Saturday, July 3, 2010

விடைபெறுதல் குறித்தான வார்த்தைகள்

விடைபெறுதல் குறித்தான வார்த்தைகளை
விதம்விதமாய்
படைக்கத்துவங்கினேன்
கூர்தீட்டியும் மழுக்கியும்
வளைக்கவும் செய்தேன்
குயவன் கை மண்பானை என
வடிவம் கூடி வந்தன வார்த்தைகள்
மிருதுவாய், தூறலாய், மிடுக்காய்
அடுக்கடுக்காய் மலர்ந்து விழுந்தன
தேன் தடவிய வார்த்த்தைகள்
ஒவ்வொன்றாய் கையளிக்கையில்
பொருத்தமாய் சென்று சேர்ந்த்தது

உன்முறை வந்தபோது
உனக்கான ஓர் வார்த்தை
என்னோடு இல்லாது போயிற்று
தொலைந்த வார்த்தைகளை
தேடும் திராணியற்று
சிறிதே நிம்மதியோடு
விடைபெறாமலே போகிறேன்.


எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காது, எழுதத்தூண்டும் நாட்களில் எழுத நினைப்பதை சமரசங்களற்று எழுதிக்கொள்வதற்கும் அசை போடவேண்டியவற்றிலிருந்து சிலவற்றை உரக்க அசைபோட்டுக்கொள்வதற்கும் மட்டுமே நான் பயன்படுத்திய என் வலைப்பக்கத்தில் தமிழ்மணத்திற்காக நான் எழுத நேர்ந்த இந்த ஒரு வார காலங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை வியப்போடு நானே வேடிக்கை பார்க்க கிடைத்த சந்தர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

உற்சாகத்தோடு கூட வந்த தோழமைக்கும் அங்கீகரித்த தமிழ்மணத்திற்கும் நன்றி


5 comments:

bogan said...

அற்புதம்

ராம்ஜி_யாஹூ said...

நன்றிகள் உங்கள் பகிர்விற்கு,
வாசிக்கும் எங்களுக்கும் மகிழ்வை தந்தது உங்களின் எழுத்துக்கள்.

மீண்டும் ஒரு நட்சித்திர வாரத்தில் இதே திங்கள் முதல் ஞாயிறு வரை சந்திப்போம்

nimmie said...

Very good. I liked it.Amal

butterfly Surya said...

அருமை. அற்புதம்

வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

\\\தொலைந்த வார்த்தைகளை
தேடும் திராணியற்று
சிறிதே நிம்மதியோடு
விடைபெறாமலே போகிறேன்.///

ஆமாம் .
இப்படி சில
முற்றுப் பெறாத
கவிதைகள்
ஏங்கிக் கிடக்கும்
எல்லோரிடமும்.
தூக்கச் சொல்லி
கை நீட்டி அழும்
சிறு குழந்தையைப் போல.