முகநூலில் நான் அதிகம் பார்த்து வியப்பது
நட்பு வட்டங்கள் புழங்கும் தன்மையை குறித்துத்தான்.
ஒரூ சாரார் தான் சொல்வது மட்டுமே சரியெனத்
தோன்றும் வண்ணம் எழுதுவதும். அதற்கு மாற்று கருத்தென ஒன்று வருமென்றால் அதைக்
குறித்து விவாதிக்க மனமின்றி பொது வெளியில் அவர்களை மிகவும் எளிதாக அநாயசமாக
அவமதித்து விடுகின்றனர். அப்போது இது அவர்கள் அறிந்து ஏற்றுக் கொண்ட நட்பு
என்பதையும் அந்த மனிதர்களுக்கு என ஒரு பொது வெளி உண்டு என்பதையும் மறந்து ஏதோ
அவரவர்கள் வீட்டு வரவேற்ப்பரையில் அந்த இருவர் மட்டுமே இருந்து விவாதிக்கும்
பொழுது கருத்து சொல்வதைப் போல பதிலளித்து விடுகின்றனர். அந்த சமயத்தில் கூட மற்றவர் முகமும் மனதும்
கோணும் அளவிற்கு நாம் பேசுவதற்கு முன் யோசிக்கத்தானே செய்வோம்?
மறு சாரார் அது ஆணாகட்டும் இல்லை பெண்ணாகட்டும்
ஒரு மிகச்சாதாரண கருத்துக்கு கூட, பத்திக்கு கூட ஆஹா ஓஹோ என்று ஒரு மிகப்பெரும்
இலக்கிய படைப்பிற்கு நிகராக புகழ்வதும் பொது வெளி என்பதையும் மறந்து வெளிப்படையான
முகஸ்துதி பாடுவதும் மிகுந்த நாடகமாகப் படுகிறது. சரி இவர்கள் மிகவும் திறந்த
மனதுடையவர்கள் மிகச்சிறிய விஷயத்தையும் ஸ்லாகித்து பாராட்டி ஊக்குவிக்கும்
குணமுடையவர்கள் என்று எடுத்துகொண்டால் இதை தங்கள் சொந்த வாழ்விலும் செய்கிறார்களா?
என்ற கேள்விக்கு பெரும்பாலும் பதில் இல்லை என்பதாகவே வருகிறது. அப்போது பொது
வெளியில் அவர்கள் முகமூடிகளுக்கு
கிடைக்கும் மலின வெளிச்சம் பற்றிய விழிப்பு உணர்வு கூட இல்லாதவர்கள் உடனா நம்
நட்பு பாராட்டுகிறோம். என்ற கேள்வியும் எழுகிறது.
அடுத்த வகை, தான் சொல்ல நினைக்கும் கருத்தை
மிகவும் வேகமாக சொல்கிறேன் என்று நாலாம் தர குணமுடையவர் தெருவில் நடைபெறும்
சண்டையின் பொது உபயோகிக்கும் சில தரம்குறைந்த எடுத்துக்காட்டுக்களை கையாள்வது போல
வெகு இயல்பாக வார்த்தைகளை சேற்றை இறைப்பதைப் போல இறைத்துவிடுகிறார்கள் அது இன்னும் ஆச்சர்யமாக உள்ளது. ஒரு ஆண் ஒரு பெண்ணின்
கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து பேசுவதை விட தாழ்வாக ஒரு பெண்ணால் மற்றொரு
பெண்ணைக் குறித்து எழுத/பேச முடியுமானால் நாம் என்ன விதமான கலாச்சாரத்தில்
சிக்கியிருக்கிறோம். “Call a Spade is
a spade”
but we also should be careful how this is being addressed by us. இதில் நமது கண்ணியமும் அடங்கியிருக்கிறது என்ற எண்ணம்
தோன்றுவதில்லையே ஏன்?
இது அவரவர் வீட்டு வரவேற்பறை தான் ஆனாலும் அதில்
காமரா வைத்து உலகிற்கு பகிரத் தொடங்கியபின் சில கண்ணியப் போக்குகளை கடை பிடிக்க
வேண்டும் என்ற அடிப்படை விதிகளை நாம் அறிந்து கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.
நம்
நம்பிக்கொண்டிருக்கும் பரந்து பட்ட விசாலமான படிப்பறிவும், அனுபவமும் சமூக அந்தஸ்த்தும் இதற்கு துணை
புரியாதா?
Disclaimer J
இந்த பத்தி உண்மையாக விமர்சிப்பவர்களுக்கும்
மேலே குறிப்பிட்ட அடிப்படை விதிகளை பின்பற்றுவர்களுக்கும் பொருந்தாது. இது
யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதியதல்ல. ஏன் சொந்த வியப்பு காரணமாக என்னில் எழுந்த கேள்வி. பொதுவில் வைக்கிறேன்.
No comments:
Post a Comment