Wednesday, February 25, 2009

புனைவு அனுபவம் மற்றும் ஒன்றுமில்லாதது....


நானொரு எழுத்தாளினி என அறிமுகப்படுத்தியும் அவரிடம் எந்த ஒரு பெரிய எதிர்வினையும் இல்லாத்தது கண்டு எனக்கு வருத்தம் தான். ஆனாலும் என் தன்முனைப்பு எடுத்த காரியத்தை முடித்தே விடுவது என்ற புள்ளியில் குவிந்திருந்ததால் அந்த வருத்தத்தை தள்ளி நகர்த்திவிட்டு நானொரு புனைவு எழுதவேண்டுமென்றும், அதற்கு அடிப்படையான அனுபவ அறிவின்றி என்னால் புனைவெழுத முடியாதென்றும் அவருக்கு விளக்க வேண்டியிருக்குமோ என்று எனக்குத்தோன்றியது. ஆனால் அவர் அதற்கான வழியொன்றையும் தேடவைக்காமால், சொல்லுங்க என்று மட்டுமே சொன்னார்.

ஒரு நாளில் எத்தனை முறை நீங்கள் பின்னோக்கி போகவேண்டியிருக்கும்? அந்த அனுபவம் எப்படியிருக்கும் அப்போது தாங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள் இதையெல்லாம் நான் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், முடிந்தால், தாங்கள் அனுமதித்தால் தங்களோடு ஒரு நாள் கூடவே வந்துபோகவும் ஆசையாயுள்ளது என்று சொன்னதும், அவர் என்னை ஏதோ வேற்றுகிரகத்து ஜந்து போல பார்த்தார்.


இங்க பாரும்மா இதொன்னும் நீ நினைக்கறாமாதிரி
ஆராய்ச்சி பண்ணவேண்டிய விஷயமெல்லாமில்லை.

இன்ஞ்சின் கேபின்ல ஏறி உக்காந்தா வண்டி முன்னயோ பின்னயோ போகும், முன்னாடி போனா ஸ்டேஷனெல்லாம், சீக்கிரம் கண்ணைவிட்டு போயிடும். வண்டி திரும்பி போகும் போது பின்னாடி இருந்தா ஸ்டேஷனெல்லாம் ரொம்ப நேரத்துக்கு கண்ணுல தெரியும் அவ்ளோதான். ஆங் அப்புறம் முன்னாடி போகும்போது மனுசங்களை ரொம்ப பக்கத்துல டிராக்குல பார்த்துட்டா அந்த டிரிப் கொஞ்ச நேரத்துக்கு பேஜாராயிடும், பின்னாடி உக்கார்ந்து இருந்தா அந்தக்கவலையில்லை அவ்ளோதான். வேற ஒன்னும் இல்லை. வர்ட்டா.. என்ற படி நகர்ந்து போனார்.


எனக்கு மிகவும் ஏமாற்றமாய் ஆனது இவ்ளோதானா இதுக்கு மேல ஒன்னும் இல்லையா.


நான் பேசியது ஒரு மின்சார தொடர் வண்டியின் ஓட்டுநரிடம் என்று உங்களுக்கு புரிந்துவிட்டது தானே.


12 comments:

நட்புடன் ஜமால் said...

அழகாயிருக்கு சொல்லியிருக்கும் விதம்

www.narsim.in said...

“பின்” நோக்கிய நவீனத்துவம் அருமை..

பாச மலர் / Paasa Malar said...

கிருத்திகா..

எங்கேயோ ஆரம்பித்து எங்கோயோ போன மாதிரி தோன்ற ஆரம்பித்த நேரத்தில் நீங்கள் வைத்த புள்ளியில் குவிந்து வந்தது எண்ணம்..

//எனக்கு மிகவும் ஏமாற்றமாய் ஆனது இவ்ளோதானா இதுக்கு மேல ஒன்னும் இல்லையா.//

நிறைய விஷயங்கள் அனுபவிக்கும் வரை புதிர்தான்..அப்புறம்தான் இப்படித் தோன்ற ஆரம்பிக்கும் இல்லையா...

சின்ன ஒரு அனுபவத்தை அதோடுனான எண்ணங்களை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

திவாண்ணா said...

