Wednesday, August 13, 2008

போதை


பிரஞ்ஞையற்று கிடக்குது

உலகம்

விழுந்து கிடக்கும்

குடிகாரனைப்போல

சுற்றிலும்

குப்பை கூளம்

அவமானம் ஆக்ரமிப்பு

அன்பு அலட்சியம்

துரோகம் நட்பு

மற்றும்

காமம்.


14 comments:

ஜோசப் பால்ராஜ் said...

பிரஞ்ஞையற்றா அல்லது தன் வேலைகளில் மட்டும் கொண்டுள்ள அதீத பிரஞ்ஞையாலா எனத் தெரியவில்லை.

கவிதை நல்லா இருக்கு.

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் பக்கத்தின் முகப்பில் உள்ள படம் கல்லணை தானே?

anujanya said...

நன்று கிருத்திகா. நிதர்சனம்.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

"பிரஞ்ஞையற்றா அல்லது தன் வேலைகளில் மட்டும் கொண்டுள்ள அதீத பிரஞ்ஞையாலா" இதுவும் ஒருவகை பிரஞ்ஞயற்ற நிலை என்று தானே அர்த்தம்.....

ஆமாம் அது கல்லணைதான் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி அனுஜன்யா...

MSK / Saravana said...

அதேதான்..
அழகான நறுக்கென்ற உண்மை..
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

அன்புடன்.
ஜோதிபாரதி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க சரவணகுமார், ஜோதிபாரதி...
கவிஞர்களே வந்து நல்லாருக்குன்னு சொல்லும்போது கொஞ்சம் உற்சாகமாத்தான் இருக்கு... நன்றி..

ஜோசப் பால்ராஜ் said...

எங்க ஊரு கல்லணையில இருந்து 10 கி.மீ தூரம்தாங்க. நீங்க எந்த ஊரு?

Unknown said...

//நட்பு மற்றும் காமம்.//

இவை இரண்டுமெ உங்கள் வரைவிலக்கணப்படி ஓரளவு ஏனும் கிடைப்பது

//பிரஞ்ஞையற்று கிடக்கு// ம் உலகத்தில் தான் அருமையான கவிதை வாழ்க்கையை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்


நட்புடன்
எஸ்.சத்யன்

sury siva said...

சுதந்திர குடிமகனே !
எழுந்து வா !!
நாளை
சுதந்திர தினம்.
bar க்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என‌ போற்றிப் பாடிடலாம் வா.

சுப்பு
தஞ்சை.P

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஜோசப் - எனக்கு ஊர் திருநெல்வேலிப்பக்கம். ஆனா கல்லணை பற்றிய ஒரு பெரும் தாக்கம் உண்டு அதனால்தான் கல்லணை.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க சாத்தியன்.. நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

சூரி சார் நீங்களே இப்படி சொல்லலாமா...கொஞ்சம் வருத்தம் தான்!!!!