Tuesday, February 15, 2011

பெண்பால் கவிதைகள் - 5



இப்படித்தான் ஆகிவிடுகிறது
சில சமயம்

எண்ணுவதற்கு ஏதுமில்லாத சமயங்களில்
எப்போதேனும் வந்துபோகிறதுன் நினைவு

எப்போதும் சுமந்தலைந்தவைகளை
எப்படித்தான் எளிதில் தொலக்கமுடிகிறதென்ற
கேள்விகளுக்கிடையில்

இப்படித்தான் ஆகிவிடுகிறது
சிலசமயம்

*******************
படர்ந்த மாசுகளுக்கிடையில்
அடையாளமற்று கிடக்கும் நீர்நிலையென
உள்ளே உறைந்து போயிருக்கிறதுன் நினைவு

இருண்ட நிலவொளியில் கடந்து போகையில்
நெஞ்சக்கூட்டுக்குள் ஊடுருவும்
ஏரிக்கரைக்காற்று
நினைவுருத்திப்போவது
மாசினடியில் மறைந்திருக்கும்
நீர்நிலையை மட்டுமல்ல

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்ல பிளாக் கலர் மாத்துங்க..

ஜீவி said...

'உன் நினைவுகளையும் தான்..' என்று கடைசி வரியைச் சொல்லாமல், சொல்லாமலேயே புரியவைப்பது தான் இப்படியான கவிதைகளின் இலக்கணமா?.. வேறு ஏதாவது குறிப்பை ஒளித்து வைத்திருக்கிறீர்களா?..