இப்போது என் கேள்வி, இது போன்று வயதானவர்களைக்குறித்தும் நமக்குத் தோன்றுவதுண்டா?
எது போன்ற தருணங்களில் ? உதாரணத்துக்கு
- பத்து வயதில் ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடலாம், அதையே 20 வயதிலும் செய்யும்போதாக இருக்கலாம்
- 15 வயதில் சாக்லேட்டிற்காக சண்டை போடலாம், உயிரே அதுதான் என்று சாப்பாடு கூடத்தேவையில்லாமல் சாக்லேட்டோடு உயிர் வாழலாம் 40 வயதிலும் அதைத்தொடர்ந்தால்
- 18/20 வயதுகளில் இருக்கும் விடலைத்தனங்களில் இருந்து மீளாமல் மத்யம வயதிலும் அதே போன்ற செயல்பாடுகளோடு இருப்பதை கவனிக்கும் போதாக இருக்கலாம் (எ.டு - நடை உடை பாவனை, கவன ஈர்ப்பு விவகாரங்கள், அதிக நாணல், கோணல், போலியான பணிவு, அடக்கம், போக்கிரித்தனம், குறும்புகள்)
- அறுபது அறுபதைந்து வயதைத்தாண்டிய ஒரு முதியவரோ, மூதாட்டியோ
- மிக ஆர்வமாக சினிமா கிசு கிசுக்களுக்கு விடை கண்டுபிடிக்கும் போதாக இருக்கலாம்,
- சில புலனாய்வுப்பத்திரிகைகளின் வசீகரச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைக்குறித்து விவாதிக்கும் போதாக இருக்கலாம்
- அண்டை வீட்டுக்காரரைப்பற்றியோ அல்லது சில உறவுகாரர்களைப்பற்றிய சிறிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வம்பு பேசும் போதாக இருக்கலாம்
- சில சமயம், தன் உடை அலங்காரத்தைப்பற்றிய அதீத கவனம் கொண்டு போட்டிருக்கும் சட்டையோ, கால்சராயோ/புடவை , ரவிக்கையோ சற்று ஒத்துபோகவில்லை என்பதால் அது குறித்து அதீத கவனம் கொள்ளும் போதாக இருக்கலாம்.
- நன்னா பூரி பண்ணி தொட்டுக்க கிழங்கோட சேர்த்து அன்னிக்கு சப்பாத்திக்கு பண்ணினேயே தக்காளி கூட்டு புளிப்பா அதுவும் சேர்த்து சாப்பிடனும் என்று சொல்லும் போதாக இருக்கலாம்
- தொலைக்காட்சியில் மானாடி மயிலாடி வரும் நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்த்து விட்டு அதன் அங்கத்தனர்களை விமர்சிக்கும் பொழுதாக இருக்கலாம்
இப்படி எத்தனையோ இருக்கலாம்கள் இருக்கும்.
- எனவே இரசனை, நடவடிக்கை என்பதும் அதைத்தொடர்ந்த மனோநிலையும் 20, 40, 60 , 80 களிலும் ஒன்று போல் இருப்பது தவறாகுமா?
- ஒருவருக்கு வயதாகிவிட்டதாலேயே அவர் நமீதாவைக்குறித்தோ, வெங்காய பஜ்ஜி குறித்தோ பேசக்கூடாது அது அவர்கள் வயதுக்கு ஏற்ற செயலல்ல என்று நம்மால் புறங்கூறமுடியுமா?
- இல்லை அவர்கள் சரிதான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா.?
- அனுபவங்களே நம்மை கூறுபோட்டு பக்குவப்படுத்தும் அந்த அனுபவங்களை வாழ்நாள் பொழுதெங்கும் சேகரித்து, வயதாக வயதாக சில வருடங்களுக்குப்பிறகு நாம் ஒரு மனோநிலைக்கு செல்லமுடியும் என்பது சரிதானா?
- அந்த நிலையின் வெளிப்பாடாக நாம் மிகவும் முதிர்ச்சி அடைந்த மனநிலையை எட்டமுடியும் என்பதும் உண்மைதானா?
- அந்த முதிர்ச்சியான மனநிலையில் நம்மைக்குறித்தான அதீக கவலைகளையோ, புற உலகைக்குறித்தான தேவையற்ற விவாதங்களையோ தவிர்த்துவிடுவோம் என்பது நடைமுறையாகுமா?
யோசிக்க யோசிக்க நம்முள் தான் எத்தனை கேள்விகள்????? இந்தக்கேள்விகள் எனக்கானவை மட்டுமல்ல.
கேள்விகள் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுவாசக்குழாய்கள்.
கேள்விகள் 1
கேள்விகள் 2
கேள்விகள் 3
10 comments:
முதிர்ச்சியை தன்னிடம் வளர்த்து கொண்டால் ...
\\யோசிக்க யோசிக்க நம்முள் தான் எத்தனை கேள்விகள்?????\\
ஆரோக்கியம்
நல்ல கேள்விகள்...
ஒரு காலத்தில் சில பிர்பல நடிகைகள் பெயர் தெரியாமல் என் அம்மா தப்பாகக் கூறியபோது..அய்யோ இப்டித் தப்பாச் சொல்றாங்களேன்னு இருக்கும்..இப்போ இது போன்ற விஷயங்களில் அதே தப்பை நான் செய்யும் போது என் மகளும் அப்படித்தான் நினைப்பாளோ ..இது ஏன் என்ற கேள்வி வரும்....
