நாம் மனிதர்கள், தொன்று தொட்டு குழுவாக சேர்ந்து
வாழப் பழகியவர்கள் நொமாடியன்ஸ் வேர் நெவெர் அலோன். குழுவாக வாழ்தல், கூட்டு
விவசாயம், கூட்டுக்குடும்பம் இப்படி வளர்ந்தவர்கள் நாகரீகம் கற்றவர்கள்,
கற்பித்தவர்கள்.
ஆனால் தனித்திரு என்று பல ஞானியர்கள் கூறுவதன்
உட் பொருள் என்ன?? இந்த வாழ்க்கை தவறா? மனிதர்களை புறக்கணித்து சென்றுவிடு என்பதா?
இதுதான் ஆன்மீகமா?? கேள்வி வரும்.
இல்லை, கூடி
வாழ்தலும், இணைந்து இயைந்து வாழ்தலும் புற வாழ்க்கைக்கு உண்டான காரியங்கள். அதுவே
அழகு, அங்கணம் வாழ்வது கடமை, ஆனால் அகவாழ்வென்பது வேறு, அக வாழ்விற்கு உள்ளே தனித்திருத்தலும், சுயமாய்
சிந்திப்பதும் பெரும் கூட்டத்தினிடையேயும் நம் உள் மன கட்டளைகளை புரிந்து கொள்ளும்
நிசப்தத்தை கொண்டிருப்பதுமே உகந்தது இதையே தனித்திரு என்கிறார்கள் அறிந்தவர்கள்.
மற்றவர்களின் பார்வைகள் நம் என்ன ஓட்டத்தை
தூண்டலாம் ஆனால் கட்டுபடுத்தலாகாது. ஒருவருக்காக ஒருவர் முடிவெடுக்க முடியுமானால் தனித்தனி மனமும் மூளையும் எதற்கு.
ஒத்த எண்ணம் கொண்டிருப்பது வேறு ஒரே எண்ணம் தான் என்பது வேறு. அது தவறு..
ஒருவரைப் பற்றிய விமர்சனங்கள் கருத்துக்கள்
பேசப்படும் பொழுதே இதன் அடுத்த பாகத்தை அதன் மற்றொரு முகத்தை சிந்திக்க தவறுபவர்கள் இந்த குழு முடிவுகளுக்குள்
சிக்கிக்கொள்ளும் ஆபத்துண்டு. எவரையும் புரிதலின்றி கேட்டறிந்தவற்றின் மூலம்
தவறாகவோ சரியாகவோ உணர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.
எதையும் எவரையும் தன் சிந்தனையின் துணை கொண்டு
அனுபவத்தின் பலம் கொண்டு புரிந்து கொள்ளத்துவங்கலாம். கோடு தாண்டி யோசிக்கலாம். சில சமயம் நம்
யோசனையின் முடிவும் அதாகவே இருக்கலாம் அப்போதும் அதன் சரி தவறுகளுக்கு நாமே
பொறுப்பாகலாம்.
இங்கு துவங்கலாம் மானுடத்தை, ஆன்மீகத்தை
1 comment:
எங்கே வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் மற்றவர்களும் எங்கு தொடங்கியிருக்கிறார்கள் என்று ஒரு எட்டு பார்த்து விட்டு வருவது தொடங்குவதற்கு பலனளிக்கும்.
Post a Comment