Sunday, January 20, 2008

என்ன படிக்கலாம் – 10 வது வகுப்பிற்கு பிறகு - எங்கள் வீட்டு இளவரசனுக்காக


தொலைக்காட்சிகளும், புத்தகங்களும் எத்தனையோ தொகுப்புக்களை வெளியிட்டாலும், ஒரு பெற்றோரின் பார்வையில் அவைகள் முற்றுப்பெறாத செய்திகளாகவே தான் உள்ளது, அவைகள் அந்தந்த ஊடகங்கள் முன்னிறுத்த எண்ணும் கல்வி நிறுவனங்கள் சார்ந்ததாகவே உள்ளது.. (சரி அதுக்கென்ன இப்ப மேட்டருக்கு வாங்கிரீங்களா.. வந்தாச்சு)

என் மூத்த மகன், இந்த வருடம் 10வது தேர்வு எழுதுகிறான், அவன் ஒரு நல்ல கலைஞன், மிக நன்றாக பாடுவான், கீபோர்ட் வாசிப்பான், கணனியில் மிக நன்றாக வரைவான், போட்டா ஷாப் போன்ற சமாசாரங்களில் நல்ல பரிச்சியமும் அது சார்ந்த ஓரிரு தனிப்பயிற்சி வகுப்புக்களிலும் தேர்ந்துள்ளான் அதனால் அந்த துறை சார்ந்த ஒரு படிப்பு அவனின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் என்பது எங்கள் எண்ணம், (he is creative but cant under go heavy stream of studies)மேலும் அவனால் ஒரு தீவிர இயற்பியலிலோ, அல்லது, வேதியலிலோ முழு கவனம் செலுத்தி படிக்க முடியாது அதனால் ஒரு செய்முறை பயிற்சி சார்ந்த கிரியேட்டிவ் பாடங்களே அவனுக்கு ஏற்றதாய் இருக்கும் என்பது எங்கள் எண்ணம். எனவே மீடியா, கம்யூனிகேஷன், அட்வெர்டைசிங் சார்ந்த துறைகளில், 10வது முடித்து ஒரிரு வருடங்கள் ஒரு டிப்ளமோ, பின் மேல் படிப்பு என்பதே எங்கள் திட்டம். (அது அயல் நாடு சார்ந்ததாய் இருந்தாலும் சரி)

என்ன படிக்கலாம் என்று வலையுலகில் தேட ஆரம்பிக்கும் பொழுது தான் தோன்றியது, நமக்கு தான் இப்போது ஒரு மிகப்பெரிய குடும்பம் உள்ளதே (சக பதிவர்களைத்தான் சொல்கிறேன்) பல பதிவர்கள், படித்துக்கொண்டோ, இல்லை படித்து அத்துறைகளில் பணியாற்றிக்கொண்டோ இருப்பீர்கள் தானே அதன் மூலம் அதன் தேவைகளையும் அத்துறை சார்ந்த படிப்புகளையும், அதறகான நல்ல கல்லூரிகளையும் அறிந்திருப்பீர்கள் எனவே உங்கள் ஆலோசனகளும், விபரங்களும் எங்களுக்கு அவனை வழிகாட்ட உதவும்.


எனவே இதனால் அறிவிப்பது என்னவென்றால் எல்லாரும் படிச்சிட்டு வேகமா ஒரு நல்ல பின்னூட்டமிடுங்கப்பா...

9 comments:

Jayaprakash Sampath said...

நல்லா விஷயம் தெரிஞ்சவங்களும் இருக்காங்க... இருந்தாலும் என் பங்குக்கு ஒண்ணு ரெண்டு ஐடியா :

கலை தொடர்பான படிப்புகளில் பெரும்பான்மையானவை, இப்போது mainstream format இலேயே கிடைக்கிறது. ஆனால், அதற்கு பன்னிரண்டாவது வகுப்புத் தேர்ச்சி அவசியம். ஆகவே, பள்ளி இறுதி முடித்த பிறகு மேல்படிப்பைத் தேர்வு செய்வதே சரியாக இருக்கும்.

ஓவியம், வெப் டிசைன், graphic design, textile design, pottery, ceramic design போன்ற படிப்புகளுக்கு, அரசு கவின் கலைக்கல்லூரி.

இசைக்கு, இசைக்கல்லூரி, அடையாறு.

திரைப்படத் தொழில்நுட்பங்களுக்கு, தரமணி திரைப்படக்கல்லூரி. SAE போன்ற தனியார் கல்லூரிகளும் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மீடியா, கம்யூனிகேஷன் படிப்புகளுக்கு லயோலாவின் , விஷூவல் கம்யூனிகேஷன் ரொம்ப பிரபலம். சென்னையில், பிற கல்லூரிகளிலும் இந்தக் கோர்ஸ் கிடைக்கிறது.

மேலே சொன்னதை எல்லாம் கூகிளில்போட்டுத் துழாவினால், இன்னும் நிறையத் தகவல்கள் கிடைக்கும். சோம்பல் மூடிலே இருக்கிறேன் :-)

ஆல் தி பெஸ்ட்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி பிரகாஷ், நானும் கூகிள் ஆண்டவரிடம் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.. இப்போதைக்கு சிங்கப்பூர் கல்வி நிலையத்தில் ஒரு லிங் கிடைத்துள்ளது.. இன்னும் நிறைய தேட வேண்டும் இதையும் கணக்கில் வைத்துக்கொள்கிறேன்.. நன்றி மீண்டும்.

manjoorraja said...

