Thursday, April 3, 2014

இசை எனும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் - இப்போது பாம்பே ஜெயஸ்ரீ

 
 

இசை என்னை ஆக்கிரமிக்கும் விதம் மிகவும் வித்யாசமானது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன் மகவை மட்டுமே நினைப்பது போலவும், மழைக்காலத்திய இரவுகளில் இடைவிடாது நினைவுறுத்தும் குளிரைப்போலவும், கோடை காலத்தின் குளீரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உணர்த்தும் வெப்பத்தைப்போலவும், காதல் வயப்பட்ட மனதைப்போலவும் இடைவிடாது தன்னை நிலைநிறுத்தி என்னை முழுதுமாய் ஆக்கிரகிக்கும்.

சக்கரமணிந்த கால்களைப்போன்ற ஓட்டத்தினிடையேயும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் இசை ஒரு தனி ஸ்துலமாய் அரூபமாய் உடன்வரும்.  யாரும் அறியாமலும் சில சமயம் அறிந்தும் மனதுள் ஓடும் இசை கண்களின் வழியேயும்,  வார்த்தைகளினோடும் வழிந்தோடும். போதை கொண்ட மனதை நெருங்கிய சிலருக்கு அநேக நேரங்களில் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்  மேலும் அந்த நேரங்களில் என் காதுகளில் நிரம்பியிருக்கும் இசை மற்றவர்களையும் கூட தொடக்கூடும். இது ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலத்தைபோல தொடங்கி புயலாய் மாறும். பின் நிலைமை மாறும் மீண்டும் தாழ்வு மண்டலம் உருவாகும் இதுவரை இதன் பின்னிருக்கும் வேதியலை நான் அறிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை.
அதுபோன்ற தொரு இயற்கை சீற்றத்தில் தான் கடந்த சில நாட்களாக நான் பாம்பே ஜெயஸ்ரீ யுடன் வலம்வந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் அதிகமான பாடங்களை கற்றுக்கொண்டிருந்ததொரு காலமது. அதை முழுதாய் அனுபவங்களாய் மாற்றிக்கொள்ளவும் அன்றைய நிதர்சனங்களை பழகிக்கொள்ளவும் முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நான் முதல் முதல் பாம்பே ஜெயஸ்ரீ யை கேட்க நேர்ந்தது.  அன்று முதல் இன்று வரை தியானத்திற்கு ஒப்பான நிமிடங்களை வாரி வாரி வழங்கும் ஒரு அட்சய பாத்திரம் அவரது குரல். பாடல் கேட்டுக்கொன்டிருக்கும் போதே மனம் மிக மிக ஆழத்தில் திம்மென்று அமர்ந்து விடும். பின்பு இது போலஏதாவது வெளியேற்றினாலன்றி நான் நானல்ல.

என்னை முதல் முதலாக வசீகரித்த பாடல்...

4 comments:

Vimala Raju said...

Katrumandalam karkandu mandalam aanadhu, kiruthiga. Nandri.

sury Siva said...


த்விஜாவந்தி ராகத்தில் ஒரு அற்புதமான இசையைத் தந்து விட்டு,
அதில் என் மனதை லயிக்க விட்டு,
உங்களுடைய வர்ணனையைப் படித்தால், அது அந்தக்கால, இறையனார் அகப்பொருள் வரலாறு போல, கொடுந்தமிழில் உள்ளது.
என்னப்போல இருக்க்ற பாமர மக்களுக்கு, பாடறியேன் படிப்பறியேன், பள்ளிக்கூடம் நானறியேன் என்று இருக்கறவங்களுக்கு ,
நீங்க என்னா சொல்றீக அப்படின்னு புரியணும் இல்லயா.
அதுனாலெ உங்க பதிவை இப்ப சனங்க புரிஞ்சுக்கிற விதத்துலே சொல்லி பார்க்கலாம் அப்படின்னு ஒரு முயற்சி பண்ணினேன். அம்புட்டுதான். கோவிச்சுகிடாதீக.

இனி, உங்கள் பதிவின் தமிழாக்கம்.


