Friday, February 8, 2008

தனிமை - தன்னியல்பு - குரு - கடவுள் - காலம்


உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான
வாழ்வியல் பார்வைகளை
மாற்றிக்காட்டுகிறேன் வா..

எந்த ..யிஸங்களின்
வர்ணப்பூச்சுக்களும் இன்றி
தன்னியல்போடு மட்டுமே
என்னோடு வா

முன்னெப்போதும் உண்டான
சாயல்களின் துணையின்றி
சார்புகளற்ற சிந்தனையோடு மட்டுமே
என்னோடு வா

உலர்ந்து போன உணர்வுகளை
இன்னும் சுமந்து திரியாது
இப்போதைக்கிப்போதே
வாழ்வோம் என்ற
எண்ணக்கிடைக்கையோடே
என்னோடு வா

கடந்தும் நடந்தும் போன
காயங்களின் சுவடின்றி
உன் கரம் பிடித்தழைத்துச் செல்ல
நானுண்டு இங்கே

ஆயிரமாயிரம் கரங்கள் பற்றி
நானெப்போதும் நடந்து செல்லும்
என் பாதைகளில்
உன் கால்கள்
பூக்களையும் முட்களையும்
சமமென பாவிக்கும்
அவதானிப்புக்களின் இரகசியங்களை
நானுக்கு கற்பித்து தருகிறேன் வா

எனக்கு குரு, கடவுள், காலம்
எனப்பெயர்கள் பலவுண்டு
என்னோடு சுமைகளின்றி
தனியனாய், தன்னியல்போடு வா

உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான
வாழ்வியல் பார்வைகளை
மாற்றிக்காட்டுகிறேன்.

7 comments:

பாச மலர் / Paasa Malar said...

//எந்த ..யிஸங்களின்
வர்ணப்பூச்சுக்களும் இன்றி
தன்னியல்போடு மட்டுமே
என்னோடு வா//

//எனக்கு குரு, கடவுள், காலம்
எனப்பெயர்கள் பலவுண்டு
என்னோடு சுமைகளின்றி
தனியனாய், தன்னியல்போடு வா//

தனித்துவம் வாய்ந்த தன்னியல்பு எவ்வளவு முக்கியம்...அருமையான‌ கவிதை கிருத்திகா.

இரண்டாம் சொக்கன்...! said...

//எனக்கு குரு, கடவுள், காலம்
எனப்பெயர்கள் பலவுண்டு
என்னோடு சுமைகளின்றி
தனியனாய், தன்னியல்போடு வா//

இது..இது...இது...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி மலர், நம் வாழ்வியல் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நம் ஒப்பிட்டு நோக்கும் பண்பும், சார்புற்ற சிந்தனைகளும் தான் என்பது என் தீவிரமான எண்ணம்

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க சொக்கன், தங்கள் வருகைக்கு நன்றி.. "இது..இது...இது..." இதத்தான் நான் எதிர்பார்த்தேன்...

நிஜமா நல்லவன் said...

அருமையான கவிதை வரிகள். உங்க வலைப்பூ பக்கம் முதல்தடவை வந்தேன். சிறந்த தளங்களில் உங்க பக்கத்தையும் சேர்த்து வச்சிட்டேன். ..

முஹம்மது ,ஹாரிஸ் said...

இந்த குழந்தையையும் உங்கள் கவிதை அனைத்து கொள்ளுமா.


பெங்களுறு
ஹாரிஸ்

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க தங்கத்தமிழன்.. நம்மளோடது பெரிய சங்கபலகை மாதிரி எல்லா நட்பு உள்ளங்களுக்கும் எங்கேயும் இடம் உண்டு.....