படத்த பாத்ததுமே புரிஞ்சு போச்சு!
ஆனா எனக்கும் ஒரு க்யூரியாஸிடி இருக்கு. பின் பக்கமா ட்ராக்கை பாக்காமலா ஓட்டறாங்க? பயமா இருக்காது? எங்கே எப்போ நிறுத்தனும்ன்னு எப்படி தெரியுமாம்? இதெல்லாம் இன்னும் தானியங்கி ஆகலையே?

sury siva said...

//இன்ஞ்சின் கேபின்ல ஏறி உக்காந்தா வண்டி முன்னயோ பின்னயோ போகும், முன்னாடி போனா ஸ்டேஷனெல்லாம், சீக்கிரம் கண்ணைவிட்டு போயிடும். வண்டி திரும்பி போகும் போது பின்னாடி இருந்தா ஸ்டேஷனெல்லாம் ரொம்ப நேரத்துக்கு கண்ணுல தெரியும் //


மனித வாழ்வின் அடிப்படை தத்துவமே இதுவல்லவோ !

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் இஞ்சினாக செயல்படும்போது, குடும்பம் முழுவதுமே
உங்கள் இயக்கத்தைப் பொருத்து முன்னேயோ பின்னேயோ போகிறது.

குடும்பத்தில் உள்ளோர் எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிப்போய், குடும்பத்தலைவர் ஒருவர் செல்லும்போது வெகு விரைவில் அவர்கள் அவரது எண்ணங்களிலிருந்தும்
விடுபட்டுப் போகின்றனர்.

குடும்பத்தின் எல்லா நபர்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே, அவர்கள்
நலனை முன் வைத்துத் தான் பின் நின்று இயங்குபவர், இயக்குபவர், தனக்கும் மன‌
நிம்மதி பெறுகின்றார், தம்மை நம்பி உள்ளோரையும் நல்ல வழிகளில் செயல்படுத்துகிறார்.

எஞ்சின் இயக்குனர் உதாரணம் வெகு பொருத்தம்.

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூஎஸ்.ஏ.
http://menakasury.blogspot.com
http://ceebrospark.blogspot.com

nagai said...

அவர் கஷ்டம் என்னவோ...?

Sanjai Gandhi said...

//நான் பேசியது ஒரு மின்சார தொடர் வண்டியின் ஓட்டுநரிடம் என்று உங்களுக்கு புரிந்துவிட்டது தானே.//

நல்லவேளை.. புரியாமலே போய்டுமோன்னு பயந்தேன்.. :))

priyamudanprabu said...

அழகாயிருக்கு சொல்லியிருக்கும் விதம்

கிருத்திகா ஸ்ரீதர் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ட்ரெயின் படத்தை பார்த்தவுடனே புரிஞ்சிடுச்சி.

ஹி ஹி ஹி

நானொரு எழுத்தாளினி என அறிமுகப்படுத்தியும் அவரிடம் எந்த ஒரு பெரிய எதிர்வினையும் இல்லாத்தது கண்டு எனக்கு வருத்தம் தான். :)-

இது தான் இருக்கறதலயே ரொம்ப வருந்தத்தக்கது

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

உங்கள் முகமூடி கவிதைகளின் ரசிகன் நான்.

ரயில் பயணம் வி்னோதமான அனுபவம்.அந்த அனுபவத்தையே உங்கள் இடுகை ஆக்கிவிட்டது மேலும் வினோதமாய்

அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com

கபீரன்பன் said...

//வண்டி திரும்பி போகும் போது பின்னாடி இருந்தா ஸ்டேஷனெல்லாம் ரொம்ப நேரத்துக்கு கண்ணுல தெரியும் அவ்ளோதான் //

வாழ்க்கையிலும் கடந்து வந்த பாதையையே நினைத்து, நாட்கள் முன்னே போய்க் கொண்டிருந்தாலும் எண்ணங்களை பின் நோக்கியே வைத்து வாழ்பவர்கள் எத்தனை பேர் !.

சித்திரை புது வருடத்தில் எண்ணங்களையும் முன்னோக்கி செலுத்தி வெற்றி பயணம் மேற்கொள்ள தங்களுக்கும் தங்கள் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்