Showing posts with label அஷ்டபதி. Show all posts
Showing posts with label அஷ்டபதி. Show all posts

Saturday, December 20, 2014

அஷ்டபதி – 2 – ஸ்ரித கமலாகுச – யது குல நாயகன்

śrita-kamalā-kuca-maṇḍala dhta-kuṇḍala e
kalita-lalita-vana-m
āla
jaya jaya deva hare

மலர்ந்த தாமரை போன்ற பாதங்களை கொண்டவனே, அழகிய அணியாக காதில் குண்டலங்களை அணிந்திருப்பவனே, வனத்தில்  அன்றலார்ந்த நறுமணமிக்க மலர்களை மார்பினில் மாலையாக சூடி இருப்பவனே – கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்.

dina-mai-maṇḍala-maṇḍana
bhava-kha
ṇḍana e
muni-jana-m
ānasa-hasa
jaya jaya deva hare ||1|
சூரியனைபோன்ற பிராகசமான வதனத்துடன் உன் அன்பான பார்வை கொண்டு பாலையும் நீரையும் தெளிந்தறியும் திறனுள்ள அன்னத்தைபோன்ற வாழ்வை கொண்டிருக்கும் ஞானியர்க்கு உய்விக்கும் வழியை நல்குபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்  

kāliya-via-dhara-gañjana
jana-ra
ñjana e
yadukula-nalina-dine
śa
jaya jaya deva hare
கொடிய விஷமுள்ள சர்ப்பமான காளிங்கனை சம்ஹரித்தவனே, எல்லா மனிதர்களுக்கும் உவப்பானவனே, யதுகுலத்து நாயகனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

madhu-mura-naraka-vināśana
garu
āsana e
sura-kula-keli-nid
āna
jaya jaya deva hare ||3||
மது, முரா, நரகாசுரா ஆகிய அரக்கர்களை அழித்தவனே, கம்பீரமான கருட வாகனத்திலமர்ந்தவனே, உலகின் எல்லா உன்னதமான சந்தோஷங்களையும் தருபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

amala-kamala-dala-locana
bhava-mocana e
tribhuvana-bhuvana-nidhāna
jaya jaya deva hare ||4||
மலர்ந்த தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவனே, கண்ட மாத்திரத்தில் சகல பாவங்கலிளிருந்தும் முக்தி அடையச் செய்பவனே மூவுலகங்களையும் ஆள்பவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

janaka-sutā-kta-bhūaa
jita-d
ūaa e
samara-
śamita-daśa-kaṇṭha
jaya jaya deva hare ||5||
தசமுகனான இராவணனை வென்ற ஒப்பற்ற ஜனக குமாரனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

abhinava-jala-dhara-sundara
dh
ta-mandara e
śrī-mukha-candra-cakora
jaya jaya deva hare ||6||
கார்மேக வர்ணனே, மந்தர மலையை தாங்கியவனே, சந்திர வதனனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

tava caraa praatā vayam
iti bh
āvaya e
kuru ku
śala praateu
jaya jaya deva hare ||7||
குரு குலத்தோன்றலே, உன் காலடிகளில் என்னை சமர்ப்பிக்கிறேன் கருணை கொண்டு எனை எடுத்தாளு - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

śrī-jayadeva-kaver ida
kurute mudam e
ma
galam ujjvala-gīta
jaya jaya deva hare ||8||
இந்த ஜெயதேவன் இயற்றிய அன்பால் ஒளிர்கின்ற பாமாலையை உனக்கு அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வாய் - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

 

