றும் இல்லை...இனிமே தெளிவா எழுத முயற்சிபண்ரேன்...
வாங்க கவிநயா நன்றி
அமித்து அம்மா நன்றி ..

பாச மலர் / Paasa Malar said...

கிருத்திகா,

உங்களை 32 கேள்விகள் தொடருக்கு அழைத்திருக்கிறேன்...நேரமிருக்கும்போது பதிவிடவும்...

http://pettagam.blogspot.com/2009/06/32-32.html

திவாண்ணா said...

கடைசி வரிகள் நல்லா இருக்கு. ஆமாம் நாம் எல்லாருமே ஏதோ ஒரு முகமூடி போட்டுகிட்டுதானே இருக்கோம்? எப்பவும்? முகமூடி அணிய தேவையில்லாத பாக்கியவான்/ பாக்கியவதி யாரேனும் இருந்தா அவங்களுக்கு நமஸ்காரம்!

தினேஷ் said...

Super...

Dinesh D

நேசமித்ரன் said...

நல்ல கவிதை