Thursday, May 15, 2008

அப்பா......


அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.

இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும் இருந்து விலக்காது ஊக்குவித்தவர். என்னை பொது நூலகத்திற்கு கூட்டிச்செல்வார் அவர் படிப்பதோ தினசரிகள் நானோ அங்குள்ள சிறுவர்/பெரியவர் புத்தகங்களை முழுவதும் மேய்ந்து வரும் வரை மிகப்பொறுமயாக காத்திருப்பார். ஒரு நாள் கூட காத்திருத்தலுக்காக அலுத்துக்கொண்டதே இல்லை. என் சிறிய கிராமத்தில் 8 வயதுப்பெண் சைக்கிள் ஓட்டியதென்றால் அது நானாகத்தான் இருக்கமுடியும். அதுவும் அப்பாவின் சைக்கிளில் குரங்குப்பெடல் கவலையே படாமல் கடைத்தெரு வரைக்கும் சுற்றத்தருவார். (இது நினைவுக்கு வந்த நாளிலிருந்து தான் நான் என் மகனை நம்பி என் ஹோண்டா ஆக்டிவாவை குடுக்க ஆரம்பித்தேன்). பால்யம் தாண்டி வளர்ந்த பெண்ணாகிய போது கூட நானும் அப்பாவும் ஒன்றாகவே கடைத்தெருவில் சுற்றுவோம். மாரியப்பன் கடை அல்வாவும் அதன் தித்திப்பை சரி பண்ண கொஞ்சமே கொஞ்சம் காரபூந்தியோ மிக்சரோ கடை வாசலிலேயே சுடச்சுட அப்பாவும் பெண்ணுமாய் நின்றும் சாப்பிட்டவர்கள் நாங்களாய்த்தானிருப்போம்.

என் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி “நீ தைரியமா அடிச்சிட்டு வா நான் பார்த்துக்கறேன் எவன் ஒன்னைக்குத்தம் சொல்றான்னு” என்று எனக்கு பிரச்சனையான நேரங்களில் அறிவுரை?? கூறுவார். கல்யாணம் வரை எந்த ஒரு விஷயத்திலும் எனக்கும் அவர்கும் முரண் வந்ததே இல்லை, நானே தேர்ந்தெடுத்த வரனில் அவர்க்கு சிறிதே அதிர்ச்சி இருந்தாலும் பிறகு தன்னை சமாதனம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் அவர் உடல்நிலை காரணமாக அவரை தனித்து விடாதது மட்டுமே நான் அவருக்கென செய்ததாயிருக்கும். சகோதரிகளுக்குள் எந்த வேறு பாட்டையும் காண்பித்ததில்லை என்றாலும் நான் எப்போதுமே அப்பா செல்லம். அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன் என்று சொன்னால் அது வெறும் வாய்வார்த்தை இல்லை. என் வீட்டுக்கதவின் சாவி எது? என் பையனின் சைக்கிள் பூட்டும் பூட்டு எது? முன் வாசல் கேட்டின் சாவி எது? இப்படி என் வீட்டின் பாதுகாப்பிற்கான எந்த முஸ்தீபுகளும் அவர் இருந்த வரை நான் அறியாதது.

இன்று நான் என் புதிய வீட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் எத்தனையோ விஷயங்களை அப்பா மட்டும் இருந்திருந்தால் என்று எண்ணுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர் தனக்கான தடயங்களை எங்களோடே விட்டுச்சென்றிருக்கிறார்.

அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள்

21 comments:

ஜீவி said...

நினைவுகள் நித்தியமானவை.. அதுவும் அப்பாவைக்குறித்த நினைவுகள்...

ரசிகன் said...

என்னாச்சு எங்க போனாலும் எல்லாருமே இப்டி செண்டியாவே எழுதி ரெம்ப பீல் பண்ண வைச்சுடறிங்க.. நான் வீட்டுக்கு மறுபடியும் போன் பண்ணி அப்பா அம்மாக்கிட்ட பேசப்போறேன்:) வர்ட்டா..:)))

jeevagv said...

படித்தவுடன் மனதில் ஒரு நிறைவு ஆக்கிரமித்துக் கொண்டது!

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆம் ஜீவி இனிமையான உறவுகளின் தன்மையே அது தானே... வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி..

