Wednesday, January 6, 2010

முகமூடிக்கவிதைகள் - 10

மெல்லிய திரையொன்று
இருவருக்குமிடையே
தொட்டுப்பார்த்தால்
சில்லிடத்துவங்க
பேணி வளர்த்தோம்
பேரிரைச்சலோடு
பெருகி வழிந்தது அருவி

நீர்மைதானே
நீர்மை
தானே பனிக்கத்துவங்கியது
படர்ந்து இருகியது
பெரும் பனித்திரையாய்
உடைக்க மனதின்றி
பார்த்திருந்த வேளையில்
இருமை புகுந்து உள்ளே
உழலத்துவங்கியது

ஒரு நாள் பலநாள்
பகலவன் செய்ய
ஏதுமில்லாத போதும்
அசையாது நின்ற திரையை
அகத்திரை விலக்கி
உறுத்துபார்த்தில்
அறுந்து, சிதைந்து போனது

சுற்றிலும் நீர்க்கோலம்
நீர்க்கோளம்
சுகமாய் கால் தழுவ
நின்று சிரித்தது
சிலிர்த்தது
உள்ளும் புறமும்.

8 comments:

Tharshy said...

ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துகள்..:)

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

VELU.G said...

//சுற்றிலும் நீர்க்கோலம்
நீர்க்கோளம்
சுகமாய் கால் தழுவ
நின்று சிரித்தது//

கவிதை நன்றாக இருந்தது.
சிரிக்குமா? அழுமா?

கலையரசன் said...

அருமைய்யா.. அரும!!

நேசமித்ரன் said...

கவிதை நல்லா இருக்குங்க

வார்த்தை விளையாட்டும்

நட்புடன் ஜமால் said...

வார்த்தை விளையாட்டுகளுடனான இந்த கவிதை அழகு.

"உழவன்" "Uzhavan" said...

ரசனை

Kavinaya said...

கவிதை அழகு!