01. குறுக்கும் நெடுக்கும்
கோடுகள் ஏதுமின்றி
நீண்டு செல்கிறது
நெடுஞ்சாலையின்
மஞ்சள் கோடு
வாழ்க்கை
அதுபோலில்லை
அது போலியில்லை
02. நாய்களோ
பூனைகளோ
குதிரைகளோ
எனக்கு நெருக்கமில்லை
உருவகப்படுத்த
விலங்கினம் தேடினேன்
என்னுள்ளிருக்கும்
தாழ்திறவா
ஆரண்ய கதவுகளில்
“இடமில்லை” அட்டைகள்
03. பயணங்கள்
தன் இலக்குகளை
இன்றில்லாவிடினும்
நாளை அடையலாம்
சமரசங்களற்றபோது
6 comments:
ஃஃவாழ்க்கை அதுபோலில்லை அது போலியில்லை ஃஃ
ஃஃபயணங்கள் தன் இலக்குகளை இன்றில்லாவிடினும் நாளை அடையலாம் சமரசங்களற்றபோதுஃஃ
மிக அருமை நண்பரே
நன்று..
இலக்கியவாதி தூங்கி கவிதாயினி முழிச்சிகிட்டாச்சா :)
வருகைக்கு நன்றி சுபாஷ்.
அய்யனார்..
அதுக்குள்ள போய் பொட்டி தட்ட ஆரம்பிச்சிட்டீங்களா????
ஏதோ உங்க தயவுலன்னு சொல்லலாமா...(வடி குடுத்து அடி மீடிக்கறதுன்னு மலையாளத்துல ஒரு வாக்கு உண்டு) :)
//தாழ்திறவா ஆரண்ய கதவுகள்//
மிகச்சரியான வார்த்தைப் பிரயோகம்!
முகமூடி ஏன் என்று தான் தெரியவில்லை..
வாருங்கள் ஜீவி...
நன்றி... சில நேரங்களில் சொல்ல நினைக்கும் சில நல்ல விஷயங்களைக்கூட நேரடியாகச்சொல்ல முடிவதில்லையே... எதற்கும் தேவைப்படுகிறதிந்த முகமூடி அந்த அலுப்புதான் காரணம்.
Post a Comment