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஜீவா.. பூரணமான அன்பு மட்டுமே மிகப்பெரிய நிறைவைத்தர முடியும் அல்லவா...

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்ன ரசிகன் அப்பா அம்மா என்ன சொன்னாங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்களா...

பாச மலர் / Paasa Malar said...

எப்போது தொடர்ந்து வரும் நினைவு..இப்போது மட்டும் அப்பா இருந்திருந்தால் என்பது..எனக்கும் ஒவ்வொரு சமயத்திலும்..சில நேரங்களில் சற்றே அதிகமாக..ம்ம்

முஹம்மது ,ஹாரிஸ் said...

அருமை......
என் நாம் திருமண விசயத்தில் பெற்றோர்களை தவிக்க விடுகிறோம் என்று புரியவில்லை...
இந்த விசயத்தில் நாம் அவர்களுடைய உணர்வுகளை சிதைத்து விடுகிறோம்....

கையேடு said...

அருமையான விசயத்தை அருமையா சொல்லியிருக்கீங்க

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆமாம் பாசமலர் மிகவும் உண்மையான உணர்வுகள் பலராலும் ஒரே தளங்களில் உணர்ந்து கொள்ளப்படுபவை தானே...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி கையேடு.
வாங்க தங்கத்தமிழன் அப்போது எப்போது நாம் தனித்துவமாக உணரத்தலைப்படுகிறோமோ அப்போது இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கமுடியாததாகிறது. அது அந்த வயதில் அப்படித்தான் ஆகும் போல இருக்கு. (இப்படித்தான் நாம் சமாதானம் கொள்ளவேண்டும் ஏனெனில் நம் எதிரிலும் அடுத்த தலைமுறை வளர்ந்துகொண்டிருக்கிறதே)

முஹம்மது ,ஹாரிஸ் said...

காதல் திருமண விசயத்தில் நம்முடிய மக்களிடம் சரியான் புரிதல் இல்லை. நிறைய பேர் பெற்றோர்களை மனத்துக்கு பங்கம் விளைவித்து விடுகிறார்கள்..
அதனால் நான் அது செய்பவர்கள்ளுடணும் அது இடம் ஒரு அபரிவிதம்மாந தொலைவு மேற்கொள்ளுகிறான்....
என்ணாக்கு இது சரிய தவற என்று தெரியாது. ஆனால் பெற்றோர்களின் மனம் மரியாதை ஊசுறு மாறி

இரண்டாம் சொக்கன்...! said...

அப்பாக்களை பெண்கள்தான் கொண்டாடுகிறார்கள். அப்பாக்களும் பெண்களைத்தான் கொண்டாடுகிறார்கள்.

நாங்கல்லாம் அம்மா செல்லம்...

:-)

Uma said...

மிக‌ச்ச‌ரி!எல்லா அப்பாக்க‌ளுக்கும் பொருந்தும்

நிலாரசிகன் said...

//அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள்//

அந்த ஆயிரம்கதைகளுக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.

Prasanna Parameswaran said...

ungal padhivil mudhal murai pinootam idugiraen. appavai patriya ninaivugalai azhagai thoguthuleergal.

oruvanidam miga siriya kavidhai sol endraargal - "thaai" endraan.

sari miga perum puthagam sol endraargal - "thandhai" endraan

perumbaalanavargalin vaazhkaiyil undhudhalum ursagamamum alippadhu appadhadhaan!
- nandri, prasanna

மங்களூர் சிவா said...

ரொம்ப ஃபீல் பண்ணி எழுதிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க சிவா என்ன செய்ய சில உறவுகள் உணர்ச்சிமயமானது தான்.

அகரம் அமுதா said...

///இன்று நான் என் புதிய வீட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் எத்தனையோ விஷயங்களை அப்பா மட்டும் இருந்திருந்தால் என்று எண்ணுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர் தனக்கான தடயங்களை எங்களோடே விட்டுச்சென்றிருக்கிறார்.///


மொழி துணைவர மறுக்கிறது. மௌனமாக இருந்துவிட்டுப் போய் விடுகிறேனே!

Vijayananth Somasundaram said...

இன்னும் எழுதுங்க

Vijayananth Somasundaram said...

இன்னும் எழுதுங்க