Monday, May 11, 2009

வா வாவென அழைக்கும் காடு

பிள்ளைகளுக்கு லீவு விட்டாச்சு, பெரியவன் 12 வது செல்கிறானென்றாலும் இடையில் ஒரு 20 நாட்களுக்கும் மேல் விடுமுறை கொடுத்துள்ளார்கள் பள்ளியில். பள்ளி வகுப்புகள் தவிர வேறு வகுப்புகளுக்குச்செல்லாததாலும். உள்ளங்கையும் காலும் அரிக்கத்துவங்கிவிட்டது எங்காவது சென்று வரலாமென்று மனதும் சதா புலம்பத்துவங்கியது.

திடீரென்று மே 1 வெள்ளி காலை சரி கிளம்பலாம் என்று முடிவானது. எங்கு செல்லலாம். கிட்டத்தட்ட 2 வருஷமா போகனும்னு சொல்லிகிட்டிருந்த ஒரு இடம் இன்னம் போனபாடில்லை அதனால

கொல்லி மலை – எல்லா ஹோட்டல்களுக்கும் தொலைபேசினால் ஒன்றில் கூட தங்குவதற்கு இடமில்லையாம் (எல்லாரும் எங்களைப்போலவா இருப்பாங்க முன்கூட்டியே 3 நாட்களுக்கு பதிவு செய்து விட்டார்களாம்)

சரி வால்பாறைக்குச்செல்லலாம் வழியில் எங்கா
வது தங்கிவிட்டு ஞாயிறன்று அங்கு செல்வது போல் அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவானது. மதியத்திலிருந்து அறைகிட்டும் என்று சொன்னதால் வால்பாறைதான் என்று கிளம்பியாச்சு.

திண்டிவனம் தாண்டியதும்தான் ரெங்கமணி மசினகுடி போனா என்ன என்று கேள்வியெழுப்பினார். ட்ரக்கிங், மரவீடு, இரவுநேர
சபாரி என்று அங்குள்ள வசதிகளைச்சொன்னதும் பிள்ளைகள் ஓட்டு மசினகுடிக்கே விழுந்தது. சரி மசினகுடி என்று முடிவாகி வண்டி சேலத்தை நோக்கி திரும்பியது. உளுந்தூர்ப்பேட்டை, ஆத்தூர் சாலை ஒரு 80 கிலோமீட்டர் தூரைத்தை கடப்பதற்குள் நொந்து நூடுல்ஸ் ஆனோம். ஒருவழியாக இரவு 11 மணிக்கு சேலத்தை அடைந்து அங்கு ஒரு வழியோர விடுதியில் தங்கிவிட்டு விடியற்காலையில் கிளம்பி ஊட்டி ஒரு நாள் பிறகு மசினகுடி என்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஊட்டியில் வழக்கமான ஹோட்டலில் இடம் கிடைத்தபாடில்லை ஆனால் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் சிபாரிசின்
பேரில் கொஞ்சம் சுமாரான ஒரு விடுதியில் அறைகிடைத்தது சரி ஒரு நாள் தானே சமாளித்துக்கொள்வோம் என்று தங்கிவிட்டோம்.

நாங்கள் தங்கிய அறையிலிருந்து ஊட்டி...







கூட்டம் கூட்டம் கூட்டம் வேறென்ன। அப்படி ஒரு கூட்டம் கூடவே அங்குள்ள போக்குவரத்து நெறியாளர்கள் செய்யும் கெடுபிடியில் பக்கத்தில் இருக்கும் தெருவிற்குப்போய் வரக்கூட 3 கிலோ மீட்டர் சுற்றவேண்டிய நிலமை.

போக்குவரத்து நெரிசல் ஒரு காட்சி

சரி வந்ததுக்கு போட்டிங்காவது போகலாம்னு போனோம். அப்புறம் அங்குள்ள வேக்ஸ் ஹவுஸ் சென்று பார்த்தோம் உண்மையில் மிகவும் நன்றாகவே உள்ளது. அதுவும் ஒருசிலரின் சிலை மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது.