Wednesday, December 17, 2014

அஷ்டபதி - 1 - பிரளய பயோதிஜலே - அண்டத்தை ஆள்பவன்


 
Pralaya-payodhi-jale dhruta vanasi vedam
Vihita-vahitra-charitramakhedam
Keshava dhruta-meena-sarira jaya jagadisa hare 1
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே, மச்சமாக (மீனமாக) உருவெடுத்து வந்து வேதங்களை பிரளய காலத்தில் ஊழியில் இருந்து படகைக் கொண்டு மீட்பதுபோல் காத்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Kshitirathi vipulatare tisthtati tava prushte
Dharani-dharana-kina-chakra-garishte ,
Keshava dhruta-kachapa-sarira jaya jagadisa hare 2
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வாசுகியை கயிறாக்கி  வடகரையை மத்தாக்கி இந்த உலக நன்மைக்காக அமிர்தம் கடையும் பொழுது அந்த மிகப்பெரும் மலை அமிழ்ந்து போகாது கூர்மமாக (ஆமையாகவந்து) வந்து அந்த மாபெரும் மலையை ஒரு சக்கரத்தைப் போல சுழலச்செய்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Vasati dasana-sikhare dharani thava lagna
Sasini kalanka-kaleva nimagna
Keshava dhruta-sukara-rupa jaya jagadisa hare 3
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வராகமாக வந்து இந்த பூமி உருண்டையை உன் தந்தத்தினால் தாங்கி நிலவுக்குள் இருக்கும் நிழலைப் போல காத்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Thava kara-kamala-vare nakha madbhuta-srngam
Dalita-hiranyakasipu-thanu-bhrngam
Keshava dhruta-narahari-rupa jaya jagadisa hare 4
கேசவா, இந்த மிகப்பெரும் பால்வெளியை ஆள்பவனே நரசிம்ஹமாக வந்து உன் தாமரை போன்ற கைகளில் உள்ள கூர்மையான நகங்களையே கொடூரமான ஆயுதமாக்கி ஹிரண்யகசிபுவை கிழித்து எறிந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Chalayasi vikramane balimadbhuta-vamana
Pada-nakha-nira-janita-jana-pavana
Keshava dhruta-vamana-rupa jaya jagadisa hare 5
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வாமனனாக வந்து உன் பெரும் புண்ணிய பாதங்களின் மூன்றடி மூலமாக மஹாபலியை சாமர்த்தியமாக வீழ்த்தியவனே இந்த உலகினரின் அனைத்து பாவங்களையும் கழுவும் வல்லமை படைத்த கங்கையை உன் கால் நகங்களிலிருந்து தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Kshatriya-rudhira-maye jagad-apagata-papam
Snapayasi payasi samita-bhava-tapam
Keshava dhruta-bhrgupati-rupa jaya jagadisa hare 6
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பரசுராமனாக அவதரித்து இந்த உலகோரின் பாவங்களை உன் ஷத்ரிய இரத்தத்தினைச்சிந்தி துடைத்து வாழும் வழிசெய்து தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Vitarasi dikshu rane dik-pati-kamaniyam
Dasa-mukha-mauli-balim ramaniyam
Keshava dhruta-rama-sarira jaya jagadisa hare 7
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே ராமனாக அவதரித்து  தசமுக இராவணனை அழித்ததின் மூலம் இந்த உலகிற்கு நன்மை தீமைகளை வழிகாட்டித் தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Vahasi vapusi visade vasanam jaladabham
Hala-hati-bhiti-milita-yamunabham
Keshava dhruta-haladhara-rupa jaya jagadisa hare 8
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பலராமனாக அவதரித்தா போது யமுனை உன் பராக்கிரமம் அறியாது உனது ஆணைக்கு கீழ் படிய மறுத்து  பின் உனை உணர்ந்து உன் ஆயுதத்தின் மகிமையுனர்ந்து தன்னை சரணாகதி செய்து உனக்கு நீல நிற துகிலை அளிக்கச் செய்தவனே ,  அந்த துகிலை உன்னுடைய வெண்ணிற உடலில் அணிந்து தேவலோக வெள்ளை யானையைப் போல் ஒளிவிட்டவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Nindasi yajna-vidher ahaha shruti-jatam
Sadaya-hrdaya darsita-pasu-ghatham
Keshava dhruta-buddha-sarira jaya jagadisa hare 9
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பூத உடம்பெடுத்து  கிருஷ்ணனாக அவதரித்து ஜீவ உயிர்களை பலியாக்குவதிலிருந்து காத்து சகல உயிர்களையும் இரட்சித்தவனே  உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Mleccha-nivaha-nidhane kalayasi karavalam
Dhumaketum iva kim api karalam
Keshava dhruta-kalki-sarira jaya jagadisa hare 10
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே கலியுகத்தின் முடிவில் உன்னுடைய கூர் வாள் கொண்டு உலகின் சகல அசுத்தங்களையும் எரிதழல் போன்ற உன் சொருபத்துடன் அழிப்பவனே  உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Sri-jayadeva-kaver idam uditam udaaram
Srunu sukha-dam subha-dam bhava-saram
Keshava dhruta-dasa-vidha-rupa jaya jagadisa hare 11

இவ்வாறு இந்த ஜெயதேவனுக்கு உன் மேலான தசாவதார மகிமைகளை உணரச்செய்தவனே நீயே இந்த உலகை வெற்றி கொள்பவன்..
 
