Monday, June 16, 2008

கவன ஈர்ப்பும் தப்பித்தலும்


சில வேளைகளில், எழுதத்துடிக்கும் மனதை, ஏதோவொன்று, கட்டிப்போடும்,கணணி இல்லை,இணையம் இல்லை, நேரமில்லை என்று எத்தனையோ இல்லைகளை பட்டியலிடும் மனதின் ஒரு மூலையில் தன்குரலென்று ஒன்று ஒலித்துக்கொண்டேயிருக்கும் உனக்கு அதற்கான தீவிரமான ஆர்வங்கள் ஏதுமில்லையென்று.

தாட் தாட் தாட்டென்று இராஜகுமாரன் கதை சொன்ன அப்பாவின் மடியில் படுத்து கதை கேட்ட சந்தோஷங்கள் எப்போதும் அதை மற்றவர்க்கு சொல்லும்போதிருந்ததில்லை. வானொலியில் இசையும் கதையும் கேட்டுவிட்டு அதன் குரலசைவில் மயங்கித் திரிந்த இன்பம் அதை தன்குரலில் தோழியற்கு மறுபடியும் சொன்னபோதிருந்ததில்லை. கதைசொல்லிகளின் கதைகளிலிருந்த ஆர்வத்தை எனக்கான கதை பண்ணும் ஆர்வம் எப்போதும் ஈர்த்ததில்லை. ஆழ்ந்த மவுனங்களைத்தரும் வாசிப்புக்களின் அனுபவத்தை நீண்ட வாசகங்கள் கொண்ட என் எழுத்துக்கள் எப்போதும் ஜெயித்ததில்லை. உள்ளே குரல்களற்ற நிமிடத்தில் எதையும் செய்ய வேண்டாமெனும் நேரத்தில் கண்மூடி என்னுள்ளே காணும் பிம்பத்திலும் படிக்காமல் தொலைந்துபோன புத்தகங்களின் சாயல்கள் என் குழவியின் முத்தத்தையும் வெற்றாக எதிர்கொள்ள வைக்கிறது.

இத்தனை இருந்திருந்தும் இன்றெதெற்கிந்த பதிவு.. என்னையும் பதிவுலகம் மறக்காதிருப்பதற்கு மட்டுமின்றி வேறெதெற்கு…..

இப்படின்னு எழுதனும்னு ரொம்ப ஆசைங்க .. ஆனா அதில்ல நிசம்… கிட்டத்தட்ட சொர்க பூமி மாதிரி ஒரு இடத்துக்கு போயிட்டு வந்துட்டு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சேனா.. அது கூட படம் காட்டலாமின்னு காமராவை எடுத்தா “லோ பேட்டரி.. சேஞ்ச் பேட்டரி” அப்படின்னு சொல்லிட்டு தூங்கிப்போச்சு.. அதான் சரி எதையாவது போட்டே ஆகனுன்னு ஒரு கொலை வெறி எத்தனை நாள்தான் ஒங்களையெல்லாம் நிம்மதியா இருக்கவிடுறது… அதான்…..

கூடிய சீக்கிரம் வரேன்.. அந்த இடம் பத்திச்சொல்ல…

8 comments:

ஆடுமாடு said...

அதென்ன இடம்?

அகரம் அமுதா said...

வாங்க! வாங்க! அந்த இடத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம்!

ஆயில்யன் said...

சில வேளைகளில், எழுதத்துடிக்கும் மனதை, ஏதோவொன்று, கட்டிப்போடும்,கணணி இல்லை,இணையம் இல்லை, நேரமில்லை என்று எத்தனையோ இல்லைகளை பட்டியலிடும் மனதின் ஒரு மூலையில் தன்குரலென்று ஒன்று ஒலித்துக்கொண்டேயிருக்கும் உனக்கு அதற்கான தீவிரமான ஆர்வங்கள் ஏதுமில்லையென்று.
///
சரியான வார்த்தைகள்தான் - ஆர்வங்கள் ஏதுமில்லை என்பது!

ஆயில்யன் said...

//இப்படின்னு எழுதனும்னு ரொம்ப ஆசைங்க .. ஆனா அதில்ல நிசம்… கிட்டத்தட்ட சொர்க பூமி மாதிரி ஒரு இடத்துக்கு போயிட்டு வந்துட்டு //

எண்ட கேரளாவா அது :))))

sury siva said...

அடடா ! இதுதான் உங்களுக்கு முன்னாடியே
யாரோ ஃபோடோ எடுத்து யூ ட்யூபிலே
போட்டிருக்காங்களே ?

http://www.youtube.com/watch?v=WtF4Yb7Ok6U


சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க ஆடுமாடு, அமுதா.. ஆயில்யன்.. (என்ன ஒரு ஒற்றுமை அகர வரிசைல வந்திருக்கீங்க)..பதிவு ஆரம்பிச்சிட்டேன்...

வாங்க சுப்புரத்தினம் ஐயா... அந்த ஒளிப்பேழை இணைப்புக்கூட அற்புதமாத்தான் இருக்கு

முஹம்மது ,ஹாரிஸ் said...

இந்த பதிவும் நன்றாகத்தான் இருக்கு. ஆனால் உங்களுடைய நூல் விமர்சனம் தான் என்னை மிகவும் கவர்ந்தது.. ஒரு புதிய நூல் விமர்சனத்தை ஆவலுடன்
எதிர் பார்க்கிறேன்

முஹம்மது ,ஹாரிஸ் said...

நல்லப்பதிவு