Wednesday, November 19, 2008

முகமூடிக்கவிதைகள் - 5

ஜன்னல் கம்பிகளில்
சொருகிய
தீரைச்சீலையாய்
மனது சிக்கிக்கொள்கிறது
ஏதேனும் ஆழத்தில்

வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்



***********************

தவறாகப்புரிந்துகொள்ளப்படுமென்று
விழுங்கிய வார்த்தைகள்
விருட்சமானது

காய்களோ கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.


*******************************


14 comments:

MSK / Saravana said...

ரொம்ப நாளாய் எதிர்பார்த்திருந்தேன் முகமூடி கவிதைகளை..

இரண்டுமே அருமை.. மனசை பார்க்க முடிகிறது..

Ken said...

முதல் கவிதை ஏதோ வெகு சாதாரணமாக தெரிகிறது,

இரண்டாவது கவிதைக்கான இடம் வேறு, மிக நன்றாயிருக்கிறது இரண்டாவது கவிதை

நிழலற்ற விருட்சம் - பொருள் பொதிந்த வார்த்தை

அருள் said...

கவிதையின் தலைப்பு தான் முகமூடியே தவிர..

கவிதையின் அர்த்தம் தெளிவு...

அருமை.

பாச மலர் / Paasa Malar said...

//வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்//

இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு கிருத்திகா..

ஜீவி said...

//காய்களோ கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.//

இதெல்லாம் இல்லைதான்!
புலனுக்குப் புலனாகா
வேறு நிறைய உண்டு.

anujanya said...

கென் அளவு கறார் விமர்சனம் எனக்கு இல்லை; எனினும், இரண்டாவது கவிதை மிக அழகு; ஆழம்; நிறைய எழுதுங்களேன்.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சரவணக்குமார்..கவிதைகள் என்றுமே உண்மைக்கு மிகவும் நெருக்கமானவையாய் இருப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி கென்...
முதல் கவிதையில் சில மாறுதல்களை செய்ய வேண்டுமென எண்ணியிருந்தேன்.. கடைசியில் எதுவும் வேண்டாமென விட்டுவிட்டேன்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி அருள்.... எனக்கும் புரியனுமே அதனால நம்ம கவிதையெல்லாம் எளிமையாத்தான் இருந்தாகானும்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆமாம் மலர்.. எனக்கும் மிகப்பிடித்த வரிகள் அது.. முதலில் கவி மனம் என்று எழுதலாம் என நினைத்தேன்... பின் பல்வேறு சிந்தனைகளுக்குப்பிறகு வெறும் மனமாகவே விட்டுவிட்டேன்...
:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆம் ஜீவி அதை உணர்ந்துகொள்ளத்தான் இந்த ஓட்டம்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி அனுஜன்யா...
ஆமா ஏன் எப்படி சோதனையை தலை மேல வாங்கிக்கறீங்க????

butterfly Surya said...

வாழ்த்துக்கள்

சூர்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

அர்த்தங்கள் அப்பட்டமாய் புலப்படும் முகமூடிக்கவிதைகள்//
இரண்டுமே அழகு

இன்று படிக்கக் கிடைத்த என் கவியே, இத்தனை நாளாய் இங்குதானா இருந்தாய், என் கண்ணில் அகப்படாமல்.