Friday, June 5, 2009

தொலைந்து போவது பற்றி

தொலைந்து போவது பற்றி
அதிகம் தோன்றுவதுண்டு
அலுவலகம் வந்து
திரும்பாமல் பொகலாம்

நடந்து போகும் பாதையில்
திரும்பியும் போய்
தொலைந்து போகலாம்

பேச்சறவமற்று
அரையிருட்டில்
அமர்ந்தும் தொலையலாம்

அதிர்ந்து தொலைக்கும்
தொல்லைபேசியினை
ஒளிரமட்டும் வைத்துவிட்டும்
தொலைந்து போகலாம்


நாம்
தொலைந்து போனதை
குறைந்த பட்சம்
நாமாவது
அறிந்துகொண்டு
மீண்டும் வெளிக்கிடலாம்

தொலைந்து போவதை
மீண்டும் ஒரு நாள்
தள்ளிப்போடலாம்...

இப்போதிருக்கும் வணிகச்சூழலில் தொடர்ந்து நான் செய்துகொண்டிருந்த தொழிலைச்செய்து வருவது கொஞ்சம் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சிறிதே மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு நன்னாளில் பணியாளர்களுக்கு நானே சில நல்ல நிறுவணங்களில் அமர்வதற்கான ஆயத்தங்களை செய்து தந்துவிட்டு தற்காலிகமாக மங்களம் போர்டு மாட்டிவிட்டேன்.

சும்மாயிருக்க முடியுமா??? நானும் ஒரு பன்னாட்டு நிறுவணத்தில் பணியெடுத்து அமர்ந்தும் விட்டேன். அதனால் வழக்கமான இணையநேரம் இருந்தாலும் தனிப்பட்ட வலை வாசிப்புகள் முடியவில்லை.. வார இறுதி நாட்களில் மட்டுமே முடியுமென்று எண்ணுகிறேன்...

மக்களே மறந்துடாதீங்க... மீண்டு வருவேன்... மீண்டும் வருவேன்...

14 comments:

அன்புடன் அருணா said...

தொலைந்து போகலாம்....மறுபடி கிடைச்சுடுங்க!!! ஓ.கே வா?

மயாதி said...

கவனம் அடிக்கடி தொலைந்து போகாதீர்கள்
பிறகு காணாமல் போனோர் பட்டியலில்
போட்டு விடுவார்கள்...
சும்மா குசும்பு தப்பா நினைக்காதீங்க

நல்ல இருக்கு

ஜீவி said...

//நாம்
தொலைந்து போனதை
குறைந்த பட்சம்
நாமாவது
அறிந்துகொண்டு
மீண்டும் வெளிக்கிடலாம்.//

நிறைய தொலைந்து போதல்கள் இருந்தாலும், 'இந்தத் தொலைந்துபோதல்' நிறைய தத்துவார்த்தமாக இல்லை?..
அதுமட்டுமில்லை, மிகுந்த அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.
இந்தக் கவிதை எக்ஸ்ஸலண்ட்..
வருகைக்கும், இனி இப்படிக் காணாமல் போகாமல் இருப்பதற்கும்
வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

மீண்டு மீண்டும் வருக....

sury siva said...

ஆங்கிலத்தில் அவுட் ஆஃப் ஸைட் அவுட் ஆஃப் மைன்ட் என்பார்கள். இந்தக்காலத்திலே
என்னதான் நீங்களும் நானும் வெளிச்சத்தில் இருந்தாலும் மக்கள் மத்தியிலே பிரபலமாக‌
இருந்தாலும், ஒரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து நாம் நமக்கு பழக்கமாக‌
இருந்த சூழ்னிலைக்கு மறுமுறை செல்லும்போது, கேட்கக்கூடிய வழக்கமான சொற்கள்:
" ஸாரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே ! உடனே நினைவு வரல்லேயே ! பரவாயில்லை,
உங்களுக்கு என்ன வேணும்னு சட்டுன்னு சொல்லிடுங்க, எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு ! "
இந்த வார்த்தைகளுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளூம் மன நிலை உள்ள யாவருமே
பொது சூழ்லிருந்து தற்காலீகமாக தொலைந்துபோகலாம். ஒன்றும் பெரிதாக ஆகிவிடாது.
உலகம் நாம் இல்லாவிட்டாலும் ஓடும். ஒரு வேளை இதை விட நன்றாக ஓடினாலும் ஓடும்.

