ஆதிக்கம்
குறிப்புகளுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
அடங்க மறுக்கும்
என் (உன்) இயலாமைகளுக்கு
மறைப்பாய் என் (உன்)ஆதிக்க முகமூடிகள்
நொடியில் மரணம்
ஆயத்தங்களில்லாத புறப்பாடுகளில்
எனக்கு ஆர்வம் அதிகம்
எந்த கடைசி கணங்களின்
பரபரப்புமின்றி
விடைபெறுதல்களின் தொந்தரவுகளின்றி
யாருக்காகவும் எழுதாத வரிகளாய்
எதற்காகவும் காத்திராத
அந்த தனித்தன்மை மிகுந்த பயணங்களில்
எனக்கென்றுமே
ஆச்சரியம் அதிகம்
ரௌத்திரம் பழகு
ரௌத்ரத்தின் வேர்களுக்கு
என்றும் உயிருண்டு – ஆனாலும்
அதன் பாசன மதகுகளின்
தாழ்களுக்கு பெயர்களும் பலவுண்டு
காதல், அன்பு, பொறுமை, பணிவு
இன்னும் புதியதாய்..”தேடல்”
ஆனாலும் ஆணிவேர்களை அசைத்துப்பார்த்து
பேருண்மைகளை வெளிக்கொணரும்
வெள்ளந்தி துரோகங்கள்
என் அத்தனை முகமூடிகளையும்
களவெடுத்து போகும்.
6 comments:
கவிதை வரிகள் நன்றி கிருத்திகா..அதிலும் ரௌத்திரம் பற்றியது சிறப்பு..
நொடியில் மரணம் எனக்குப் பிடித்திருக்கிறது...
நன்றி ஜ்யோவ்ராம்.. சொல்லப்போனால் தங்கள் கவிதைகளை நான் தொடர்ந்து வாசிப்பதுண்டு.. ஆனாலும் பின்னூட்ட சோம்பேரித்தனம் உண்டு. தங்கள் வருகைகு நன்றி..
நன்றி பாசமலர்.. தங்களது பட விமர்சன பதிவிற்கு பின்னூட்டமிட எண்ணிய வேளை உங்கள் வருகை.. நன்றி.. நல்ல பதிவுகளை மேலும் தர வாழ்த்துக்கள்...ரொம்ப சீக்கிரம் நிறைய பேருக்கு தோழி ஆகிட்டீங்க...
நல்ல தமிழில், நல்ல சிந்தனையில், எழதப்படும் இது போன்ற கவிதைகளை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது…
நல்ல கவிதை வாழ்த்துக்கள்,
தினேஷ்
வாங்க தினேஷ், நன்றி..
Post a Comment