வெகு ஆழத்தில் சிக்கியிருக்கும் சிக்கலான ஒரு நூல் கண்டின் ஒரு முனை மட்டும் அவ்வப்போது வெளிவருகிறது.
கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி இத்தனை வருடம் உள்ளூரிய உணர்வுக்குவியலுடன் ரணமாய் நிணமாய் வெளிக்கிடும் நிமிடங்களில் நம் காதுகளை விட மனமே அதி வேகமாய் செயல் படுகிறது.
சொற்களை தாண்டி உள்ளிருக்கும் முதிய மனத்தின் குகை இருட்டு வாழ்வில் நமக்கு எதையெதையோ சொல்லித் தருகிறது.
இன்று பௌர்ணமி, கூடவே சந்திர கிரஹணம். உடலில் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனிக்க முடிந்தது. சுற்றிலும் இருக்கும் மனிதர்களை காணும் பொழுது ஒரு சிறிய இயல்பின்மை நூலிலும் மெல்லிய கோடாய் பரவியிருப்பது போல் தோன்றியது. அதிக வெய்யில், வெக்கை ஜாஸ்தி என்று ஆயிரம் காரணம் சொல்லிகொள்ள இருந்ததுதான்.
மேலும் இது வெறும் என் தோன்றலாய்க்கூட இருக்கலாம்தான்

4 comments:
//கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி ..//
ஆக இது அல்மைசர் இல்லை..
இதுவும் அல்சைமர் வகைதான் என்று சொல்கிறார்கள் ஜீவி. (டெமென்ஷியா என்று கூட சொல்லுவார்களாம்) அவரது ஒரு சில ஆரம்ப கால நினைவுகள் மட்டுமே அவ்வப்போது ஞாபகம் வருகிறது. நீங்க எப்படி ப்ளாக் வாசிக்கறீங்க எந்த feed reader மூலம் புது பதிவுகளை தெரிஞ்ச்சுகறீங்க ??
என்னுடைய ரீடிங் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே இயல்பாகவே உங்கள் பதிவுகள் அத்தனையும் நீங்கள் வெளியிட்டவுடனேயே எனக்கு வந்து சேர்ந்து விடுகின்றன.
சமீபத்தில் கிட்டதட்ட 20 பதிவுகள் போட்டு அசத்தியிருக்கிறீர்களே..
அல்மைசரைப் பற்றி நிறைய கலந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை வாய்ப்பு கிடைக்கும் பொழுது செய்கிறேன். கடந்த இரு மாதங்களாக புத்தக பதிப்பு வேலைகளில் மூழ்கி விட்டதால் மற்ற வேலைகளில் சுணக்கம் கண்டிருக்கிறது. இரு வாரங்களில் சரியாகி விடும் என்று எண்ணுகிறேன்.
Post a Comment