ஆனாலும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஞாயிறு காலையே மசினகுடியை நோக்கி வண்டிகட்டிவிட்டோம்


அங்கே போனால் மிகப்பெறும் ஏமாற்றம் சென்னையை விட வெயில் சற்று கூடுதலோ என்று எண்ணும்படி அத்தனை வெயில். ரிசார்ட்டுகளில் மதியமானதால் இடமிருந்தது ஆனால் இந்த வெயிலில் அங்கு தங்கி என்னசெய்யப்போகிறோம் இரவு ஒரு வேளை குளிரடித்தாலும் அடிக்கலாம் என்று எதிர்பார்த்து ரிசார்ட்டுகள் கேட்கும் பைசாவை செலவிட மனமில்லை..

சரி அடுத்து எங்கே என்று கேள்வி எழும்பொதுதான் சட்டென்று தோன்றியது வயநாடு எண்ட அம்மே எந்து பறயாம் ஆ அனுபவத்தினே. பட்சே தீர்ச்சயாட்டு பறையனும்.. அதுகொண்டு பின்ன பறயாம்……

8 comments:

சந்தனமுல்லை said...

சுவாரசியம். போக்குவரத்து நெரிசல் காட்சி சென்னையை நினைவூட்டுகிறது!

திவாண்ணா said...

அங்கே போய் காலார நடக்காம மக்கள் வண்டில போறாங்களா! அதான் நெரிசல்!
பேசாம ஏசி போட்டுகிட்டு வீட்டிலே இருக்கலாம். ஏறக்குறைய எல்லா சம்மர் ரிசார்ட்டும் மனுஷர்களால நிரம்பி வழியுது இந்த காலத்திலே!

அகநாழிகை said...

கொல்லிமலையில் பி.ஏ. கெஸ்ட் ஹவுஸ் மற்றும் நல்லதம்பி ரிசார்ட் என்ற இரண்டு தங்குமிடம் மட்டுமே உள்ளது. இது தொடர்பான எனது பதிவை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.
http://aganaazhigai.blogspot.com/2009/03/blog-post_3573.html

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பாச மலர் / Paasa Malar said...

ஊட்டிக்குப் போய் வந்த மாதிரி இருக்கிறது கிருத்திகா..மெழுகு பொம்மைகள் நேரில் பார்க்க ஆவலைத் தூண்டுகின்றன.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி முல்லை...
ஆமாம் திவா எல்லார்க்கும் வாகனத்தை விட்டு இறங்க மனதில்லை
நன்றி அகநாழிகை..ஏற்கனவே அந்தப்பதிவைப்பார்த்துதான் விபரங்கள் எடுத்து வைத்துக்கொண்டோம்..
வாங்க மலர்...தட்பவெப்பம் நல்லாத்தான் இருந்தது கூட்டம் தான் ஒத்துக்கலை.. வேக்ஸ் ஹவுஸ் ரொம்ப நல்லாருந்தது.. இன்னும் நிறைய புகைப்படம் இருக்கு.. ஆனா பதிவுக்கு ரொம்ப அதிகமாயிடும்னு கொஞ்சமா....:)

ஜீவி said...

பார்த்த அரசு வேலை நிமித்தமாக மூன்று வருடங்களுக்கு மேலாக குன்னூர், ஊட்டிப் பகுதிகளில் இருந்திருக்கிறேன். வருடம் பூரான எங்கள் வாழ்க்கை அனுபவிப்பே வேறே. குளிர்-மழை காலங்களில் ஒரு மாறுதலுக்காக சென்று பார்த்தால் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
நீண்ட காடுகளெல்லாம் மனிதன் இயற்கையைப் பங்கிட்டுக் கொண்ட
பிறகு, தரைப் பிரதேசங்கள் மாதிரி மாறிப்போய் விட்டதென்னவோ உண்மைதான்.

இருந்தும் இலையுதிர் காலங்களில் இந்த பிரதேசங்களின் யாராலும் அழிக்க முடியாத அழகே அழகு தான்!
தங்கள் பதிவு பழைய நினைவுகளைக் கிளறிவிட்டதும் வாஸ்தவம்.

gayathri said...

ஏனுங்கோ

படிக்க ரொம்ப சிரமமாயிருக்கே

கலர் மாற்றம் இயன்றால் செய்திடுங்களேன்

தினேஷ் said...

சுவாரசியம்...