Saturday, February 12, 2011

முகமூடிக்கவிதைகள் - 12


இப்போதும் முகம் வெளிறிப்போகிறது
என்றோ கண்டுகொள்ளாமல் வந்த

அந்த சிகப்பு சட்டை மனிதனின் சடலமும

கூடவே கிடந்த அவன் வாகனமும்

மனவோரத்தில் நினைவுறும்போது


மனித நேயம் குறித்த எந்த ஒரு

விவாதத்திற்குப்பின்னாலும்

மவுனம் காக்க வைக்கிறதென்

மனநிழலில் கடந்து போகுமிந்த நிகழ்வு


**********************

முனைந்து செய்ய இயலாது
போனவைகளை
பட்டியலிடத் தேடத்

தொலைந்து போனதென்

எழுது கோலும் வெள்ளைதாள்களும்

பிறகென்ன

அத்தனை பாசாங்குகளுக்குள்ளும்

ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது மனது



1 comment:

ஜீவி said...

//..அத்தனை பாசாங்குகளுக்குள்ளும்
ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது மனது..//

இந்த வரிகள் பிடிச்சிருக்கு.

'இப்படியான மனம்!' என்று கண்டு சொல்வது எது?