ஆற்றொழுக்கின் இரு கரைகளுக்குண்டான
விகிதாசாரங்களில்
இறைந்து கிடக்கிறது வாழ்க்கை
ம் என்றோ
இல்லை என்றோ
மறுமொழிகளில்
கழிந்துபோகிறது
அன்றன்றைய நாட்கள்
வாழ்வை தேடவைக்கும்
சில சொற்கள்
ஆனால்
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை
முகமூடிகளின்
வாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்
வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்
21 comments:
ரொம்ப நல்ல சொல்லியிருக்கீங்க
வாழ்வை தேடவைக்கும்
சில சொற்கள்
ஆனால்
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை //
மிகவும் பிடித்த வரிகள்
முகமூடிகளின்
வாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்
வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்//
நிதர்சனமான உண்மை
வார்த்தைகளின் வார்ப்பு அருமை கிருத்திகா..அதனுடன் கூட கருத்துகளும் பின்னிப் பிணைந்து ...
பின்னிட்டீங்க..
//வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்.//
சும்மா சொல்லக்கூடாது,
அருமைங்க!
//வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்//
யதார்த்தம்....
கால ஓட்டத்தில், ஒட்டிக்கொண்ட முகமூடியை விட்டுவிட முடியாமல், வார்த்தைகளைத் தொலைத்து வாழ்க்கையைத் தேடும் மனிதர்கள்...
கவிதை அருமை கிருத்திகா.
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை..
Super
//ம் என்றோ
இல்லை என்றோ
மறுமொழிகளில்
கழிந்துபோகிறது
அன்றன்றைய நாட்கள்
//
"ம்"
அத்தனை வரிகளையும் ரசித்தேன் கிருத்திகா. குறிப்பாக
//முகமூடிகளின்
வாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்//
மிகச் சரி.
உங்களுக்காக ஒரு விருது இங்கே...
http://kurinjimalargal.blogspot.com/
இல்லை என்று எங்கே சொல்ல முடிகிறது..
//வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்//
ம்.. உண்மை தான்..
நன்றி அமித்து அம்மா... கவிதைகள் பெரும்பாலும் உணர்வுகளின் வெளிப்பாடு என்பதால் சில உணர்வுகள் பொதுவாகும்போது இரசனையும் ஒன்றாகிறது.
நன்றி மலர், ஆனாலும் உங்களைப்போல் நிகழ்வுகளை ஒட்டி என்னால் கவிதை புனையமுடிவதில்லை என்பதில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு.. தங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேணும் என்று நினைத்திருப்பதில் இதுவும் ஒன்று...
நன்றி ஜீவி.. நீங்களே சொல்லும்போது சந்தோஷமாயிருக்கு
"கால ஓட்டத்தில், ஒட்டிக்கொண்ட முகமூடியை விட்டுவிட முடியாமல், வார்த்தைகளைத் தொலைத்து வாழ்க்கையைத் தேடும் மனிதர்கள்..
உண்மைதான் சுந்தரா... சிலரது வாழ்வில் அப்படித்தான் நேர்ந்துவிடுகிறது
வாங்க கவின்... முதல்முறையா வந்திருக்கீங்க போலருக்கு...நன்றி....
நன்றி நர்சிம்.. இதைச்சொல்ல ஒரு எழுத்தில் வார்த்தையில்லை :)
நன்றி வண்ணத்துப்பூச்சியார்.
வங்க ராமலஷ்மி நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். நன்றி இசைந்து செல்வதற்கு...
சரவணகுமார்...இல்லை என்று எப்படிச்சொல்வது என்பதை ஒரு கலை என்று சொல்வார்கள். learn to say no and learn how to say no என்பது கார்ப்பரேட் உலக தாரக மந்திரம்.... :)
இன்று காலை 10.30 மணிக்கு வலச்சரம் வரவும்.உங்கள் கவிதைகளை என் நண்பர் படிப்பார்கள்! இன்னும் 4 பதிவர் கவிதைகளும் அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும்!
அவ்ற்றைப்படித்துவிட்டு கருத்துரை தரவும்,
தேவா..வலைச்சர முகவரி http://blogintamil.blogspot.com/
வாழ்க்கையைப் பற்றி வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
[I]வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்[/I]
[B]உண்மைதான்... நாட்கள் கழிதலை அநாயசமாகச் சொல்லிவிடுகிறீர்கள். கவிதை ஆரம்பம் முதல் முடிவு வரை முழுக்க எதையோ நினைவு தூண்டுவதாகவே அமைந்திருக்கிறது.[/B]
[B]வாழ்த்துக்கள்[/B]
Post a Comment