Saturday, April 10, 2010

மனவெளியில் சில வார்த்தைகள்

ஊரெங்கும் பூத்திருக்கும்

மின்விளக்குகளை விட

எங்கோ ஓர் மூலையில்

மினு மினுக்கும்

ஒற்றை சிம்மினியின் ஒளி

மிக நெருக்கமாய்

உணர்த்துகிறது

தனிமையை

நிராகரிப்பை

மற்றும்

உன்னிருப்பை

**************************************

சொற்களில் வழிந்தோடுகிறது

களிப்பு, காமம் காதல் மற்றும் கடமை

சர்ப்பம் உரித்த சட்டை போல்

உள்ளே கேட்பாரற்றுக்கிடக்கிறது மனது

6 comments:

பாச மலர் / Paasa Malar said...

//சொற்களில் வழிந்தோடுகிறது களிப்பு, காமம் காதல் மற்றும் கடமை சர்ப்பம் உரித்த சட்டை போல் உள்ளே கேட்பாரற்றுக்கிடக்கிறது மனது//


அழகான வார்த்தைப் பிரயோகம் கிருத்திகா...

அண்ணாமலையான் said...

super...

ஜீவி said...

பிரசுரத்திற்கல்ல

சட்டை உரிந்த சர்ப்பம் போல்..

என்றால், பொருத்தமும், அழகும் இன்னும் கூடி வருமோ?..

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஜீவி மன்னிக்கவும். பிரசுரத்திற்கல்ல என்று சொன்ன பிறகவும் பிரசுரித்தமைக்காக..

நான் உருவகிக்க நினைத்தது பாம்பின் சட்டையை என்பதினால் அந்த வரிகளை உபயோகிக்க முனைந்தேன்.

தாங்கள் சொல்வதுகூட வேறு ஒரு வகையில் சரியாகத்தான் வரும்..

வாசிப்பின் பன்முகம் அது தானே..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பனித்துளி சங்கர் said...

/////////சொற்களில் வழிந்தோடுகிறது களிப்பு, காமம் காதல் மற்றும் கடமை சர்ப்பம் உரித்த சட்டை போல் உள்ளே கேட்பாரற்றுக்கிடக்கிறது மனது//////////


மிகவும் அழகான சிந்தனை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .