பிப்ரவரி 14 எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள் கேள்வியை எழுப்பியது என்ன ஆச்சு எனக்கு? எனக்குள் காதல் செத்து விட்டதா.... தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை.... ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை. மிக மெல்லிய காதல் கவிதை.
எப்போதும் கனவுகளில்
பார்த்தேயிராத தெருக்களில்
பயணித்திருக்கிறேன்
ஓட்டியே இராத கார்களின்
வட்டுவம் பிடித்து
மைல்கணக்காய்
காரோட்டியிருக்கிறேன்
பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்தினரோடு
நானும் பறவையாய்
பறந்திருக்கிறேன்
மிதந்து செல்லும்
ஆற்றின் சுழிகளில்
சுழன்று வீழ்ந்திருக்கிறேன்
தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்
அதோடு கூட
உன்னோடும் இருந்திருக்கிறேன்
11 comments:
தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்
அருமை ...
எப்போதும் கனவுகளில்
உன்னோடும் இருந்திருக்கிறேன்
இடைச் செருகப்பட்ட வரிகள் அருமை.
மிக அருமையான வெளிப்பாடு.... ரசித்தேன். :-)
அழகா இருக்கு கிருத்திகா...
மீண்டும் ஒரு முறை என்னையே பார்க்க வைத்துவிட்டீர்கள் உங்கள் வரிகளில்..
நன்றி ஜமால், நம்மை மீண்டும் மீண்டும் அதிசயத்தில் ஆழ்த்துவது அது மட்டுமே யல்லவா.
நன்றி அமித்து அம்மா...
நன்றி மதுரையம்பதி.. இது இரசிக்கத்தக்கதாகத்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை உங்கள் மறுமொழியால் வருகிறது
மலர் இது எல்லாமே நாமனைவரும் கடந்து வரும் பாதைதானே... நன்றி...:)
ரொம்ப அழகான கனவு....
அன்புடன் அருணா
//மிக மெல்லிய காதல் கவிதை.//
உங்க கவிதை பற்றி நீங்களே அழகா சொல்லிட்டீங்க :) இதமா இருக்கு.
அருமை!
தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்
அருமை ...
Feb -14 / 2008
---------------
எப்போதும் போலவே
நானும் அவளும்
கொண்டாடி மகிழ்கிறோம்
காதலர் தினங்களை...
இம்முறையும் முகமறியாது,
தனித் தனியாக.
தனிமை....
------------
என் குரல் எனக்கே கேட்டதை
உள் மன விழிப்பென்றே எண்ணியிருந்தேன்.
பாதி இருக்கை மட்டும்
பள்ளமான பைக்,
எப்போது வாங்கினாய்
என்று அணிந்து கொண்டாய்
என எண்ண வைக்காத கொடி,
குறுக்கிலே படுத்தாலும் - வெளியே
கால் தெரியாத கட்டில்,
உபயோகப்படுத்தாத மாற்றுச் சாவி...
அஹ விழிப்பு அல்லடி அது,
பூட்டியே கிடக்கின்றதொரு
எதிர் வீட்டின் கதவைப் போல...
தொடர்பற்றுப் போனாலும் - தொடர்ந்தபடி கழிகின்ற
மற்றுமொரு நாளின்
தனிமை.
Post a Comment