நான் புத்தகங்கள் வாசிக்க துவங்கிய வயது ஞாபகம்
இல்லை சிறு வயது முதலே அப்பாவுடன் நூலகத்தில் கழித்த சாயங்கால வேளைகளும் விடுமுறை
நாட்களின் மதிய வேளைகளும் எனக்கு புத்தகங்களை பழகித்தந்திருந்தது. நான் நான்காவது,
ஐந்தாவது படிக்கும் காலத்திலேயே தொடர்கதைகள் வாசித்து அதற்காக அம்மாவிடம் அடி வாங்கிய
ஞாபகம் உண்டு.
ஆனால் என் பிள்ளைகளில் பெரியவன் மிகவும்
தாமதமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தான். ஆனால் இப்போதெல்லாம் புத்தகங்கள் வாசிக்காத
இரவுகளே இல்லை என்றாகி விட்டது. ஆனால் அவனது விருப்பம் சமீபத்திய இந்திய ஆங்கில
எழுத்தர்களின் படைப்புகள். இப்போது தேடித் தேடி படிப்பது தேவதூத் பட்நாயக்கும்,
அமிஷ் திரிபாதியும் தான்.
சின்னவன் முற்றிலும் வேறாக உள்ளான். ஒரு மாதம் பார்த்தால்
பெரி மேசன் சீரிஸ் புத்தகங்களோ அல்லது ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்காளாக இருக்கும். மறு
மாதம் பார்த்தால் ஏதாவது அறிவியல், புவியியல் அல்லது மெஷினரி சம்பந்தமான புத்தகமாக
இருக்கும்.
ஆனால் இவர்கள் பார்க்கும் படங்களும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒன்றாகவே இருக்கும் இரசித்து இரசித்து இவர்கள்
பார்க்கும் படங்களில் கீழே உள்ள சப் டைட்டில் பார்க்க விட்டால் நமக்கு சத்தியமாக
ஏதும் புரியாது.
நேற்றைய உரையாடலில் திடீரென சின்னவன் கேட்டான்.
அம்மா நீ எப்ப ஆங்கில புத்தகங்கள் வாசிக்கத் துவங்கின? எதுல ஆரம்பிச்சன்னு. எனக்கு
சொல்ல கொஞ்சம் வெக்கமா இருந்தது நா மொத மொதல்ல வாசிச்ச ஆங்கில புத்தகம் மில்ஸ்
அண்ட் பூண் சீரிஸ் தான்னு அதுவும் கல்லுரி போய்த்தான்னு.
ஒரு வேளை பொம்பளை பிள்ளையா இருந்திருந்தா சுலபமா
இருந்திருக்குமோ?? ஆம்பிளை பசங்க மில்ஸ் அண்ட் பூண் வாசிக்க மாட்டாங்களா??
ஆம்பிளை பசங்க மில்ஸ் அண்ட் பூண் வாசிக்க
மாட்டாங்களா??
No comments:
Post a Comment