Tuesday, July 5, 2016

குகைப் பெருமாள் ஸ்வாமி - ரெட்டியார் மடம் - பகுதி - 1



இன்று காலை கோடிஸ்வாமிகள் தரிசனம் வேண்டி புரவிப்பாளையம் செல்ல வேண்டியது என்ற முந்தைய நாள் முடிவின் படி காலையில் அங்கு செல்ல ஆயத்தமானோம். மனதெல்லாம் ஒரு கூதுகுலம் ஏனெனில் பகவான் யோகிராம் சுரத்குமார் தன் பக்தர்களை புரவிப்பாளையம் சென்று வரப் பணிப்பதுண்டு என்று அறிந்ததால் மனதில் பகவான் ஆஸ்ரமம் செல்லும் எண்ணமே நிரம்பியிருந்தது.
புரவிப்பாளையத்தில் கோடிஸ்வாமிகள் ஆசிகளையும் அதிர்வுகளையும் உள்வாங்கி நிரம்பித் தளும்பி வரும் போது ரகுவின் சேதி வந்தது முடிந்தால் ரெட்டியார் மடம் வழி கேட்டு சென்று வாருங்கள் என்று. இதுவரை நாங்கள் இந்த ஊர் பற்றி கேள்விப்பட்டதில்லை, கூகுள் ஆணடவரை தேடினாலும் ஒரு பதில் இல்லை ரகுவையே மீண்டும் தொடர்பு கொள்ளலாம் என்றால் அவர் லைனில் இல்லை. சரி வழி கேட்டால் ஆநேகம் பேருக்கு பொள்ளாச்சி அருகில் என்பது மட்டுமே தெரிந்திருந்தது.
எப்படியும் தவறவிடக்கூடாது என்ற உள் மன உந்துதல் ஆனால் நிலமை சாதகமாக இல்லை. இதற்கிடையில் ரகுவிடம் இருந்து அது ஜீவ சமாதி ஆனால் எனக்கு வழி சரியாகத் தெரியாது எனப் பதில் வந்தது. சரி பொள்ளாச்சி வந்து கேட்டதும் ரெட்டியார் மடம் பற்றிக் கேட்டால் வழி சொன்னார்கள் ஆனால் ஜீவ சமாதி என்று கேட்டால் ஏதோ புரியதா மொழியில் கேட்ட மாதிரி விழித்துப் பார்த்தார்கள். கொஞ்சம் நம்பிக்கை மீதம் படபடப்பு என்று ரெட்டியார் மடம் தேடி தோழியர்களும் நானும், ஸ்ரீயும் நன்னுவும் வளைந்து நெளிந்து செல்லும் கிரமாத்துச் சாலையில் பயணிக்கத்துவங்கி ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு தடவை வழி விசாரித்துச் சென்று கொண்டிருந்தோம். ஒரு 3 கிலோமீட்டருக்கு முன்பு கேட்ட ஒருவர் ஒரு நம்பிக்கை தந்தார்.
அவர் பெயர் குகைசாமி என்றும் அவரது கோவில் இந்த வழியாகப் போனால் வரும் என்று சொல்ல. முதல் முறையாக மனதில் அமைதி ஏற்பட்டது. அவர் சொன்ன வழியில் செல்கையில் ஒரு இடத்தில் குகை பெருமாள் சாமி கோவில் என்று ஒரு சிறிய ப்ளக்ஸ் பேனர் வழிகாட்டியது அந்த வழியில் திரும்பிய கொஞ்ச நேரத்தில் ஆட்களே இல்லாத ஒரு கோவில் வர இது தானோ என்றபடி உள்ளே சென்றால் முதல் பார்வையிலேயே பார்க்க அது ஒரு பிள்ளையார் கோவில் போலத் தெரிந்தது அக்கம் பக்கம் யாரும் இல்லை சரி என்று வண்டியை விட்டு இறங்காமலே திருப்பி மேலும் கரடுமுரடான மண் பாதையில் பயணிக்கத்துவங்க ஒரு கட்டத்துக்கு மேல் இனி எந்த ஆள் நடமாட்டமும் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என்ற நிலையில் வந்து நின்றோம். என்ன செய்ய என்று திகைத்து நின்று சுற்றும் முற்றும் பார்க்க எங்கிருந்தோ முள் காட்டில் இருந்து இரண்டு பெண்மணிகள் வர அவர்களிடம் வழி கேட்க அவர் " அந்த ஆத்துக்குப்பக்கத்துல இருக்குங்க" என்று நாங்கள் ஏற்கனவே பிள்ளையார் கோவில் என்று கடந்து வந்த கோவிலின் அடையாளத்தைச் சொன்னார். இது என்னடா சோதனை என்று உருகியபடி அந்த கரடுமுரடான பாதையில் திரும்பி வந்து அந்தக் கோவிலுக்குள் நுழைந்தால் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது

No comments: