ஒரு வணிகரீதியான வெற்றிப்பட (முன்னாள்) நாயகனாக இருந்தபோது கூட ஒரு சினிமா கதாநாயகனாக எம்மைப் போன்றவர்களை கவரமுடியாத தே.மு.தி.க தலைவர் அவர்கள் அரசியலுக்கு வந்த போது இடைவேளைக்குப் பிறகு வரும் சுவராசியத் திருப்பம் போல் நம்மை எல்லாம் முதுகு நிமிர்ந்து உட்கார வைத்தார் என்பது தான் உண்மை. அரசியல் என்றாலே ஆறு காத தூரம் ஓடும் என்போன்றவர்களுக்கு கூட ஒரு சின்ன நம்பிக்கை (தமிழகத்தை உய்விக்க வந்த நான் லீனியரோ – உபயம் ஜ்யோவ்ராம் சுந்தர் (டைட்டில் மட்டும்))) தந்துதான் வைத்தார்.
ஆனால் இப்போது அவரைச்சுற்றிப் பெருகி வரும் வழக்கமான அரசியல் பந்தானங்களைப் பார்க்கும் போது முளைத்த நம்பிக்கைகள் பொய்யானவையோ என்று தோன்ற வைக்கிறது இங்கு அணிவகுக்கும் கட்டவுட் காலாசாரங்கள்.
அதனனல ஒன்னு செய்யலாம்னு தோணுது நம்ம பதிவுலகலதான் நல்ல பழுத்த அரசியல் வாதிகள்!!!! இருக்காங்களே நாம ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்க கூடாது????? என்ற கேள்வியில் எழுந்தது தான் இந்த புதிய கட்சி.
பெயர் – வலைப்பதிவர் முற்போக்கு முன்னேற்றக் கழகம்.
உறுப்பினர் ஆகத்தகுதி – ஹீ ஹீ இதெல்லாம் சொல்லியா தெரியணும்..
சின்னம் – வேற என்ன கணணிதான்
கொள்கை – இன்னபிற தேவையற்ற இத்யாதிகளை நீங்கதான் சொல்லுங்களேன் ஆலோசித்து முடிவு செய்யலாம்
13 comments:
யக்கோவ் நீங்க பாஸ் :))))
//வ.மு.மு.க"//
வ.மு.மு.கவில் நோ கட்-அவுட்டா???
/ஒரு வணிகரீதியான வெற்றிப்பட (முன்னாள்) நாயகனாக இருந்தபோது கூட ஒரு சினிமா கதாநாயகனாக எம்மைப் போன்றவர்களை கவரமுடியாத//
எங்களையெல்லாம் நல்லா கவர்ந்தாருங்க :))
கிருத்திகா:அரசியல் என்றாலே ஆறு காத தூரம் ஓடும் என்போன்றவர்களுக்கு கூட ஒரு சின்ன நம்பிக்கை (தமிழகத்தை உய்விக்க வந்த நான் லீனியரோ – உபயம் ஜ்யோவ்ராம் சுந்தர் (டைட்டில் மட்டும்))) தந்துதான் வைத்தார்.
வி.காந்த்:இன்னுமாடா இவனுங்கலாம் என்னை நம்ப்புறாங்க...
கட்சி அல்லக்கை: தல அது அவனுங்க தலைவிதி ...வேற வழி :-))
கட்சிக் கொள்கைகளை முடிவு பண்ணிறதுக்கு முன்னாடி, முதல்ல தொகுதிப் பங்கீடு பத்து முடிவெடுத்துட்டா நல்லது. இல்லாட்டி, கூட்டணியில இருந்து நாங்க விலகுறோம்..
அரசியல் கட்சிகளில் சேராமல் அரசியல்,சமுதாய முடிவுகளை மாற்றி அமைக்கும் திறனுள்ள இயக்கம் வெறும் நகைச்சுவையல்ல,நடக்கக் கூடியது தான்.
கைத் தொலை பேசி,செய்தி அனுப்புதல்,பாட்டுக்கள்,முழக்கங்கள் இவையெல்லாம் நிறைய சாதிக்க முடியும்.குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெரும் பல இடங்களில் இது தீர்மானிக்கும் எண்ணிக்கையாக இருக்கும்.அரசியல் கட்சிகளையும் நல்ல வேட்பாளர்களைப் போட்டியிட வைக்கச் செய்யலாம்.
அமெரிக்காவிலே ஆரம்பிக்கப் பட்ட இதே மாதிரி இயக்கம் இப்போது பெரும் வளர்ச்சி யடைந்துள்ளது.
moveon.com
http://moveon.org
வாங்க ஆயில்யன் நான் பாசாயிட்டேனா.. ரொம்ப சந்தோஷம், நோ கட் அவுட், நோ விளம்பரம் அதுக்காக ஆகிற செலவெல்லாம் பண முடிப்பா குடுத்துடனும்.. சரியா.... சின்ன கவுண்டர் படங்களக் கொஞ்சம் சேர்த்துக்கலாம் தான்.....
வவ்வால் என்ன செய்ய நம்பிக்கைகள் தானே நம்மை வாழவைக்கும்.. அது அவங்களுக்கும் தெரிவதனால் தானே ரொம்ப நல்ல ஏமாத்தறாங்க.....
வீரசுந்தர், உடன்பிறப்புக்களின் எதிர்பார்ப்புக்களை எந்த விதத்திலும் கட்சி தலைமை ஏமாற்றாது என்பதை மிகவும் நேர்மையுடன் தெரிவித்துக்கொள்ள யாம் கடமை பட்டுள்ளோம்.....கூட்டணி தர்மத்தை தலைமேற்கொள்வோம். . (உள்ள வந்தபின்ன என்னா செய்யறதுன்னு எங்களுக்குத் தெரியாது...!!!!)
உண்மைதான் தமிழன், இங்குகூட ஐ.ஐ.டி மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு அரசியல் கட்சி தொடங்கினார்கள் அதன் பெயர் கூட பரித்ரானா என்று ஞாபகம் ஆனால் பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ஆனால் இதுபோன்ற சாத்தியக்கூறுகள் மட்டுமே நம் எதிர்காலத்திற்கான நம்பிக்கை.
ஆஹா..கிருத்திகா..என்ன ஒரு யோசனை போங்க!
அரசியல்வாதிங்க காதில விழுந்துச்சுன்னா கணினிக்குத் தடை/ வலைப்பூவுக்குத் தடைன்னு கிளம்பிறப் போறாங்க போங்க..
அக்கா.. அக்கா.. நான் தான் கோவை மாவட்ட செயளாலர். சரியா? :)
Post a Comment