//மீடியா, கம்யூனிகேஷன் படிப்புகளுக்கு லயோலாவின் , விஷூவல் கம்யூனிகேஷன் ரொம்ப பிரபலம். சென்னையில், பிற கல்லூரிகளிலும் இந்தக் கோர்ஸ் கிடைக்கிறது.//

இது போன்ற படிப்பு முடித்தப்பின் செய்யும் வேலைகளும் அதிக பதட்டத்தை ஏற்படுத்தக்கூடியவையே. ஏனெனில் இதில் முக்கியமாக கடைசி நிமிடங்களில் தான் (டெட்லைன்) பல வேலைகள் நடக்கும் ஆகவே எப்பொழுதும் பதட்டம் சூழ்ந்தே இருக்கும். போட்டோசாப், வெப் டிசைன் போன்றவை நல்லது தான் ஆனால் கண்ணிற்கும் உடல் நலத்திற்கும் மிகவும் கேடு விளைவிக்கும். அதாவது பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலைகள்.

முடிந்தவரை ஓரளவு உடல் பயிற்சி இருப்பது போன்ற பணிகளில் அல்லது படிப்பில் சேர்வது நல்லது.

அல்லது இந்த துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கும்பட்சத்தில் உருவாக்க இயக்குனர் (கிரியேட்டிவ் டைரக்டர்) போன்ற மேல் நிலை படிப்புகளை படித்தால் ஓரளவு வேலை குறைவாக இருக்கும். மூளைக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்.

இது என் அனுபவத்தில் சொல்வது. மற்றபடி உங்கள் மகனின் விருப்பத்தையும் கேட்டுவிடுங்கள்.
பி.காம் படித்து சார்ட்டர்ட் அக்கெள்ண்டண்ட் அல்லது கம்பென் செகரெட்டரி போன்ற படிப்புகளும் நல்ல படிப்புகளே.

யோசிக்கவும்.

manjoorraja said...

எனது முதல் மடல் என்னுடைய சொந்த கருத்து. உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் விருப்பமானதெயே தேர்ந்தெடுங்கள். இன்னும் பல நண்பர்கள் ஆலோசனை கூறுவார்கள் என நம்புகிறேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இது போன்ற படிப்பு முடித்தப்பின் செய்யும் வேலைகளும் அதிக பதட்டத்தை ஏற்படுத்தக்கூடியவையே. ஏனெனில் இதில் முக்கியமாக கடைசி நிமிடங்களில் தான் (டெட்லைன்) பல வேலைகள் நடக்கும் ஆகவே எப்பொழுதும் பதட்டம் சூழ்ந்தே இருக்கும்" நான் இது வரை பார்த்திராத கோணம்.. அவனிடம் இதைப்பற்றி பேச வேண்டும், மற்றபடி என் எண்ணமும், +2 வில் Accountancy, then B.Com in Loyala (யார் கைல கால்லயாவது விழுந்துதான் வாங்கணும்) பின் HR or Finanace management என்பது தான்.. ஆனாலும் இது ஒரு சிறு முயற்சியே அவனுக்கும் சாதக பாதகங்களை அலசியது போல் இருக்கும் அதனால் தான் இந்த பதிவும் முயற்சியும். மிக்க நன்றி...

தினேஷ் said...

என் கருத்து—தங்களின் மகன் 10-ம் வகுப்பு முடித்தவுடன், அவனுக்கு ஆர்வமுள்ள துறை சமந்தமான படிப்பை 11 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்க வைத்து, 12-ம் வகுப்பிற்கு பிறகு ஆர்வமுள்ள துறை சமந்தமான மேல் படிப்பை தேர்தெடுத்தால் இலக்கை சென்று அடைவது கொஞ்சம் சுலபம். அப்போது போட்டிகள் அதிகமாக இருந்தாலும் சரியான இலக்கை அடைக்கூடிய துறைகளும் வாய்ப்புகளும் அதிகம்.

தங்கள் மகனின் நற்பாதைக்கு என் நல்வாழ்த்துக்கள்…

தினேஷ்

Dubukku said...

//அவனுக்கு ஆர்வமுள்ள துறை சமந்தமான படிப்பை 11 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்க வைத்து, 12-ம் வகுப்பிற்கு பிறகு ஆர்வமுள்ள துறை சமந்தமான மேல் படிப்பை தேர்தெடுத்தால் இலக்கை சென்று அடைவது கொஞ்சம் சுலபம்//
- i feel the same and personally think this is very important.

மேலும் பின்னாடி ஏந்த் துறையில் போனாலும் மேற்படிப்புக்கு குறைந்தபட்ச தகுதியா +2 தேவைப்படும்.

நான் படிக்கும் காலத்தில் அகமதாபாத்தில் முத்ரா இன்ஸ்டியூட் பிரபலமாக இருந்தது. (அப்போது லயோலாவில் மீடியா கோர்ஸ் இல்லை)

http://www.mica-india.net

Dubukku said...

அவனுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கொடுத்ததிலேயே அவன் பாதி கிணற்றை கடந்து விட்டான் என்று என் சார்பாக தெரிவிக்கவும்.

All the very best to him!!

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி டுபுக்கு (இந்த மாதிரி பெயர் வைத்துக்கொள்வதில் உள்ள கஷ்டம் எங்களுக்குத்தான் தெரிகிறது, உண்மை பெயர் தெரியாததால் விளிக்கும் பொழுது சிறிது தயக்கம் வருகிறது).
கடைசியாக +2வில் காமர்ஸ் எடுக்கப்போகிறேன் என்று முடிவு எடுத்துள்ளான்.. பார்க்கலாம். things has to be happen on its stream...