கேள்விகள் இல்லையெனில் வாழ்க்கைக்கு அர்த்தமில்லைதான்...
எந்த எதிர்பார்ப்புமே... தவறுன்னு சொல்ல வரலை; கஷ்டத்தை கொடுக்கும்னு சொல்றேன். இருந்தாலும்.....
1. எனவே இரசனை, நடவடிக்கை என்பதும் அதைத்தொடர்ந்த மனோநிலையும் 20, 40, 60 , 80 களிலும் ஒன்று போல் இருப்பது தவறாகுமா?
சரியில்லைதான். கொஞ்சமாவது முதிரணும்.
2. ஒருவருக்கு வயதாகிவிட்டதாலேயே அவர் நமீதாவைக்குறித்தோ, வெங்காய பஜ்ஜி குறித்தோ பேசக்கூடாது அது அவர்கள் வயதுக்கு ஏற்ற செயலல்ல என்று நம்மால் புறங்கூறமுடியுமா?
+ 3. இல்லை அவர்கள் சரிதான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா.?
வயதுக்கு ஏற்ற செயலல்ல என்று நம்மால் புறங்கூற முடியும். ஆனா அது சரியில்லை. நினைச்சுக்கலாம். எதை ஒத்தர் எதிரே சொல்ல முடியாதோ அதை மத்தவங்ககிட்டே சொல்கிறது சரியில்லை.
4. அனுபவங்களே நம்மை கூறுபோட்டு பக்குவப்படுத்தும் அந்த அனுபவங்களை வாழ்நாள் பொழுதெங்கும் சேகரித்து, வயதாக வயதாக சில வருடங்களுக்குப்பிறகு நாம் ஒரு மனோநிலைக்கு செல்லமுடியும் என்பது சரிதானா?
நிச்சயம்.
5. அந்த நிலையின் வெளிப்பாடாக நாம் மிகவும் முதிர்ச்சி அடைந்த மனநிலையை எட்டமுடியும் என்பதும் உண்மைதானா?
அப்சொலூட்லி.
6. அந்த முதிர்ச்சியான மனநிலையில் நம்மைக்குறித்தான அதீக கவலைகளையோ, புற உலகைக்குறித்தான தேவையற்ற விவாதங்களையோ தவிர்த்துவிடுவோம் என்பது நடைமுறையாகுமா?
ஆமாம்.சந்தேகமில்லை!
நன்றி ஜமால்.. அதுவும் ஒரு வழி..:)
ஆம் மலர், இது போன்று எத்தனையோ விஷயங்களை பிறர் செய்யக்காணும் போது நாம் இந்த வயதில் எப்படி இருப்போம் என்ற கேள்வி எழத்தவறுவதில்லை, சொல்லப்போனால் அதற்கான தேடல்தான் இந்தக்கேள்விகளின் ஆரம்பம்...
நன்றி திவா.. வெகு ஆரோக்கியமாக விவாதங்களை முன்னெடுத்துச்சென்றிருக்கிறீர்கள். இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...
:)
நல்ல பதிவுங்க
ரொம்ப ஆழமா படிக்கனும் போல
மெதுவா படிச்சுட்டு சொல்றேன்
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
இல்லைங்க கிருத்திகா,நான் கொஞ்சம் முரண்படுகிறேன்...
ஏன் வயதானால் ரசனைகள் மாறவேண்டும் என்று நினைக்கிறீங்க?
அனுராதா ரமணன் கதைகளிலோ அல்லது வாஸந்தி கதைகளிலோ சித்தரிக்கப்பட்டிருக்கும் தமன்னா வரைக்கும் புள்ளி விவரத்தோடும் ரசனைகளோடும் பேசும் பாத்திரங்களை நாம் ரசிக்கிறோமா இல்லையா?
அல்லது அது போன்ற திரைப்படங்களில் வரும் பாத்திரங்களை நாம் ரசிக்கிறோமா இல்லையா?
காதலனில் மகனுடன் சரிசமமாக காதலைப் பேசிய அப்பாவைக் கொண்டாடியவர்கள்தானே நாம்?
வாரணன் ஆயிரத்தில் அப்பா சூர்யாவின் பிம்பத்தைப் பார்த்து நம் அப்பா அப்படி இல்லையோ என்று வருந்தியவர்கள் அல்லது ஏங்கியவர்கள் பலர்தானே?
ஆனால் இதிலெல்லாம் நமக்கு ஒரு பாடம் ஒளிந்திருக்கிறது.
நாமெல்லாம் கற்பனையை ரசிப்பவர்கள்;அது நனவில் நமக்கு நடந்தால் பெரும்பாலும் சிணுங்கல்களும் சிடுசிடுப்பும்தான் வரும்.
பாரதியின் கண்ணம்மாவிற்கான காதல் செல்லம்மாவிடம் தொலைந்து போனது போல ஒரு வரலாற்று விசனம் இது...
நம்மால் கனவுகளில் வாழ முடியும்;ஆனால் நனவுகளை கையாள முடியாது.
ஏன் வயதானவர்கள் மானாட மயிலாடவை ரசிக்கக் கூடாது?
ஏன் அவர்கள் கார சாரமாக பூரி சாப்பிட விரும்பக் கூடாது?
ஆனால் ரோஜாவில் மாத்திரம் குழிப்பணியாரம் கேட்கும் இதய நோயாளியான வயசாளியை நாம் ரசிக்கிறோமே?
முரண்பாடு நமக்குள்தானே?????
Post a Comment