முகமூடிக்கவிதைகள் - 13
எந்த நியதிகளுக்குள்ளும் அடங்க மறுக்கும்
ஒரு சிலரின் நியாயங்கள்
விழி நிரப்பும் சிறு துரும்பென
உறுத்திக்கொண்டேயிருக்கிறது
முகவரிகளுக்கும் முகமூடிக்களுக்கும்
பின்னால் ஒளிந்துக்கொள்ளும் சவுகரியங்களினாலேயே
நிறமாற்றங்களை எளிதில் கண்டுகொள்வதென்பது கடினமாகிறது.
ஆட்டுமந்தைகளென தலையசைத்து போவதற்கு
செவிகளும் விழிகளும் இருந்தென்ன போயென்ன?
எத்தனையோ போதைகள்
பணம் புகழ் பெண்ணென்று,
கூட போர்வைகளெதெற்கு
பண்பு, பாடம், பக்திகளென்று
போர்வைகளுக்குள்ளென்றாலும்
அம்மணமாய் நிற்பது அவமானம் தானென்பது
சிலரது நியாங்களில் இல்லாமல் போகுமோ????
5 comments:
இந்த நியாயங்கள் பல வேளைகளில் இல்லாமல்தான் போகிறது..
//ஆட்டுமந்தைகளென தலையசைத்து போவதற்கு
செவிகளும் விழிகளும் இருந்தென்ன போயென்ன?//
சொல்லடி, சிவசக்தி!-- எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!
-- மஹாகவி
திகா, முகமூடி இல்லையானால் வாழ்க்கை வெகு கடினமாகி போகும்.
மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் பெரும்பாலும் இருப்பார்கள். மாற்றிக்கொள்ள வேண்டியது நம்மைத்தான். அதுதான் முடியும்.
வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....
அழகானகவிதை பெண் மனநிலையை விழித்து ஆண்களின் பார்வையை சொல்லிச் செல்கின்றது கவிதை வாழ்த்துக்கள் தோழி இன்றுதான் உங்களுடன் இணைந்திருக்கின்றேன் .தொடர்ந்து எழுதுங்கள்!
Post a Comment