என்னை எப்படி கட்டிப்போட்டு இருக்குது இந்த பாட்டு ரொம்பவே டிஃபரன்டா இருக்குது . ஒரு பொண்ணு வவுத்துலே இருக்குலே தன் புள்ளையைப் பத்தியே நினைக்குது இல்ல, மழை சோன்னு பெய்யும்பொது குளிரும் வாட்டுது போல, வெய்யிலு தகிக்கையிலே ஏ.சிலே இருந்தாலும் உஸ்னம் தாக்குதுல்லே, அது போல, ஜில் லுனு ஒரு காதலு மனசுக்குள்ளெ வந்து இருக்குது போல, இந்த பாட்டு என் மனசு முழுக்கவே நிரம்பிக்கிடக்குது அதுவும் விடாம புடிச்சுகின்னு.காலிலே சக்கரத்தைக் கட்டிக்கினு ஓடு, அப்பவும் கேட்குற பாட்டு உன்னோட வருது. யாருக்குமே தெரியாம, அப்பப்ப மனசுக்குக்குள்ள ஓடிக்கினே இருக்கும் இந்த பாட்டு தான்யா, கண் வழியாவும் வரும், நம்ம பேசுற வார்த்த வழியாவும் வரும். ஒத்தன் இசையை ரசிச்சுக்கினு இருக்கானா இல்லயா அப்படின்னு அவனு கண்ணே காட்டிக்கொடுத்துடும் அப்படின்னு சொல்றேன்யா.

முதல்லே ஏதோ ரமணன் சார் சொல்ரது போல காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாதிரி தான் இருக்கும். பின்னே தான் அது புயலு. அப்படின்னு புரிஞ்சு போயிடும். புயலு போனப்பறமும் இந்த நிலமை அப்படியே கீதும். இதுலே இன்னா சயின்ஸ் இருக்குது ..இத புரிஞ்சுக்க நான் எப்பவுமே ட்ரை பண்ணினது இல்லைங்க. இது தான் நிசமுஙக.

.

பாம்பே ஜெய்ஸ்ரீ யோட பாட்டு கேட்டுகினே அந்த மாதிரி ஒரு இயற்கை க்கு கோவம் வந்த காலத்துலே நான் பாம்பே ஜெயஸ்ரீ யோட சுத்தி வந்துகினு இருக்கேன்.


லைஃப்லே ஜாஸ்தி பாடங்களை கத்துகினு இருந்த காலத்துலே , அந்த பாடத்தை நம்ம அனுபவமா மாத்திக்கினு, அது தான் நிசமுன்னு தெரிஞ்சுகினு அதுக்கு ஒத்துப்போயிட்டு இருந்த காலத்துலே தான் நான் பாம்பேஜெயஸ்ரியை கேட்க முடிஞ்சுது.
அன்னி லேந்து இன்னிக்கு வரை, அவரு பாட்டு என் மனசு சொல்லுது அது தான்யா தியானம். அந்த தியானத்துக்கு ஒத்தாப்போல இருக்கிற நிமிஷத்தை சும்மா கொடுத்துகினே இருக்கிற அச்சய பாத்திரமுங்க அவரு பாட்டு. அத கேட்டுகினே இரு. மனசு ஏதோ ஒரு ஆழத்துலே அமுங்கிப்போயிடுது. என்ன வெளிலே கொண்டு வர்றவரைக்கும் நான் என்கிட்டயே இல்ல.

என்ன கவர் பண்ணின பாடல் இது தாங்க.

எப்படி !! சரியா இருக்கா ?
த்விஜாவந்திலே கமலு சாரு, விஸ்வரூபம் பாட்டும் அதே ராகம் தான்.
அது சரி, பாம்பே ஜெயஸ்ரீ பாடிய, இத கேட்டு பாருங்க.

https://www.youtube.com/watch?v=XRTr2RfgR6M&list=PL93B184FDBC84AB40

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

கிருத்திகா said...

ஆமாம் விமலா.. நன்றி

கிருத்திகா said...

நன்றி சுப்பு தாத்தா..உங்க தமிழ் நல்லாத்தான் இருக்கு try பண்றேன்!!! thanks for the link.. its some thing new i have'nt heard so far..