 இந்த இசை காணொளியை இணையத்தில் பதிந்திருக்கும்  திரு ராமசந்திரன் - எஸ்  அவர்களுக்கு என் நன்றி.

Tuesday, December 16, 2014

மார்கழியும் – ஆத்தூரும் - ஜெயதேவரின் அஷ்டபதியும் – ராதையும்



சிறு வயதில் மார்கழி மாதம் படு கொண்டாட்டமான மாதம். அதிக விடுமுறைநாட்கள், சாஸ்தா கோவிலில் ஐய்யப்ப மண்டல பூஜை, காலை வீதி பஜனை, சிவனுக்கு திருவாதிரைத் திருநாள், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, கூடவே கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் என்று மிகவும் சந்துஷ்டியான மாதங்களில் ஒன்று மார்கழி.

இதையெல்லாம் தாண்டி அநேகமாக அனைவரும் காலையில் கோவிலுக்குப் போகும் பழக்கமும் உண்டு. ஒரு சிலர் கோவிலுக்குப் போகுமுன் வீட்டில் பூஜை முடித்து விட்டு செல்வதும் உண்டு. அம்மா கண்டிப்பாக பூஜை முடித்துவிட்டுத் தான் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பார்கள். எனவே எல்லா நாளும் காலையில் குறைந்தது நாலு மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு (அக்காவின் வேலை)  வீடு துடைத்து மெழுகி கோலமிட்டு (என் வேலை), குளித்த பின் விளக்கேற்றி விட்டு நான் அக்கா அம்மா மூவரும் திருப்பாவையும், அஷ்டபதியும் பாடி பூஜை செய்து விட்டு கோவிலுக்கு செல்வோம். இருபத்து நாலு அஷ்டபதியும் முடிந்தவுடன் ராதா கல்யாணமும் உண்டு. சில சமயம் கிராமத்தில்  பலர் சேர்ந்தும் செய்வதுண்டு இல்லையென்றால்  தனித்து எங்கள் வீட்டு மட்டத்தில் செய்வதும் உண்டு. மொத்தத்தில் மார்கழி எங்களுக்கு கீத கோவிந்த மாதம்.

அஷ்டபதி பாடுவதில் பல பாணி உண்டு, அம்மா கற்றுக்கொண்டது மிகவும் எளிமையாக இருக்கும். இதனால் அம்மாவிடம் எங்கள் கிராமத்தில் இருந்து அனேகம் பேர் வந்து கற்றுக்கொள்வதுண்டு.  நானும் அக்காவும் எந்த ஸ்லோகமும் அம்மாவிடம் நேரடியாக கற்றுக்கொண்டது கிடையாது ஆனால் அம்மா பாடப்பாட எங்களுக்கும் பாடமாகிவிட்டது. அது மிகப்பெரும் கொடை. அதில் ஜெயதேவரின் அஷ்டபதி சிறு வயதிலிருந்தே மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

திருமணத்திற்கு பின் இந்த மாதத்தில் ஸ்ரீ வீட்டு வழக்கப்படி திருப்பாவையும் கீதையும் உரையுடன் ஸ்ரீ வாசிப்பதுண்டு. அஷ்டபதி நின்று போனது. கடந்த சில வருடங்களாக (நமக்கும் வயசாகிவிட்டதில்லையா) இது ஒரு குறையாகத் தோன்றத் துவங்கவே பாடம் மறந்து போகாமலிருக்க அவ்வப்பொழுது பாடிப் பார்ப்பதுண்டு.

இன்று அதிர்ஷ்டவசமாக நாங்கள் கற்றுக்கொண்ட பாணியில் இணையத்தில் காணொளி கிடக்கவும் ஒரு சிறு முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.

இன்றிலிருந்து ஒவ்வொரு அஷ்டபதியாக வரிகளோடும் தமிழ் அர்த்தத்தோடும் இசையோடும் பதிய முயற்சிக்கின்றேன் பெருங்கருணையின் துணைகொண்டு எப்பொழுது முடிக்க முடிகிறதோ பார்க்கலாம்.

கோவிந்தா, கிருஷ்ணா வாசுதேவா, ரிஷிகேசா பத்மநாபா, தாமோதரா  ஜெயதேவருக்கு அருளியது போல் என்னோடும் இரும்.

- எனக்குள்  எப்பொழுதும் ஒளிந்திருக்கும் ராதை இப்போது அதிகம் ஆக்கிரமிக்கிறாள்.