Thursday, December 4, 2008

பெண்பால் கவிதைகள் - 2

நட்பு

எப்போதும் போலுணர்ந்தேன்
இரு பத்து வருடங்கள்
பின்பும்
அம்மா
மனைவி,
அதிகாரி
ஏதுமின்றி
நானாய்
நன்பனின் எதிரில்

சுயநலம்

நல்லவேளை
எனை வசீகரிக்கும்
பித்தனோ
ஞானியோ
பைத்தியக்காரனோ
என்
கணவரோ
மகனோ
மருமகனோ
சோதரனோ
இல்லை

காதல்

இருமகவோடு
இரவு கதைசொல்லும் நேரம்
நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???

25 comments:

வண்ணத்துபூச்சியார் said...

நச் கவிதைகள்....

சூப்பர்.

சூர்யா

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்குங்க! நட்பு கவிதை நச்சுன்னு இருக்கு!

அன்புடன் அருணா said...

நல்லா எழுதுறீங்க.....நிறைய எழுதலாமே...
அன்புடன் அருணா

அனுஜன்யா said...

நல்லா இருக்கு கிருத்திகா. எனக்கும் 'நட்பு' மிகப் பிடித்தது.

அனுஜன்யா

ஜீவி said...

//இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???//

சில நேரங்களில் என்னதான் தயார் நிலையில் இருந்தாலும், எதிர்ப்படும் கேள்விக்கு பதில் சொல்லத் திராணியற்றுத் திகைப்போம்.
அப்படிப்பட்ட பொருள் பொதிந்த, அன்பை, நேசத்தைப் புதைத்துக் கொண்ட கேள்வி இது. 'காதலை' விஞ்சிய ஒரு தலைப்பு வைத்திருக்கலாம் இதற்கு.

முதல் சுயதரிசன வகை என்றால், இரண்டாவதை முகமூடியாய்க் கொள்ளலாமோ?
வாழ்த்துக்கள்..

வனம் said...

வணக்கம்

நல்லா இருக்குங்க

ஆனா பெரும்பாலும் கையறுநிலையிலேயே முடிக்கின்றீர்கள்

ஆனா கவிதை சூப்பர்.

நன்றி

sury said...

//இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்?//இறந்தவை பறந்தவை. சிலவோ
சிந்தையிலே நிற்பவை ,பலர்
நிந்தைக்கும் ஆளானவை.
எனினும் அதில் சில‌
சிறந்தவை உள் மனதிற்
குகந்தவை. மணச்
சந்தையிலே விலைபோகாவிடினும்
மனமெனும் ராச்சியத்தில்
மணக்குமதன் விந்தையென்னே !!


சுப்பு ரத்தினம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதைகள் பிடித்திருக்கின்றன.

கிருத்திகா said...

நன்றி வண்ணத்துப்பூச்சியார்..(பெயர் நல்லாருக்குங்க)

வாங்க சந்தனமுல்லை.. நட்பு எல்லாருக்கும் பொதுவான உணர்வு இல்லையா....

நன்றி அன்புடன் அருணா...மக்களை ரொம்ப தொல்லை படுத்தவேண்டாமேன்னுதான் எழுதறதையெல்லாம் பதிவிடறதில்லை :)

நன்றி அனுஜன்யா... அதுதானே எல்லாருக்குமான பாலம்..

கிருத்திகா said...

உண்மைதான் ஜீவி சிலசமயம் வாய்ச்சொற்கள் பயனிலைதான்...

"'காதலை' விஞ்சிய ஒரு தலைப்பு வைத்திருக்கலாம் இதற்கு. " வைத்திருக்கலாம்....:)

கிருத்திகா said...

நன்றி வனம்...

அப்படியா முடியுது நீங்க சொன்னப்புறம்தான் யோசிக்க வேண்டியிருக்கு...

சில கவிதைகள் முகமூடிக்கவிதைகள்னு எழுதினேன்..மனத்தோட உண்மையான ஓட்டத்தையும் அதன் நிதர்சன வெளிப்பாடையும் சொல்றமாதிரி அந்த மாதிரி கவிதைகள்ல சில உண்மைகளை தொட்டு காட்டவேண்டியிருந்தது...:)

கிருத்திகா said...

நன்றி சுந்தர்.

வாங்க சூரி சார்... கவிதை அருமை.. அதெப்பெடி நினைச்ச மாத்திரத்தில (படிச்ச மாத்திரத்தில) படிக்கற விஷயத்தோட ஒன்றிப்போய் அதற்கு பதில் கவிதையும் எழுத வரது... நன்றி...

கார்த்திக் said...

// நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???//

எதார்த்தமான வரிகள்.
அனைத்தும் அருமை

thevanmayam said...

இருமகவோடு
இரவு கதைசொல்லும் நேரம்
நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
அருமை நண்பரே!!!!!!
தேவா.

ரமணன்... said...

அழகு :) நிறைய எழுதுங்க :)

ரமணன்... said...

வண்ணத்துபூச்சியார்??

:) Peyarum , kavithayum nalla iruku :)

அதிரை ஜமால் said...

\\எப்போதும் போலுணர்ந்தேன்
இரு பத்து வருடங்கள்
பின்பும்
அம்மா
மனைவி,
அதிகாரி
ஏதுமின்றி
நானாய்
நன்பனின் எதிரில்\\

ரொம்ப அருமை

நானாய் நன்பனின் எதிரில்
எதிரியாய் அல்ல நன்பனாய் ...

சும்மா சும்மா

அதிரை ஜமால் said...

\\இருமகவோடு
இரவு கதைசொல்லும் நேரம்
நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???\\

நல்ல உண்ர்ந்து சொல்லியிருக்கீக

பாச மலர் said...

'காதல்' ரொம்ப நன்றாக இருக்கிறது கிருத்திகா..

ஜோதிபாரதி said...

வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html

அன்புமணி said...

//புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்??? //

முதுமைபெற்ற காதல் என்றால் முதுமைவரை தொடர்ந்துவரும் என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்தியது. வாழ்க நீடுழி!

பிரியமுடன் பிரபு said...

///
சுயநலம்

நல்லவேளை
எனை வசீகரிக்கும்
பித்தனோ
ஞானியோ
பைத்தியக்காரனோ
என்
கணவரோ
மகனோ
மருமகனோ
சோதரனோ
இல்லை
///

என்ன சொல்லுறீங்க??
எனக்க்கு புரியல

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரியமுடன் பிரபு said...

///
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???
////

கடைசி வரிகள் நச்...

balasugumar r said...

அருமை

balasugumar r said...

அருமை