Tuesday, April 7, 2009

கண்ணாடி

வெகு ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
இன்றைய நாட்களின்
மவுனத்தை உடைத்தெறியவே
விரும்புகிறேன்...

ஆனாலும்

உள்நோக்கி பார்க்கவும்
உணர்ந்தறியவும்
ஏதோ உள்ளதென்ற
உந்துதலுக்கு செவிசாய்த்து
என்னுள் ஆழ்கிறேன்
மிக நீண்ட தனிமையில்.

8 comments:

நட்புடன் ஜமால் said...

\\என்னுள் ஆழ்கிறேன்
மிக நீண்ட தனிமையில்\\

மிக அருமை.


(நீண்ட நாட்களுக்கு பிறகு)

gayathri said...

nallairukunga kavithai

சென்ஷி said...

:-)

கவிதையின் உள்குறியீட்டுத்தன்மை நல்லா வந்திருக்குது..

கண்ணாடி - கவித்துவம்

திவாண்ணா said...

கருத்து நல்லா இருக்கு. பொருத்தமான படமும்!

நம்பி.பா. said...

கவிதை நல்லா இருக்குங்க!

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஜமால்.. ஆமாம் கொஞ்சம் நாள் ஆகிவிட்டது தான்...
நன்றி காயத்ரி
@சென்ஷி... ஆமாம் கண்ணாடிக்கு அப்படி ஒரு தொடர்புண்டுதான்
நன்றி திவா...
நன்றி நம்பி...

ஜீவி said...

//உள்நோக்கி பார்க்கவும்
உணர்ந்தறியவும்
ஏதோ உள்ளதென்ற
உந்துதலுக்கு செவிசாய்த்து
என்னுள் ஆழ்கிறேன்
மிக நீண்ட தனிமையில்..//

--கிருத்திகா

மெளனத்தின் பயன்பாடு உணர்வதின் வெளிப்பாடே; சமூக வளர்ச்சிக்கான பங்களிப்பே. அது இறைவன் கொடுத்த வரம்.

அதனால் இப்படி மாற்றி யோசிக்கலாமே என்று தோன்றுகிறது..

//ஆனாலும்,
வெகு ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
இன்றைய நாட்களின்
மவுனத்தை உடைத்தெறியவே
விரும்புகிறேன்.../

--கிருத்திகா

தினேஷ் said...

வெகு ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
இன்றைய நாட்களின்
மவுனத்தை உடைத்தெறியவே
விரும்புகிறேன்.../

Super........