Tuesday, August 12, 2008

சில கவிதை முயற்சிகள்




















பெரும் வனப்புக்களை

காட்டி கூட்டி

கூட்டி காட்டியும்

செய்யும் மதர்ப்புகள்

ஏதும் அறியாமலே

செல்கிறது வாழ்க்கை

மிகத்தெளிவாக.


*******************


நோய் வந்துணர்த்தியது

ஒவ்வொருவரும்

தனித்

தனி

என


*******************

திறந்து கிடக்கு

உலகம்

நம்

முன் அனுமானங்கள்

எல்லாம்

சாவித்துவாரத்தின்

வழியாக.

9 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இரண்டாவது & மூன்றாவது கவிதைகள் பிடிச்சிருக்குங்க.

anujanya said...

நன்றாக இருக்கிறது. இரண்டாவதும் மூன்றாவதும் பிடித்தது.

அனுஜன்யா

MSK / Saravana said...

//திறந்து கிடக்கு
உலகம்
நம்
முன் அனுமானங்கள்
எல்லாம்
சாவித்துவாரத்தின்
வழியாக.//

தெளிவான உண்மை..
நல்லா இருக்கு..
:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சுந்தர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி அனுஜன்யா... முதல் முறையா வரீங்கன்னு நினைக்கறேன்... வாங்க..
அப்புறம் இதென்ன சூட்சுமம் ஒரே மாதிரியான இரசனை......

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க சரவணக்குமார். நன்றி தங்கள் வரவிற்கும் எல்லா கருத்துப்பகிர்விற்கும்.

anujanya said...

இல்லைங்க இது இரண்டாவது முறை. நீங்க கந்தர்வ நகரம் எழுதியபோது ஒருமுறை பின்னூட்டம் எழுதினேன்.

எனக்கும் சந்தோஷமான ஆச்சரியம் சுந்தரின் இரசனை எனக்கும் இருந்ததில். நிறைய கவிதை எழுதுங்களேன்.

அனுஜன்யா

காலம் said...

முதல் கவிதை உங்களுக்குள் புதைந்திருக்கும் ஒரு ஆணின் மூளையை காட்டிக்கொடுக்கிறது

நாமக்கல் சிபி said...

அழகான அருமையான கவிதைகள்!

கீப் இட் அப்!