அது கிடக்கட்டும்.
எதை வேண்டுமானாலும் தொலையுங்கள். ஆனால், நல்ல எண்ணங்களை, நல்ல சொற்களை, நல்ல
செயல்களை, நல்ல நண்பர்களைத் தொலைத்து விடாதீர்கள்.

சுப்பு ரத்தினம்.
சென்னை, தமிழ் நாடு.

நட்புடன் ஜமால் said...

மீண்டும் வருக

Kavinaya said...

தொலைந்து போதல் பற்றிய என் எண்ணத்தை உங்கள் கவிதையில் கண்டேன். அவ்வப்போது மட்டும் தொலைந்து போனால் பரவாயில்லை :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சீக்கிரம் வந்துடுங்கப்பா....

முகமூடியைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.....

:)-

நாம்
தொலைந்து போனதை
குறைந்த பட்சம்
நாமாவது
அறிந்துகொண்டு
மீண்டும் வெளிக்கிடலாம்

தொலைந்து போவதை
மீண்டும் ஒரு நாள்
தள்ளிப்போடலாம்... //

அருமை........

தினேஷ் said...

மீண்டும் வருக!!!!!!

Unknown said...

இப்போதிருக்கும் வணிகச்சூழலில் தொடர்ந்து நான் செய்துகொண்டிருந்த தொழிலைச்செய்து வருவது கொஞ்சம் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சிறிதே மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு நன்னாளில் பணியாளர்களுக்கு நானே சில நல்ல நிறுவணங்களில் அமர்வதற்கான ஆயத்தங்களை செய்து தந்துவிட்டு தற்காலிகமாக மங்களம் போர்டு மாட்டிவிட்டேன்

Unknown said...

இப்போதிருக்கும் வணிகச்சூழலில் தொடர்ந்து நான் செய்துகொண்டிருந்த தொழிலைச்செய்து வருவது கொஞ்சம் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சிறிதே மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு நன்னாளில் பணியாளர்களுக்கு நானே சில நல்ல நிறுவணங்களில் அமர்வதற்கான ஆயத்தங்களை செய்து தந்துவிட்டு தற்காலிகமாக மங்களம் போர்டு மாட்டிவிட்டேன் உங்கள் மங்கள ஆசியுடன் பணியில் அமர்த்தப்பட்ட ஜெயவேல் நான் இன்று தமிழ் நாடு அரசு சட்டக்கல்லுரி மாணவனாக உங்கள் வடிகால் இடுகையின் பாசமிகு வாசகனாக உங்கள் முன் மீண்டும் மீண்டும் தொடருவேன் உங்கள் ஆசியுடன் உங்கள் மகனாக சி. ஜெயவேல் எம்.காம்,(பி.எல்).9884464644

Unknown said...

உங்கள் மங்கள ஆசியுடன் பணியில் அமர்த்தப்பட்ட ஜெயவேல் நான் இன்று தமிழ் நாடு அரசு சட்டக்கல்லுரி மாணவனாக உங்கள் வடிகால் இடுகையின் பாசமிகு வாசகனாக உங்கள் முன் மீண்டும் மீண்டும் தொடருவேன் உங்கள் ஆசியுடன் உங்கள் மகனாக சி. ஜெயவேல் எம்.காம்,(பி.எல்).

Unknown said...

உங்கள் மங்கள ஆசியுடன் பணியில் அமர்த்தப்பட்ட ஜெயவேல் நான் இன்று தமிழ் நாடு அரசு சட்டக்கல்லுரி மாணவனாக உங்கள் வடிகால் இடுகையின் பாசமிகு வாசகனாக உங்கள் முன் மீண்டும் மீண்டும் தொடருவேன் உங்கள் ஆசியுடன் உங்கள் மகனாக சி. ஜெயவேல் எம்.காம்,(பி.எல்).

Unknown said...

உங்கள் மங்கள ஆசியுடன் பணியில் அமர்த்தப்பட்ட ஜெயவேல் நான் இன்று தமிழ் நாடு அரசு சட்டக்கல்லுரி மாணவனாக உங்கள் வடிகால் இடுகையின் பாசமிகு வாசகனாக உங்கள் முன் மீண்டும் மீண்டும் தொடருவேன் உங்கள் ஆசியுடன் உங்கள் மகனாக சி. ஜெயவேல் எம்.காம்,(பி.எல்).