Saturday, September 26, 2009

முகமூடிக்கவிதைகள் - 9

உடுப்பிட்ட வார்த்தைகளை
உப்பிட்டு நீர் வார்த்து வைத்தேன்
என்றேனும்
நிஜமுணர்த்தக்கூடுமென்று.

***********

யாரோடும் பேசவியலாத
வார்த்தைகளை
மௌனக்கரைசலில்
கரைக்கத்துவங்கினேன்
நீர்த்துப்போன கரைசலின்
நிறம் மட்டும்
மாறியபடியே உள்ளது.


***********

ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சியாடும்
வார்த்தைகளின்
களியாட்டத்தின்
முடிவில் நின்றிருக்கும்
உண்மை

6 comments:

சென்ஷி said...

:-)

பதிவுல இந்த மாசக் கோட்டா ஓவர் ஆகிடுச்சா!

Ashok D said...

:)

நேசமித்ரன் said...

:>

Nice

தேவன் மாயம் said...

ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சியாடும்
வார்த்தைகளின்
களியாட்டத்தின்
முடிவில் நின்றிருக்கும்
உண்மை///

உண்மை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

யாரோடும் பேசவியலாத
வார்த்தைகளை
மௌனக்கரைசலில்
கரைக்கத்துவங்கினேன்
நீர்த்துப்போன கரைசலின்
நிறம் மட்டும்
மாறியபடியே உள்ளது.

க்ளாஸ்!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட வர்றீங்க மேடம் :)

velji said...

வார்த்தைகள் வேடம் கலைக்கப்படும் என்ற நம்பிக்கையில் 'மெளனம்' காத்திருக்கிறது.பெரும்பாலும் வார்த்தைகளின் களியாட்டங்கள் ஓய்வதில்லை.வேறோர் ஆள்பிடித்து relay race போல் களிஓட்டம் ஓடுகிறது!

கவிதைகள் அருமை.மெளனத்தை போல.