உள்ளே கனன்று வரும்
பெரு நெருப்பை
அவ்வப்போது விசிறிவிடும்
ஏதோ ஒரு நிகழ்வின்
அடையாளம் தெரியாத
அல்லது
அறிந்து கொள்ள விரும்பாத
அறியாமையின் கணத்தில்
வாழ்கிறது
"பெண்ணென்னும் மாயப்பிசாசு"
**********************
நீவி உடுத்தி
அதரச்சாயமிட்டு
அடர்ந்து
மையெழுதியோ எழுதாமலோ
கண்ணாடி முன்நின்று
அழகிதானடி நீயென
ஒரு முறை பலமுறை
தனக்குள் சொல்லி
பின்
படர்கையில் யாரேனும்
பகர்கையில்
விழியால் செவியுறும்
"பெண்மையின் அழகு"
6 comments:
ஆஹா வித்யாசமான கருத்து, கவிதையும்தான்
கவி"தை"கள் அருமை!... அதிலும் இரண்டாவது மிக அருமை!!
//விழியால் செவியுறும்//
அருமையான வார்த்தைப் பிரயோகம்.
இந்த வரி ஒன்றுதான் மொத்தக் கவிதையையும் தாங்கிக் கொண்டிருக்கிறதோ?
விழியால் செவியுறும் //
அழகான வார்த்தை பிரயோகம். கவிதைகளும் அழகு :)
வித்தியாசமான சிந்தனை கொண்ட கவிதை...
கவிதை நல்லாயிருக்கு.
ஏங்க காதலர்தினமும் அதுவுமா, பெண்களை பிசாசுன்னு சொல்றீங்க.
Post a Comment