Wednesday, December 19, 2007

கேள்விகள் - பெரும்பான்மையானவர்கள் தங்கள் விமர்சனங்களை உரத்து வெளிப்படுத்துவது ஏன்??



சமீப காலங்களில் என்னுள் புகைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்வி இது. இதற்கு பல பரிமாணங்களில் பதில்கள் இருக்கும் என்றாலும், இது தான் சரி இது தவறு என்று வரயறுத்து பதில் கூற முடியாத கேள்வியாக இருந்தாலும், நம்முள் ஒரு உரத்த சிந்தனையை கிளர்த்து எழுப்ப முடியும் என்றால் அது தான் இக்கேள்வியின் நோக்கமாயிருக்க முடியும்

  1. எந்த ஒரு தனிமனித முயற்சிக்கும் பெரு, சிறு-பான்மை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கருத்து, செயல் சுதந்திரங்கள் உண்டு என்ற கருத்துக்களோடு ஒப்புமை இல்லாதது
  2. மிகவும் உரத்து சொல்வதால் நாம் எளிதாக கவனிக்கப்படுவோம் என்ற உள்மன விழைதல்கள்
  3. தடித்த வார்த்தைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே நம் கருத்துக்களை மற்றவர் முன் நிலைநிறுத்தும் என்ற தவறான முடிவுகள்
  4. ஒப்புமை இல்லாத செயல்களை, கருத்துக்களை, முயற்சிகளை மௌனமாய் அலட்சியம் செய்வது கூட புறக்கணிப்பின் அடையாளம் என்று அறிந்துகொள்ளாதது
  5. எந்த ஒரு வெளிப்பாடுகளிலும் புறம் தாண்டிய அகத்தை தேடி உணரத்தலைப்படுவது
  6. பேருண்மைகளைத்தாண்டிய இயல்புகளை ஏற்றுக்கொள்ளும் எளிமை இல்லாதது
  7. மாற்றுக்கருத்துக்களுக்கான தடங்களை நேசிக்கத்தலைப்படாதது
  8. தான் மட்டுமே என்ற தனிமனித உணர்வுகளோடு மட்டுமே உறவு கொள்வது…


இதற்கான பதில்கள் நீண்டுகொண்டே போகும்.. நான் முன்பு கூறியது போல் இக்கேள்விகள் அதற்கான பதிலின் தேடல்கள் நம்முள் மனிதத்தை மேன்படுத்த பயன்படுமானால் கேள்விகள் வாழ்வின் படிக்கட்டுக்கள் ஆகும் தானே..

2 comments:

தினேஷ் said...

மனிதனுக்கு இயல்பாகவே இருக்கிற இயற்க்கைக்கு விரோதமான தனியுடைமையும், மனிதனுக்கு மனிதன் இடையே எற்ப்படுத்த நினைக்கும் கீழ்மேல் தன்மையும், மனிதனை மனிதன் அடக்கி ஆள நினைப்பதும், சமரசத் தன்மையில்லாததும் தான் மனிதன் இது போன்ற நிலையை ஏற்ப்படுத்தி கொள்கிறான் என்று நினைக்கிறேன்.

தினேஷ்

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி தினேஷ், "மனிதனுக்கு மனிதன் இடையே எற்ப்படுத்த நினைக்கும் கீழ்மேல் தன்மையும்"
உண்மையான வரிகள்.. உணர்ந்து கொள்ளத்தக்க வரிகள்.. நன்றி மீண்டும்..