மிகப்பிரியமான இசையைப்போலவோ
ஆழ்ந்த வாசிப்பானுபவத்தைப்போலவோ
நிரம்பித்ததும்பும் கோப்பையின்
பொன்னிறத்திரவத்தைப்போலவோ
முகத்தில் மோதி விலகும் எதிர்காற்றின்
குளிர்வாடையை போலவோ
எப்போதோ தொலைபேசும்
உற்ற தோழமையை போலவோ
வசீகரத்துடனும் வாதையுடனும்
என்னுள் உன் ஞாபகங்கள்
எப்போதும் சுமக்க வழியோ மனமோ
இல்லையென்றபோதும்
ஏதோ ஓர் மூலையில்
சுகந்தமாய் மணம் வீசும்
குடும்பமாய குதூகலிக்கையிலும்...
6 comments:
நல்லாருக்கு
குடும்பமாய குதூகலிக்கையிலும்...
நேர்மை!
அருமை.
கவிதை முடியலையோ?
கவிதை பிடிச்சிருக்கு, தேர்வு செய்த படமும் மிக அருமை.
சிறுகதைகளில் 'ஓ ஹென்றி' கதைகள்
என்று சிலவற்றைச் சொல்வார்கள். இந்த மாதிரியான கதைகளில் கதையின் கடைசி வரி தான் முக்கியமானது; அந்த கடைசி வரி தான் முழுக்கதையையும் தாங்கிக் கொண்டு நம்மைத் திகைக்க வைக்கும். பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றியின் பெரும்பாலான கதைகள் இத்தன்மைத்தானது ஆனதால், அப்படிப்பட்ட கதைகளுக்கு அவர் பெயரையையே சூட்டி விட்டார்கள்.
இந்தக் கவிதையும் அப்படித்தான்..
மொத்தக் கவிதையையும் அந்த கடைசி வரிதான் தாங்கிக் கொண்டிருக்கிறது..
தரமான கவிதைக்கு வாழ்த்துக்கள்; புத்தாண்டுக்கும் கூட.
என்ன ஆளே கானொம்? நம்ம பக்கம் உடனே வாங்க, வந்து உங்க பொன்னான ஓட்ட போட்டு, சூப்பரா ஒரு கமெண்டும் போட்டு ஏரியாவ கலக்குங்க....
Post a Comment