Friday, December 21, 2007

முதன் முதலில் ஒரு மொக்கை - பரீட்சையும் நானும்


எல்லாரையும் போல எனக்கும் பள்ளிக்கூடம் பிடிக்கும், பாடம் பிடிக்கும் ஆனா பரீட்சை பிடிக்காது। நாம யாருங்க? எவ்வளோ பெரியவங்க? புத்திசாலி! இந்த பீசாத்து 3 மணி நேர பரீட்சையா நம்ம புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய முடியும்?? தேர்வுக்கு ஒரு நாள் முன்ன படிக்க அதாவது புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக்கொள்வதேடு சரி. அப்பா அம்மா கேக்கும் போதெல்லாம் ம் படிச்சிட்டேன்॥ இல்ல இந்த தடவ நல்ல மார்க் வரும்.. ஆமா போனதடவ மாதிரி இல்ல என்ற வழக்கமான டயலாக் எல்லாம் விட்டுட்டு ஒரு மாதிரி பொழுத கழிச்சிட வேண்டியது. ஸ்கூலுக்கு போய் கொஸ்டியன் பேப்பர் வாங்கினதும் நம்ம மார்க் கொண்டுபோய் கொடுத்ததும் அம்மா அப்பா முழிப்பாங்களே அந்த மாதிரி திரு திருன்னு முழிக்க வேண்டியது ஏதோ 3 மணி நேரம் கஷ்டப்பட்டு தெரிஞ்சதை, தெரியாததை எழுத வேண்டியது அல்லது எழுதரமாதிரி நேரம் கடத்த வேண்டியது அப்பறம் பிரண்ட்ஸோட (கேள்வித்தாள் பற்றி பேசாத பிரண்ட்ஸோட) வீட்டுக்கு வந்து அடுத்த பரீட்சைக்கு படிக்க???? வேண்டியது. 10 நாள் கழிச்சு மார்க் வந்தா என்ன ஆகும் தனியா வேற சொல்லணுமா??? அப்பா ஒன்னும் அதிகம் சொல்ல மாட்டாரு ஆனா அம்மா அடுத்த பரீட்சை வரைக்கும் சொல்லிக்காட்டிக்கிட்டே இருப்பாங்க அப்பெல்லாம் ரெண்டு காதும் ஒழுங்கா வேலைசெய்யும் அதாங்க இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்றவேண்டியதுதான். அதிலும் கதை புஸ்தகம் எடுத்தா சரியா மாட்டுவேன் ஆனா இதெல்லாம் நம்ம அறிவு பசிக்கு??? தடை போடுமா என்ன? அதுக்கப்பறம் ராத்திரி 2 மணிக்குத்தான் எங்களுக்கு படிகிற மூடு வரும் ஏன்னா அப்பத்தான் அதிகம் தொந்தரவு இல்லாம கதை புஸ்தகம் வாசிக்கலாம். அம்மா ஒரு தடவையோ ரெண்டுதடவையோ தான் எந்திருச்சி வருவாங்க அதுக்குள்ள நாம எவ்வளோ படிச்சிறுவோம்…??? படிச்சி முடிச்சி ஏதோ பாஸ் பண்ணி பெரியாளா ஆயாச்சி!!!!.

ஆனா இப்பத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு அப்ப ஒழுங்கா படிச்சிருக்கலாமோன்னு அடிக்கடி தோணுது ஏன்னா இப்ப என் பசங்களுக்கு பரீட்சைனா நாந்தான் படிக்கறேன் ஒரு பாடம் விடாம எங்கிட்ட கொஸ்டியன் பேப்பர் குடுத்தா நல்லா மார்க் வரும் போல இருக்கு அவங்க படிக்க ஒக்கார்ந்தா கூடவே நானும் படிக்க ஒக்காரரேன் ஏன்னா எனக்குத்தான் தெரியுமே எப்படி படிப்பாங்கன்னு.. ம்ம்ம் எல்லாம் நேரம்தான்.

(மிகவும் பிரயத்தனப்பட்டு முதன் முதலில் ஒரு மொக்கை பதிவு அதுவும் பழகு தமிழில் எழுதியிருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லிடுங்க தங்கங்களா)

10 comments:

நாகை சிவா said...

//இந்த பீசாத்து 3 மணி நேர பரீட்சையா நம்ம புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய முடியும்??//

சரியா சொன்னீங்க :))

//கதை புஸ்தகம் எடுத்தா சரியா மாட்டுவேன் ஆனா இதெல்லாம் நம்ம அறிவு பசிக்கு??? தடை போடுமா என்ன? //

பாட புத்தகத்துக்கு நடுவில் வைத்து படித்த காமிக்ஸ் புத்தங்களுள் எத்தனை, ராஜேஷ்குமார், சுபா கிரைம் நாவல்கள் எத்தனை??? ஹ்ம்ம்ம் அது எல்லாம் ஒரு காலம் :)

//ஆனா இப்பத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு அப்ப ஒழுங்கா படிச்சிருக்கலாமோன்னு அடிக்கடி தோணுத//

உண்மை தான். ஆனா பாருங்கு இது கூட 10, +2 சரியா படிச்சு இருக்கலோமோனு தோணுது ஆனா இந்த எம்.சி.ஏ. படிச்சு எழுத தோண மாட்டேங்குது :(

நாகை சிவா said...

//முதன் முதலில் ஒரு மொக்கை பதிவு அதுவும் பழகு தமிழில் எழுதியிருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லிடுங்க //

இதுவே மொக்கையா, அது சரி...

அப்ப நாங்க போடுவது எல்லாத்தையும் என்னனு சொல்லுவீங்க... நல்லாவே இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க....

ஆடுமாடு said...

நல்லா இருக்குங்க... இதே போல எக்ஸ்பீரியன்ஸை அடிக்கடி எழுதுங்க.

வினையூக்கி said...

:) :) :) :)

ஆதிவாசி said...

murpagal seyyin pirpagal vilayum
aana adulayum oru nanmai irukku parthingala
unga pasangal watch panna mudiyude

கிருத்திகா ஸ்ரீதர் said...

சிவா- ஆஹா இது ஒரு யுனிவர்சல் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும் போல இருக்கே. எம் சி ஏ மூணே மூணு எழுத்து தானே ஒழுங்கா படிச்சிறுப்பா..

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆடுமாடு.. ஆந்தை.. தங்கள் வருகைக்கு நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வினையூக்கி.. நன்றி.. இப்ப இது என்னான்னு கேக்கமாட்டேன் ஏன்னா உங்க மொழி புரிய ஆரம்பிச்சிடுச்சு..

ரூபஸ் said...

//ஏன்னா இப்ப என் பசங்களுக்கு பரீட்சைனா நாந்தான் படிக்கறேன் ஒரு பாடம் விடாம எங்கிட்ட கொஸ்டியன் பேப்பர் குடுத்தா நல்லா மார்க் வரும் போல இருக்கு//

இப்படித்தான் இருக்கு நிறைய பெற்றோர்களின் நிலை

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ரூபஸ் தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும்.